Latest Updates
-
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்
டவுன் சிண்ட்ரோம் நோய் குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்!
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி உலக மனநலிவு நோய் அறிகுறி தினம் (World Down Syndrome Day) அனுசரிக்கப்பட்டு வருகிறது. மனநலிவு நோய் என்பது ஒருவர் கூடுதல் குரோமோசோமைக் கொண்ட நிலையாகும்.
World Down Syndrome Day 2023: உலகில் எத்தனையோ வகையான நோய்கள் உள்ளன. அதில் ஒன்று தான் டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) என்னும் மனநலிவு நோய். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி உலக மனநலிவு நோய் அறிகுறி தினம் (World Down Syndrome Day) அனுசரிக்கப்பட்டு வருகிறது. மனநலிவு நோய் என்பது ஒருவர் கூடுதல் குரோமோசோமைக் கொண்ட நிலையாகும்.
நமது உடலில் உள்ள குரோமோசோம்கள் என்பவை மரபணுக்களின் சிறிய தொகுப்புகளாகும். இந்த குரோமோசோம்கள் தான் கர்ப்ப காலத்தில் மற்றும் குழந்தை பிறந்த பிறகு, வளரும் குழந்தையின் உடல் எவ்வாறு உருவாகிறது மற்றும் செயல்படுகிறது என்பதை தீர்மானிக்கின்றன.

பொதுவாக ஒருவரது உடலில் 46 குரோமோசோம்கள் இருக்கும். ஆனால் டவுன் சிண்ட்ரோம் நிலையைக் கொண்ட ஒரு குழந்தை குரோமோசோம்களில் ஒன்றான குரோமோசோம் 21-ன் நகலைக் கொண்டிருக்கும். அதாவது அந்த குழந்தையின் உடலில் இரண்டு குரோமோசோம் 21 இருக்கும். இதனால் இந்த டவுன் சிண்ட்ரோமை 'டிரிசோமி 21' என்றும் அழைப்பர். இந்த கூடுதல் குரோமோசோமானது குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சியை பாதித்து, அந்த குழந்தைக்கு உடல் மற்றும் மன ரீதியாக சவால்களை ஏற்படுத்தும்.
இன்று உலக மனநலிவு நோய் அறிகுறி தினம் என்பதால், ஒவ்வொருவரும் இந்நோய் குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை தமிழ் போல்ட்ஸ்கை கீழே கொடுத்துள்ளது.
1. டவுன் சிண்ட்ரோம் என்னும் மனநலிவு நோயானாது அமெரிக்காவில் கண்டறியப்பட்ட மிகவும் பொதுவான குரோமோசோமல் நிலை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6000 குழந்தைகள் அல்லது 700-ல் ஒரு குழந்தை இந்த நோயால் பிறக்கின்றன.
2. டவுன் சிண்ட்ரோம்மில் 3 வகைகள் உள்ளன. அவை டிரிசோமி 21, ட்ரான்ஸ்லொகேஷன் மற்றும் மொசைக் ஆகும். இதில் டிரிசோமி 21 வகையால் தான் 95% குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
3. டவுன் சிண்ட்ரோம் ஒன்றும் புதிய நோயல்ல. உண்மையை கூற வேண்டுமானால், 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது உள்ளது. இந்த டவுன் சிண்ட்ரோமின் முக அம்சங்கள் பல பழங்கால ஓவியங்களில் காணப்படுகின்றன.
4. குழந்தைக்கு உள்ள டவுன் சிண்ட்ரோம் பிரச்சனையை கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் இரத்த மாதிரிகள் மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் மூலம் கண்டறிய முடியும். 35 வயது மற்றும் அதற்கும் அதிகமான வயதில் கருத்தரிக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இந்நிலை இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால், ஸ்க்ரீனிங் சோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
5. டவுன் சிண்ட்ரோம்மால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகம் கொண்டுள்ளனர். அதில் காது கேளாமை, கண் பிரச்சனைகள் மற்றும் பிறவியிலேயே இதய கோளாறு போன்றவை பொதுவானவை. இது தவிர தூக்கத்தில் மூச்சுத்திணறல், தைராய்டு பிரச்சனை மற்றும் அல்சைமர் நோய் போன்றவையும் அடங்கும்.
6. டவுன் சிண்ட்ரோம்மின் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இருப்பினும், சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அவை பின்வருமாறு:
- வளர்ச்சியில் தாமதம்
- ஹைப்போடோனியா (உடலில் குறைவான தசை)
- பாதாம் வடிவ கண்கள்
- தட்டையான மூக்கு
- குறுகிய கழுத்து
- சிறிய காதுகள்
- சிறிய தாடை
- குறுகிய விரல்களுடன் சிறிய பாதங்கள் மற்றும் கைகள்
- குறைவான உயரம்
7. குடும்பங்களில் டவுன் சிண்ட்ரோ தாக்கம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளில், 96 சதவீத பெற்றோர்கள் தங்கள் டவுன் சிண்ட்ரோம்முடன் பிறக்கும் குழந்தையைப் பெற்றெடுக்க வருத்தப்படவில்லை. அதே சமயம் 96% உடன்பிறப்புகள் தங்கள் டவுன் சிண்ட்ரோம் உடன் பிறந்த உடன்பிறப்பை புறக்கணிப்பதில்லை. மேலும் டவுன் சிண்ட்ரோம்மைக் கொண்ட 99% மக்கள் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.
8. 1960-களில் டவுன் சிண்ட்ரோம் உள்ள குழந்தைகளின் ஆயுட்காலம் 10 வயதாக இருந்தது. ஆனால் இன்று டவுன் சிண்ட்ரோம் பிரச்சனையைக் கொண்டவர்கள் 60 வயது மற்றும் அதற்கும் மேல் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் புதிய சிகிச்சைகளால் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு நமது மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தான் முதன்மையான காரணம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



