Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
உடலுறவிற்கு முன் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா உங்களுக்கு பிரச்சினைதான்...!
உடலுறவுக்கு முன் செய்யும் சில செயல்கள் உடலுறவை மிகவும் அசௌகரியமானதாக மாற்றும். குறிப்பாக உடலுறவுக்கு முன் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
உடலுறவு என்பது மனிதர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். தாங்கள் ஒன்றாக செலவழிக்கும் நேரம் இனிமையாக இருக்க வேண்டுமென்றுதான் இருவருமே விரும்புவார்கள். ஆனால் உடலுறவுக்கு முன் செய்யும் சில செயல்கள் உடலுறவை மிகவும் அசௌகரியமானதாக மாற்றும். குறிப்பாக உடலுறவுக்கு முன் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

உண்மைதான், உடலுறுவுக்கு முன் சாப்பிடும் உணவுகள் அந்த உறவு எப்படி இருக்கப்போகிறது என்பதை முடிவு செய்வதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. எப்படி சில உணவுகள் உடலுறவை சிறப்பானதாக மாற்றுமோ அதேபோல சில உணவுகள் மோசமானதாக மாற்றும். இந்த பதிவில் உங்கள் உடலுறவு அனுபவத்தை மோசமாக்கும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

காபி
அதிகப்படியான காஃபின் உங்கள் கார்டிசோலின் அளவை உயர்த்துகிறது, இது மன அழுத்த ஹார்மோன் ஆகும். மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி உடலுறவுக்கு முன் காபி குடிப்பது உங்களை விழிப்புடன் வைத்து உங்கள் உடல் ஓய்வெடுப்பதை மிகவும் கடினமாக்குகிறது, மேலும் உங்கள் பாலுணர்ச்சியைக் குறைக்கிறது.

உப்பு
அதிக உப்புள்ள உணவுகளை உடலுறுவுக்கு முன் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது அதிக நீர் தக்கவைப்பை அதிகரிக்கின்றன மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதிக இரத்த ஓட்டம் உச்சக்கட்டம் ஏற்படுவதை உறுதி செய்கிறது, ஆனால் அதிகளவு உப்பு சாப்பிடுவது அந்த நிலையை அடைவதை கடினமாக்குகிறது, சிலசமயம் உச்சக்கட்டம் ஏற்படாமலே போகவும் இது காரணமாகிறது.

பழங்கள்
பழங்களை உடலுறவிற்கு முன் சாப்பிடுவது நல்லதல்ல, குறிப்பாக உணவிற்கு பிறகு பழத்தை சாப்பிடக்கூடாது. பழங்கள் நாம் சாப்பிடும் மற்ற அனைத்து உணவுகளைக் காட்டிலும் வேகமாக ஜீரணிக்கிறது. இதனால் தசைப்பிடிப்பு, வாயு மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கிறது. உடலுறவு சமயத்தில் இந்த பிரச்சினைகள் உங்கள் அனுபவத்தை மோசமானதாக மாற்றும்.

புதினா
முத்தமிடுவதற்கு முன் புதினா சாப்பிடுவது நல்லது, ஆனால் உடலுறவிற்கு முன் இதனை சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல. ஏனெனில் இது உங்கள் பாலியல் ஆசையையும், ஆற்றலையும் விரைவாக குறைக்கக்கூடும். மேலும் சுவாசப் புத்துணர்ச்சிக்காக மெல்லும் பபுள்கம் வாயுக்கோளாறுக்கு வழிவகுக்கும்.

கார்பனேற்றப்பட்ட பானங்கள்
நீங்கள் கார்பனேற்றத்தை உணர்ந்தால், டானிக் நீர் மற்றும் சோடாக்களிலிருந்து விலகி இருக்கவும். காதல் மற்றும் காமம் நிறைந்த இரவில் அடிக்கடி ஏப்பம் விடுவது இருவருக்குமே அசௌகரியத்தை உருவாக்கும்.

முட்டைகோஸ் வகை காய்கறிகள்
முட்டைகோஸ், காலிஃபிளவர் மற்றும் ப்ரோக்கோலி அனைத்தும் மீத்தேன் உற்பத்தி செய்யும் உணவுகள். பொதுவாகவே இரவு நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். குறிப்பாக உடலுறவிற்கு திட்டமிட்டு இருக்கும் இரவில் இதனை சாப்பிடாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் இது கடுமையான வாயுக்கோளாறை ஏற்படுத்தும்.

சோயா
ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக இருக்கும்போது அவர்களின் பாலியல் தூண்டுதல் அதிகமாக இருக்கும். ஆனால் இரவு நேரத்தில் சோயாவை உணவில் சேர்த்துக் கொள்வது அதிக ஹார்மோன் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு 120 மில்லிகிராம் அல்லது அதற்கு மேற்பட்ட சோயாவை உட்கொள்ளும் ஆண்கள் டெஸ்டோஸ்டிரோனில் குறிப்பிடத்தக்க இழப்பைக் காண்கிறார்கள்.

அல்லியம்ஸ்
அல்லியம் கடுமையான வாசனையை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். இது பிறப்புறுப்பில் கடுமையான வாசனையை உண்டாக்கும். எனவே இவை இருக்கும் காய்கறிகளான வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற காய்கறிகளை இரவில் அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

அஸ்பாரகஸ்
நீங்கள் ஒரு அஸ்பாரகஸ் உண்பவராக இருந்தால், உங்கள் சிறுநீரில் நீங்கள் வித்தியாசமான வாசனையை உணர்வீர்கள். இதனை கருத்தில் கொண்டு உடலுறவுக்கு முன் இதனை சாப்பிடாமல் இருப்பதே நல்லது.



Click it and Unblock the Notifications
