உங்க நுரையீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப உடனே இந்த உணவுகளுக்கு 'குட்-பை' சொல்லுங்க...

நாம் உண்ணும் உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் நம் உண்ணும் சில உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு தீங்கை உண்டாக்குகிறது என்பது தெரியுமா?

உங்களுக்கு நுரையீரலில் பிரச்சனை இருக்கிறதா அல்லது உங்கள் நுரையீரலை வலிமையாக வைத்துக் கொள்ள உங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா? குறிப்பாக கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டிருக்கும் இக்காலத்தில் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

Worst Foods For Your Lungs

அதற்கு புகைப்பிடிக்காமல் இருப்பது, அன்றாடம் உடற்பயிற்சிகளை செய்வது மற்றும் காற்று மாசுபாட்டில் இருந்து விலகி இருப்பது மற்றும் உண்ணும் உணவுகளும் நுரையீரல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் நம் உண்ணும் சில உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு தீங்கை உண்டாக்குகிறது என்பது தெரியுமா?

இக்கட்டுரையில் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால் தவிர்க்க வேண்டிய சில முக்கிய உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அந்த உணவுகள் உண்பதைத் தவிர்த்து, நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரட்

பிரட்

சுத்திகரிக்கப்பட்ட மாவுகள் மற்றும் சர்க்கரை போன்றவற்றில் உள்ள எளிய கார்போஹைட்ரேட்டுகள் நுரையீரல் ஆரோக்கியத்தை மோசமாக்கும். இந்த உணவுகள் அழற்சியை ஏற்படுத்தக்கூடியவை மட்டுமின்றி, வளர்சிதை மாற்றத்திற்கு நுரையீரலின் ஒரு பகுதியில் அதிக வேலையைக் கொடுக்கிறது.

பொதுவாக குறைவான கார்போஹைட்ரேட் உடலில் கார்போஹைட்ரேட்டை குறைவாக உற்பத்தி செய்ய அனுமதிக்கும். இது நுரையீரலுக்கு மிகவும் நல்லது. அதே சமயம் கார்போஹைட்ரேட் உடலில் சாதாரண செயல்பாட்டிற்கும், ஆற்றலுக்கும் மிகவும் முக்கியம். எனவே காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரட்டுகள் நிறைந்த உணவுகளான முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிளைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். சுத்திகரிக்கப்பட்ட பாஸ்தா, பிரட், அரிசி மற்றும் இனிப்புக்களை அதிகம் உண்பதைத் தவிர்த்திடுங்கள்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

இந்த பட்டியலில் ப்ராக்கோலி இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறீர்களா? சில சமயங்களில் ப்ராக்கோலியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-கார்சினோஜெனிக் ஆற்றல் நுரையீரலுக்கு நன்மை அளிப்பவை தான். ஆனால் இது உண்மையில் வாயுவால் ஒருவித உப்புசத்தை உண்டாக்கி மோசமான நுரையீரலுக்கு பங்களிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒருவேளை உங்களுக்கு ப்ராக்கோலி, காலிஃப்ளவர் அல்லது முட்டைக்கோஸ் போன்றவற்றை உண்ட பின் வாய்வுத் தொல்லையை சந்தித்தால், அந்த காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள் அல்லது அந்த காய்கறிகளுக்கு மாறாக, அதற்கு நிகரான வேறு சில உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள்.

ஐஸ் க்ரீம்

ஐஸ் க்ரீம்

ஐஸ் க்ரீம் விழுங்குவதற்கு கடினமான ஒன்றாகும். ஆனால் பால் பொருட்கள் சளி உற்பத்தியை அதிகரிக்கும் என்பது அனைவருமே அறிந்த ஒன்று. குறிப்பாக சுவாசக் குழாயில் சளியை அதிகம் உற்பத்தி செய்யும். அதிலும் குளிர் காலத்தில் இதனை உட்கொண்டால் நிலைமை மோசமாகும். ஆகவே ஐஸ் க்ரீம் சாப்பிட்டு நீங்கள் சளி தொல்லையால் அவஸ்தைப்படுபவராயின், நுரையீரல் ஆரோக்கியத்திற்காக இந்த ஐஸ் க்ரீமை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது. முக்கியமாக ஐஸ் க்ரீம்மில் அழற்சிக்கு காரணமான சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை இரட்டிப்பாக உள்ளது என்பதை மறக்காதீர்கள்.

சிப்ஸ்

சிப்ஸ்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் நுரையீரலுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலுக்குமே ஆரோக்கியமற்றது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதிலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளான உருளைக்கிழங்கு சிப்ஸில் சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் உப்பு போன்றவை நிறைந்துள்ளதால், இது முழு உடலுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஓர் உணவுப் பொருளாகும். முக்கியமாக இதில் உள்ள அதிகப்படியான உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் தொடர்ச்சியான உயர் இரத்த அழுத்தம் இதய ஆரோக்கியத்தை சீரழிக்கும்.

பீர்

பீர்

ஆல்கஹால் எந்த வடிவிலும் நுரையீரலுக்கு நல்லதல்ல. குறிப்பாக சல்பைட் செய்யப்பட்ட ரெட் ஒயின் அல்லது சர்க்கரை நிரம்பிய காக்டெயில் போன்ற இரண்டுமே அழற்சிக்கு வழிவகுப்பவை. ஆனால் பீர் இருப்பதிலேயே மிகவும் மோசமான ஒன்று. பொதுவாக காற்றேட்டப்பட்ட மற்றும் கார்போனேட்டட் உணவுகள் வீக்கம், மார்வு நெரிசல் மற்றும் ஆஸ்துமாவைக் கூட ஏற்படுத்தும். ஏனெனில் ஆல்கஹால் உடல் வறட்சிக்கு பங்களிப்பதால், உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், இதற்கு குட்-பை சொல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion