Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
உங்க வீட்ல சர்க்கரை நோயாளிகள் இருக்காங்களா?அப்ப அவங்களுக்கு இந்த ஆபத்தான நோய்கள் வர வாய்ப்பிருக்காம்...!
இந்தியாவில் சுமார் 80 மில்லியன் மக்கள் வளர்சிதை மாற்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், இந்தியா உலகின் நீரிழிவு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2045 ஆம் ஆண்டளவில் 135 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2019 இல் இருந்து 16% அதிகரித்துள்ளது என்று சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு (IDF) தனது சமீபத்திய அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 40 மில்லியன் மக்களுக்கு குளுக்கோஸ் சகிப்புத்தன்மை குறைபாடு உள்ளது
இந்தியாவில் 40 மில்லியன் மக்களுக்கு குளுக்கோஸ் சகிப்புத்தன்மை (IGT) குறைபாடு உள்ளது, அதாவது அவர்கள் நீரிழிவு நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இது உலகின் மற்ற அனைத்து நாடுகளிலும் ஒப்பிடும்போது இரண்டாவதாகும்.நீரிழிவு நோயை சரியான நேரத்தில் கண்டறியவிட்டால் அது பல ஆபத்தான பிரச்சினைகளை ஏற்படுத்தும். மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, பார்வையிழப்பு மற்றும் மூட்டு வலி போன்றவை அதில் முக்கியமானவை. நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய ஆபத்தான நோய்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
இதய பாதிப்பு
சர்க்கரை நோயால் ஏற்படும் முதல் ஆபத்து இதய பாதிப்பாகும். உயர் இரத்த சர்க்கரை, இரத்த ஓட்டத்தை அனுமதிக்கும் இரத்த நாளங்களின் திறனை பாதிக்கிறது. இது இதயத்தை கட்டுப்படுத்தும் இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்துகிறது. இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு போன்ற பிற உடல்நலச் சிக்கல்கள் இதயத்திற்கான ஆபத்தை அதிகரிக்கிறது.
சிறுநீரகக் கோளாறுகள்
சர்க்கரை நோய் இருப்பவர்கள், தங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறுநீரக நோய்களின் அறிகுறிகள் பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளால் புறக்கணிக்கப்படுகின்றன மற்றும் அறிகுறிகள் தீவிரமடையும் நேரத்தில் சிறுநீரக நோய் ஏற்கனவே உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்றிருக்கும். பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நரம்பு பாதிப்புகள்
சர்க்கரை நோயானது டயாபெடிக் நியூரோபதி எனும் ஆபத்தான நிலைக்கு வழிவகுக்கிறது. இந்த நிலையில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் நரம்புகள் சேதமடைகின்றன. நரம்புகளில் சேதம் ஏற்படுவதால் நரம்புகள் உடல் உறுப்புகளுக்கு சமிக்ஞைகளை அனுப்புவதை நிறுத்துகிறது, இது உடல் உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. டயாபெடிக் நியூரோபதி நோயின் மிகவும் பொதுவான தாக்கங்களில் ஒன்று ரெட்டினோபதி ஆகும்.
மோசமான வாய் ஆரோக்கியம்
சர்க்கரை நோய் வாயில் இருந்து உமிழ்நீர் சுரப்பதைக் குறைக்கும், இதனால் வாயில் வறட்சி ஏற்படுகிறது, இது வாயில் கிருமிகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கிறது. நீரிழிவு நோயின் காரணமாக ஈறுகளில் அடிக்கடி வீக்கம் ஏற்பட்டு இரத்தம் வர வாய்ப்புள்ளது. மேலும் சர்க்கரை நோயினால் வாயில் உள்ள புண்கள் ஆற அதிக நேரம் எடுக்கும்.
பாலியல் கோளாறுகள்
சர்க்கரை நோயால் ஏற்படும் நரம்பு மற்றும் இரத்த நாளங்கள் சேதம் காரணமாக, பாலியல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் குறைகிறது, இது பாலியல் உணர்வைக் குறைக்கிறது அல்லது பாலியல்ரீதியாக தூண்டப்படுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாலியல் உந்துதல் குறைகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

