Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
World Health Day 2025: இந்த பழக்கங்கள் இருந்தால் உடனே கைவிடுங்க.. இல்ல விரைவில் மரணத்தை சந்திப்பீங்க...
World Health Day 2025: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 07 ஆம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் மக்களைப் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளைப் பற்றிய விழிப்புணர்வும் ஆங்காங்கு ஏற்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று உலக சுகாதார தினம் என்பதால், ஆரோக்கியத்தை சீரழிக்கும் சில பழக்கங்களை பட்டியலிட்டுள்ளோம்.
தற்போதை நவீன வாழ்க்கை முறையில் மக்களிடையே பல்வேறு மோசமான பழக்கங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த பழக்கங்கள் காரணமாக உடல் ஆரோக்கியமானது கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து, ஒரு கட்டத்தில் உயிரைப் பறிக்கும் அளவில் பெரிய ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. கீழே அப்படி ஆரோக்கியத்தை சீரழிக்கும் பழக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. உங்களிடம் இருந்தால், உடனே அவற்றைக் கைவிடுங்கள்.

1. மோசமான தோரணை
இன்று நிறைய பேர் உட்காரும் போது மோசமான தோரணையில், அதாவது வளைந்தவாறு உட்கார்வதால், முதுகு தண்டுவடம் வளைந்து சிதைவடைகிறது. ஒருவரது முதுகெலும்பின் அமைப்பு மாறினால், அது உடலின் நிலைத்தன்மை மற்றும் சமநிலையை பாதிக்கிறது. முதுகின் நெகிழ்வுத்தன்மையை குறைக்கிறது மற்றும் தசை ஏற்றத்தாழ்வுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.
2. கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது கையின் நிலை மோசமாக இருப்பது
தற்போது பெரும்பாலானோர் கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இப்படி வேலை செய்வதால் கண்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, கைகள் மற்றும் விரல்களில் வலி மற்றும் உணர்வின்மையை சந்திக்க நேரிடுகிறது. இது கார்பல் டன்னல் சிண்ட்ரோம் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.
இந்த சிண்ட்ரோம் கைகளில் உணர்வின்மை, கூச்சஉணர்வு, கை மற்றும் தோள்பட்டையில் வலி மற்றும் மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும். இது தீவிரமாகும் போது ஒரு கட்டத்தில் கைகளால் எந்த ஒரு விஷயங்களையும் செய்ய முடியாத அளவில் போய்விடும். எனவே எப்போதும் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் கைகளை சரியான நிலையில் வைத்து வேலை செய்வதோடு, அவ்வப்போது ஓய்வையும் கொடுக்க வேண்டும்.
3. அதிகமான ஜங்க் உணவுகளை உண்பது
தற்போது நம்மைச் சுற்றி ஏராளமான ஜங்க் உணவுகள் விற்கப்படுகின்றன. இந்த ஜங்க் உணவுகளில் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உப்பு அதிகமாகவும், செயற்கை சுவையூட்டிகளும், பதப்படுத்தும் பொருட்களும் இருக்கின்றன. இப்படிப்பட்ட ஜங்க் உணவுகளை அடிக்கடி வாங்கி உட்கொண்டால், அது உடல் பருமனை அதிகரித்து, சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே இந்த வகை உணவுகளை வாங்கி உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
4. அதிக மன அழுத்தம்
மகிழ்ச்சியற்ற வாழ்க்கை முறையானது மன அழுத்த ஹார்மோன்களை அதிகரித்து, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி, மெதுவான செரிமானம் மற்றும் உடல் பருமன் போன்றவற்றை உண்டாக்குகிறது. மன அழுத்தம் அதிகரித்தால், அதன் விளைவாக சரியான தூக்கத்தைப் பெற முடியாது, பாலியல் நாட்டம் குறையும், எரிச்சல், கோபம் போன்றவை அதிகரிக்கும்.
