Latest Updates
-
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும்
கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
World Liver Day 2024: நமது உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான பெரிய உறுப்பாகும். இந்த கல்லீரல் நாம் உண்ணும் புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்கள் அனைத்தையும் நிர்வகிக்கின்றன. அதுவும் கல்லீரலானது உணவை செரிப்பது, இரத்தத்தை வடிகட்டுவது, வைட்டமின் டி-யை செயல்படுத்துவது, சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிப்பது மற்றும் பல அத்தியாவசிய சத்துக்களை சேமித்து வைப்பது போன்ற பல முக்கியமான பணிகளை செய்கின்றன. இவ்வளவு முக்கியமான வேலைகளை செய்யும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
கல்லீரல் ஆரோக்கியம் மற்றும் கல்லீரல் நோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19 ஆம் தேதி உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் கல்லீரலில் ஏற்படும் நோய்கள் மற்றும் அவற்றைத் தடுக்க மேற்கொள்ள வேண்டியவைகள் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்படும்.

இந்த உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு, கல்லீரலில் தேங்கும் அழுக்குகளை நீக்க ஒருவர் எந்த மாதிரியான உணவுகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால், இந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.
மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள் உள்ளது. இது கல்லீரல் செல்களில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்து, கல்லீரலில் படிந்துள்ள அழுக்குகளை திறம்பட வெளியேற்றும். அதற்கு தினசரி உணவில் மஞ்சளை சேர்ப்பதைத் தவிர, வெதுவெதுப்பான நீரில் மஞ்சளை சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, சிறப்பான பலனைப் பெறலாம்.
பச்சை இலைக் காய்கறிகள்
கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், தங்கள் உணவில் கீரைகள், முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் போன்ற பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இவற்றில் உள்ள பண்புகள் கல்லீரலில் உள்ள அழுக்குகளை எளிதில் வெளியேற்ற பெரிதும் உதவி புரிகின்றன. எனவே கல்லீரல் ஆரோக்கியத்திற்கு பச்சை இலை காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்து வாருங்கள்.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகளவில் இருப்பதை அனைவருமே அறிவோம். இந்த வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, கல்லீரல் மற்றும் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை திறம்பட வெளியேற்ற உதவுகின்றன. எனவே ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்டை போன்ற சிட்ரஸ் பழங்களை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள். இந்த வகை பழங்களில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கல்லீரல் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
பூண்டு
பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் உள்ளது. இது கல்லீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, கல்லீரலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவி புரிந்து, கல்லீரலை சரியாக செயல்பட உதவுகிறது. அதோடு பூண்டில் உள்ள செலினியம், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை அகற்ற பெரிதும் உதவுகிறது. அதற்கு பூண்டு பற்களை தினசரி உணவில் சேர்ப்பதைத் தவிர, காலையில் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வாருங்கள்.
க்ரீன் டீ
க்ரீன் டீ மிகவும் ஆரோக்கியமான பானங்களுள் ஒன்று என்பதை அனைவரும் அறிவோம். க்ரீன் டீ உடல் எடையைக் குறைக்க பயனுள்ளதாக இருப்பதால், நிறைய பேர் தினமும் க்ரீன் டீயைக் குடித்து வருகிறார்கள். ஆனால் இந்த க்ரீன் டீ கல்லீரலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கொழுப்புக்களை நீக்கி, கல்லீரல் ஆரோக்கியமாக செயல்பட உதவி புரியும் என்பது தெரியுமா? இதற்கு காரணம் அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆனடி-ஆக்ஸிடன்ட்டுகள் தான். எனவே கல்லீரல் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்க விரும்பினால், தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீயைக் குடித்து வாருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications