Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
எடை இழப்புக்கு மருந்து எடுத்தால் உண்மையில் கண் பார்வை போய்விடுமா? டாக்டர் என்ன சொல்றாரு-ன்னு பாருங்க..
Weight Loss Drugs: உலகளவில் உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள் ஏராளம். இப்படி அதிக உடல் பருமனை கொண்டவர்கள், அதைக் குறைப்பதற்காக பல்வேறு வழிகளை தேடி கண்டுபிடித்து அவற்றை முயற்சித்து வருகிறார்கள். அதில் ஒரு தரப்பினர் ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறார்கள். இன்னும் சிலர் வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு, கண்டதை பின்பற்றுகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் உடல் எடையைக் குறைக்க மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, அது விற்கப்பட்டு வருகிறது. இந்த மருந்தை உடல் எடையைக் குறைக்க நினைக்கும் பலரும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த எடை இழப்பு மருந்தை உட்கொண்டால் பார்வையை இழக்க நேரிடும் என்ற ஒரு கருத்தும் பரவி வருகிறது. இது உண்மை தானா என்பது குறித்து குழந்தை நல நிபுணரும், உணவு ஆலோசகருமான டாக்டர். அருண்குமார் தனது சமூக வலைத்தளத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதில் அவர் கூறியதாவது, "உடல் எடையைக் குறைக்க அனைவரும் டயட், உடற்பயிற்சி என்று முயற்சித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் மருந்து கம்பெனிகள் உடல் எடையை மருந்துகள் மூலமாக குறைக்க முடியுமா என்று முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் அமெரிக்காவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பது தான் செமக்ளுடைடு (Semaglutide) என்னும் வெகோவி (Wegovy), ஓசெம்பிக் (Ozempic) போன்ற உடல் எடையைக் குறைக்கும் மருந்து. இது ஊசி வடிவிலோ, மாத்திரை வடிவத்திலோ விற்கப்படுகிறது. அதில் ஊசியாக வாரம் ஒருமுறை எடுத்தாலோ, மாத்திரையாக தினமும் அல்லது வாரம் ஒருமுறை எடுத்தாலோ, அது மறைமுகமாக பசியை கட்டுப்படுத்தி மிதமான அளவில் எடையைக் குறைக்க உதவலாம். உதாரணமாக, இதை எடுத்தால் ஒரு 3 மாதத்தில் 5-6 கிலோ வரை எடையைக் குறைக்க உதவலாம்.
ஆனால் இப்படி பசியைக் கட்டுப்படுத்தும் போது, வாந்தி அல்லது வயிறு எப்போதும் நிரம்பி இருப்பது போன்று ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக சில நோயாளிகள் கூறியுள்ளனர். முக்கியமாக இந்த மருந்தை நிறுத்தினால் மீண்டும் உடல் எடை போட ஆரம்பித்துவிடும். இப்படிப்பட்ட இந்த மருந்தின் விலை சற்று அதிகமானது. இந்தியாவிலேயே இந்த மருந்தை மாதம் எடுப்பதற்கு 30,000 முதல் 40,000 வரை ஆகலாம். ஆனால் மருந்து எடுப்பதை நிறுத்திவிட்டால், மீண்டும் உடல் எடை அதிகரித்துவிடும்.
இப்படிப்பட்ட மருந்தை அமெரிக்காவில் உடல் எடையைக் குறைக்க மக்கள் சகஜமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவிலும் இந்த மருந்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் வசதியானவர்கள் இந்த மருந்தை பயன்படுத்தி வருகிறார்கள்." என்று டாக்டர் கூறினார்.
அதோடு, "சமீபத்தில் ஹார்வர்டைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சி குழு, எடை இழப்பு மருந்தை எடுத்தால் கண்களில் உள்ள நரம்புகளில் பாதிப்பு ஏற்படலாம் என்றும், இந்த மருந்தை எடுத்தால் NAION என்னும் பார்வை நரம்புகளில் சேதம் ஏற்படலாம் என்றும், இதனால் கண் பார்வை திடீரென்று குறையலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுவதாக" டாக்டர் கூறினார்.
மேலும் "ஏற்கனவே டயபெட்டிக் ரெட்டினோபதி உள்ளவர்கள் இந்த மருந்தை எடுக்கும் போது, தற்காலிகமாக இந்த டயபெட்டிக் ரெட்டினோபதி மோசமடையலாம் என்றும் கூறுகின்றனர். முக்கியமாக இந்த நரம்பு பாதிப்பு எடை இழப்பை மருந்தை எடுக்காதவர்களை விட, எடுத்தவர்களுக்கு ஏற்படும் அபாயம் 3 முதல் 4 மடங்கு அதிகம் இருப்பதாக கூறுகின்றனர்." என்றும் டாக்டர் கூறினார்.
மேலும் "முக்கியமாக இதிலிருந்து ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், டயட்டில் இருந்து, உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, உணவில் மாவுச்சத்தை குறைத்து வந்தாலே, உடல் எடை நன்கு குறைவதைக் காணலாம். இதை விடுத்து, எதற்கு பணம் கொடுத்து, ரிஸ்க்கை விலைக்கு வாங்கணும். சிம்பிளா சரியான டயட், உடற்பயிற்சியை மேற்கொண்டு வாருங்கள். எடையைக் குறைக்க குறுக்கு வழியை தேடாமல், ஆரோக்கியமான உணவு முறையை நோக்கி பயணம் மேற்கொள்ளுங்கள். இதனால் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமான வழியில் எடையைக் குறைக்க முடியும்" என்றும் டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! நீங்கள் உடல் எடையைக் குறைக்க இந்த எடை இழப்பு மருந்தை வாங்கி பயன்படுத்த நினைத்திருந்தால், அந்த எண்ணத்தை கைவிட்டு, ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், அவற்றை தொடர்ந்து தவறாமல் பின்பற்றி வந்தாலே, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆரோக்கியமாக இருக்க இயற்கை வழிகளை பின்பற்றி பயன் பெறுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