எனவே மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் தெரிந்தால், அவற்றைக் குறைக்க தியானம், யோகா, சுவாசப் பயிற்சி போன்றவற்றை தினமும் மேற்கெள்ள வேண்டும். முக்கியமாக குடும்பத்தினருடன் அவ்வப்போது சிறு பயணங்களை மேற்கொண்டு, அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். இப்படியான விஷயங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்.
5. அதிகப்படியான ஆல்கஹால்
ஆல்கஹால் ஒருவரது உடல் மற்றும் உணர்ச்சியில் மாற்றங்களை ஏற்படுத்தி, மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் அதிகளவு ஆல்கஹாலை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அது உடலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
6. புகைப்பிடிப்பது
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருமே புகைப்பிடிக்கின்றனர். இந்த சிகரெட் பழக்கம் 30 சதவீத இதய நோயால் ஏற்படும் மரணத்திற்கும், 30 சதவீதம் புற்றுநோய் மரணத்திற்கும், 80-90 சதவீதம் நுரையீரல் புற்றுநோய், வாய், தொண்டை மற்றும் பித்தப்பை புற்றுநோய் மரணத்திற்கும் காரணமாக உள்ளன. இப்படிப்பட்ட புகைப்பழக்கத்தை கைவிட்டால், புற்றுநோய், இதய நோய் போன்றவற்றின் அபாயங்களைக் குறைக்கலாம்.
7. வலிநிவாரணிகளை அதிகம் எடுப்பது
மக்கள் தங்கள் உடலில் ஏற்படும் வலிகளுக்கு மருத்துவரின் அறிவுரை இல்லாமலேயே இப்யூபுரூஃபன் அல்லது ஆஸ்பிரின் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். இப்படியான வலி நிவாரண மாத்திரைகளை நீண்ட காலம் எடுத்து வந்தால், அது அல்சர், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்றவற்றின் அபாயத்தை அதிகரித்துவிடும்.
அமைதிப்படுத்தும் மருந்துகள் மற்றும் தூக்க மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் எடுத்துக் கொண்டால், குழப்பம் மற்றும் தடுமாறி விழும் வாய்ப்புகள் ஏற்படும். எனவே எந்த ஒரு மாத்திரைகளையும் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எடுக்காதீர்கள்.
8. காலை உணவை தவிர்ப்பது
காலை உணவு என்பது ஒரு நாளில் மிகவும் முக்கியமான உணவாகும். இந்த உணவின் போது தான் நாள் முழுவதும் தேவையான ஆற்றல் கிடைக்கும். இப்படிப்பட்ட காலை உணவை உட்கொள்ளாமல் இருந்தால், அது உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள், நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் பிரச்சனை, மோசமான மனநிலை போன்றவற்றை ஏற்படுத்தும்.
9. மோசமான தூக்கம்
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் ஒருவர் போதுமான அளவில் தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தற்போதைய வேலைப்பளுமிக்க மற்றம் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால், வேலை வேலை என்று அலைந்து சரியான தூக்கத்தை மேற்கொள்ள முடியாமல் போகிறது.
இப்படி போதுமான தூக்கம் கிடைக்காமல் போனால், அதன் விளைவாக உடல் சோர்வு, கவனமில்லாமை, குறுகிய மனநிலை, மனச்சோர்வு போன்றவற்றை உண்டாக்கும். மோசமான தூக்கத்தை மேற்கொண்டால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, உடலின் திறனை சீர்குலைக்கும். உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும், அதிகப்படியான கார்டிசோல் உற்பத்தியை ஏற்படுத்தி மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
10. போதுமான நீரை அருந்தாமல் இருப்பது
உடல் ஆரோக்கியத்திற்கு உடல் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். அதற்கு தினமும் போதுமான அளவு நீரை அருந்த வேண்டும். ஆனால் இன்று நிறைய பேர் போதுமான அளவு நீரை குடிப்பதில்லை. இதன் விளைவாக உடலில் நீரிழப்பு ஏற்பட்டு, சோர்வு, சரும வறட்சி, எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் உற்பத்தி திறனில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரகங்களின் செயல்பாடு குறைந்து, உடலில் நச்சுக்கள் அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications