Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
எந்த பழத்தில் என்ன சத்து இருக்கு-ன்னு அதோட நிறத்தை வெச்சே தெரிஞ்சுக்கலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க...
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உடலின் செயல்பாடுகளுக்கு வேண்டிய சத்துக்கள் முறையாக கிடைக்க வேண்டும். இப்படிப்பட்ட சத்துக்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகம் உள்ளன. ஆனால் எந்த பழத்தில் என்ன சத்து உள்ளது என்று அனைவருக்கும் தெரியாது. இருப்பினும் நாம் சாப்பிடும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் நிறத்தைக் கொண்டே அதில் எந்த சத்து அதிகம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம் தெரியுமா?
இதுக்குறித்து டாக்டர் ஏகம்மை மணிகண்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் எந்த சத்து அதிகம் உள்ளது என்றும், அந்த சத்து எந்த மாதிரியான நன்மைகளை வழங்கக்கூடியது என்றும் பகிர்ந்து கொண்டார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதில் அவர் கூறியதாவது, "சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், குறிப்பிட்ட வகையான புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. இந்த சிவப்பு நிற உணவுப் பொருட்களாவன சிவப்பு குடைமிளகாய், தக்காளி, சிவப்பு முள்ளங்கி போன்றவை.
ஆரஞ்சு நிற உணவுப் பொருட்களில் பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளது. இது கண் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகின்றன. இந்த ஆரஞ்சு நிற உணவுப் பொருட்களாவன கேரட், பப்பாளி, பூசணிக்காய், ஆரஞ்சு போன்றவை.
பச்சை நிற உணவுப் பொருட்களில் லுடீன் என்னும் பொருள் உள்ளது. இது இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. இந்த பச்சை நிற உணவுப் பொருட்களாவன கேல், பசலைக்கீரை, ப்ராக்கோலி போன்றவை.
நீலம் அல்லது ஊதா நிற உணவுப் பொருட்களில் அந்தோசையனின்கள் அதிகம் உள்ளன. இவை மூளையின் ஆரோக்கியம், நினைவாற்றல், வாழ்நாளை நீட்டிப்பது போன்றவற்றிற்கு உதவுகிறது. இந்த நீலம் அல்லது ஊதா நிற உணவுகளாவன கருப்பு திராட்சை, கத்திரிக்காய், ப்ளூபெர்ரி, கருப்பு ப்ளம்ஸ், ஊதா முட்டைக்கோஸ் போன்றவை.
மஞ்சள் நிற உணவுப் பொருட்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த நிற உணவுகளை உட்கொண்டால், அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போவது தடுக்கப்படும். இந்த மஞ்சள் நிற உணவுகளாவன மாம்பழம், மஞ்சள் நிற குடைமிளகாய், சோளம், எலுமிச்சை போன்றவை.
மேலும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க எந்த நிற உணவுகளை தவிர்க்க வேண்டுமானால், அது வெளிரிய பழுப்பு நிற உணவுகள் தான். அதாவது வெள்ளை பிரட், பாஸ்தா, நூடுல்ஸ் போன்றவற்றில் ஸ்டார்ச் அதிகம் உள்ளன. அதோடு இவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவுகளும் அதிகமாக இருப்பதால், இவை உடலுக்கு நல்லதல்ல." என்றும் டாக்டர் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


