Latest Updates
-
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும் -
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க! -
ராகு-கேது பெயர்ச்சி 2026: துலாம் முதல் மீனம் வரை யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?- விளக்கும் ஜோதிடர்!
இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் புற்றுநோய் வராமல் தடுக்கவும் 'இந்த' ஒரு பொருள நீங்க சாப்பிட்டா போதுமாம்!
நம் சமையலறையில் கண்டிப்பாக இருக்கும் ஒரு முக்கியமான பொருள், இஞ்சி. இந்தியர்கள் பெரும்பாலான உணவுகளில் இஞ்சியை சேர்ப்பதற்கு முக்கிய காரணம் அதன் சுவை மட்டுமல்ல, அதிலிருக்கும் மருத்துவ குணங்களும்தான் காரணம்.
இஞ்சி நாம் ஆரோக்கியமாக இருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், பல நோய்தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும், இது உங்கள் செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

அந்த வகையில், இஞ்சியை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், உங்கள் உடலில் பல அதிசயங்கள் நடக்கும். இக்கட்டுரையில், இஞ்சியை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
செரிமானம் மற்றும் குமட்டல்
அஜீரண பிரச்சினைகளுக்கு இயற்கையாக நிவாரணமளிக்கும் பொருட்களில் ஒன்று இஞ்சி. கூடுதலாக, இது குமட்டல் பிரச்சனையையும் தீர்க்க உதவுகிறது. ஏனெனில் இது நம் உடலில் இயற்கையான ஆண்டிபயாடிக் ஆக செயல்படுகிறது. உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால், மறக்காமல் உங்கள் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்ளுங்கள்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
தினமும் இஞ்சியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவும். இதனால, நோய் தொற்றுகளில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம். இஞ்சியில் இருக்கும் ஜிஞ்சரால் பல பாக்டீரியாக்களை தடுக்கலாம்.
மாதவிடாய் வலிக்கு நிவாரணம்
பெரும்பலான பெண்களுக்கு மாதவிடாயின்போது, வலி ஏற்படுவது பொதுவானது. சில நேரங்களில் வலி தீவிரமாக இருக்கலாம். அப்போது, இஞ்சி சாறு அருந்தலாம். மேலும், பெண்கள் தினமும் 1 கிராம் இஞ்சியை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது மாதவிடாயின்போது ஏற்படும் வலியைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
உடல் பருமன் உங்களுக்கு பல்வேறு சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உடல் எடையை குறைக்க வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேண்டும். உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும் உணவுகளில் இஞ்சியும் ஒன்று. இஞ்சி தேநீர், இஞ்சி சாறு மற்றும் காய்கறிகளில் இஞ்சியை சேர்ப்பது போன்ற எந்த வடிவிலும் நீங்கள் இஞ்சியை எடுத்துக்கொள்ளலாம்.
இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்
இஞ்சியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்கள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. தினமும் இரண்டு கிராம் இஞ்சியை உணவில் சேர்க்கும்போது, இரத்த சர்க்கரை அளவு 12 சதவிகிதம் குறைவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது இஞ்சியின் அதிக ஆற்றலைக் காட்டுகிறது.
புற்றுநோயைத் தடுக்கிறது
ஆய்வுகளின் படி, இஞ்சி புற்றுநோய் மற்றும் பெருங்குடல் அழற்சியின் வெளிப்பாட்டைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. ஆதலால், உங்கள் தினசரி உணவில் இஞ்சியை சேர்க்க மறக்காதீர்கள். மேலும், இது உங்களுக்கு சரும நன்மைகளையும் வழங்குகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

