Latest Updates
-
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
சரியா தூக்கம் வரவில்லையா? அப்ப உடம்புல இந்த வைட்டமின் பற்றாக்குறை இருக்குன்னு அர்த்தம்...
Insomnia In Tamil: நம் உடலுக்கு வைட்டமின்கள் என்பது மிகவும் அவசியம். இந்த வைட்டமின்கள் பற்றாக்குறை ஏற்படும் போது நமக்கு பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி நமக்கு கால்சியம் சத்தை உறிஞ்ச உதவுகிறது.
கால்சியம் நம் எலும்புகளுக்கு மிகவும் அவசியமான ஒன்று. எனவே தான் வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படும் போது உங்கள் எலும்புகள் பலவீனமாக வாய்ப்பு உள்ளது. அதே மாதிரி சில வைட்டமின் பற்றாக்குறை இருந்தால் உங்களால் நிம்மதியாக தூங்க இயலாது.

உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால் உணவில் இருந்து நீங்கள் ஊட்டச்சத்து பெறுவது கடினமாகும். எனவே ஊட்டச்சத்துக்கள் சரியாக உறிஞ்சாமல் இருக்கும் போது உங்களுக்கு வைட்டமின்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே நிபுணர்களின் கூற்றுப்படி, உங்களுக்கு தூங்குவதில் சிக்கல் இருந்தால், அதற்கு இந்த 7 வைட்டமின்கள் தான் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
வைட்டமின் டி
வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். பால் பொருட்களில் இருந்தும் இந்த வைட்டமின் டி கிடைக்கிறது. 2018 இல் ஊட்டச்சத்துக்களில் வெளியிடப்பட்ட ஆய்வுகளின் படி மெட்டா-பகுப்பாய்வு வைட்டமின் டி கோளாறுடன் தொடர்புடையது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
வைட்டமின் டி தூக்க கோளாறு அபாயத்தை அதிகரிக்கிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது. எனவே தூக்க கோளாறு இருப்பவர்கள் போதுமான அளவு வைட்டமின் டியை பெற வேண்டியது அவசியம். இதை மருத்துவரின் பரிந்துரை பேரில் மாத்திரை வடிவில் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
வைட்டமின் சி
வைட்டமின் சி என்பது சளியை எதிர்த்து போராடுவதற்கான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் வைட்டமின் சி மன அழுத்த ஹார்மோனை குறைக்க உதவுகிறது. மோசமான தூக்கம் போன்றவற்றை எதிர்த்து போராட உதவுகிறது. நைஜீரிய உடலியல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட 2015 ஆம் ஆண்டு ஆய்வில், வைட்டமின் சி கார்டிசோலின் (மன அழுத்த ஹார்மோன்) அளவைக் குறைக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே மன அழுத்தம் காரணமாக தூங்காமல் இருப்பவர்கள் வைட்டமின் சி-யை எடுத்துக் கொண்டு வரலாம். ஆரஞ்சு, முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, மிளகுத்தூள், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் வைட்டமின் சி அதிகளவில் காணப்படுகிறது.
கால்சியம்
கால்சியம் பற்றாக்குறை இருப்பவர்களுக்கு எலும்பு பலவீனம் ஏற்படும். கால்சியம் நம் மூளையில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலத்தைப் பயன்படுத்தி மெலடோனின் அதாவது தூக்க ஹார்மோனை உருவாக்க உதவுகிறது. ஜர்னல் ஆஃப் ஸ்லீப் ரிசர்ச்சில் 2015 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் இதைக் கண்டறிந்து உள்ளனர்.
கால்சியம் குறைபாடுகள் உள்ளவர்களைக் காட்டிலும் சாதாரண அளவிலான கால்சியம் சத்தை கொண்டவர்களுக்கு தூங்குவது எளிதாக உள்ளது. கால்சியம் அவர்களின் இரத்த அழுத்தத்தை குறைத்து மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. அதனால் தான் கால்சியம் போன்ற பால் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது நமக்கு தூக்கம் ஏற்படுகிறது.
வைட்டமின் பி12
பொதுவாக சைவ உணவு உண்பவர்கள் அவர்கள் எடுத்துக் கொள்ளும் வைட்டமின் பி12 யை கண்காணிக்க வேண்டும். வைட்டமின் பி12 என்பது பொதுவாக விலங்கு பொருட்களில் இருந்து பெறப்படுகிறது. வைட்டமின் பி12 குறைபாடு தூக்கமின்மை, மனச்சோர்வு மற்றும் தூக்க பிரச்சினைகளை ஏற்படுத்தும் .
2019 ஆம் ஆண்டு ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஸ்லீப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வைட்டமின் பி12 உங்களை பகலில் சோர்வடையச் செய்யும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் மருத்துவரின் பரிந்துரை பேரில் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
மக்னீசியம்
மக்னீசியம், துத்தநாகம் மற்றும் சில அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள் அமைதியான நரம்பியக்கடத்திகளின் கட்டுமான தொகுதிக்கு உதவுகிறது. இவை உங்கள் மூளையை அமைதியாக்க உதவுகிறது. உங்களுக்கு மக்னீசியம் குறைபாடு இருந்தால் மோசமான தூக்கம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்றவை ஏற்படக்கூடும். மக்னீசியத்தின் அளவு அதிகரிப்பது, 2018 ஆம் ஆண்டு ஆய்வின்படி பகலில் உறங்குவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.
மக்னீசியம் பெரும்பாலும் கவலை அல்லது மனச்சோர்வு உள்ள நோயாளிகளுக்குப் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. அடர்ந்த பச்சை இலை காய்கறிகள், நட்ஸ் வகைகள், விதைகள் மற்றும் டார்க் சாக்லேட்டில் மக்னீசியம் அதிகமாக இருக்கும். எனவே மக்னீசிய குறைப்பாட்டை தடுக்க அதை எடுத்துக் கொண்டு வரலாம்.
வைட்டமின் பி6
கால்சியம், வைட்டமின் பி6 போன்றவை டிரிப்டோஃபேனை செரோடோனினாக மாற்ற உதவுகிறது. அதனால் நம் மனநிலை மற்றும் மெலடோனின் அளவானது கட்டுப்படுத்தப்படுகிறது. வைட்டமின் பி6 குறைபாடு உங்களுக்கு மோசமான தூக்கத்தை ஏற்படுத்தலாம்.
அதே நேரத்தில் மருத்துவரின் பரிந்துரை பேரில் வைட்டமின் பி6 மாத்திரைகள் எடுத்துக் கொண்டவர்கள் நிம்மதியான தூக்கத்தை பெற்றுள்ளனர். கொண்டைக்கடலை, சால்மன், தர்பூசணி, கீரை போன்ற உணவுகளில் வைட்டமின் பி6 அதிகளவில் காணப்படுகிறது.
மெலடோனின்
நமது உடல் இயற்கையாகவே மெலடோனினை உற்பத்தி செய்து நல்ல தூக்கத்தை தரக் கூடும். ஆனால் உங்கள் அறையில் உள்ள பிரகாசமான விளக்குகளின் வெளிச்சம் மற்றும் உணவுப்பழக்கம் மெலடோனின் உற்பத்தியை குறைத்து தூங்குவதை கடினமாக்கிறது.
இயற்கையாகவே மெலடோனின் அளவை அதிகரிக்க உங்கள் அறையில் நீல ஒளி அளவை குறைக்க வேண்டும். மெலடோனின் நிறைந்த உணவுகளான கோஜி பெர்ரி, அக்ரூட் பருப்புகள் மற்றும் அன்னாசிபழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications