Latest Updates
-
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா மரணத்தை சீக்கிரம் பாப்பீங்க..
நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அதன் தாக்கம் அப்படியே உடலில் தெரியும். அதுவும் மோசமான உணவுப் பழக்கங்களைக் கொண்டிருந்தால், அது நாள்பட்ட நோய்களான சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் குறிப்பிட்ட புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
ஒருவரது உணவுப் பழக்கம் அவரது உடல் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும். முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் உணவுப் பழக்கத்தால் தான் அவர்கள் நீண்ட காலம் எவ்வித நோயுமின்றி ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் தற்போதைய நவீன உலகில் உணவுப் பழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்களுக்கு ஏற்ப உடலைத் தாக்கும் நோய்கள் மற்றும் உடலில் வரும் பிரச்சனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அதன் தாக்கம் அப்படியே உடலில் தெரியும். அதுவும் மோசமான உணவுப் பழக்கங்களைக் கொண்டிருந்தால், அது நாள்பட்ட நோய்களான சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் குறிப்பிட்ட புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். அதனால் தான் தற்போது ஏராளமானோர் இளம் வயதிலேயே மரணத்தை தழுவுகிறார்கள். அதுவே ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கொண்டிருந்தால், இந்த மாதிரியான நோய்களைத் தடுப்பதோடு, நிர்வகிக்கவும் முடியும். இப்போது ஒருவரது எம்மாதிரியான உணவுப் பழக்கங்கள் ஆரோக்கியத்தை சீரழிக்கின்றன என்பதைக் காண்போம்.

#1
ஆரோக்கியமற்ற உணவுகளைத் தேர்ந்தெடுத்து அதிகமாக உட்கொள்ளும் போது, உடலின் தினசரி செயல்பாட்டிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், ஊட்டச்சத்து குறைபாடுகளை சந்திக்க நேரிகிறது. ஊட்டச்சத்து குறைபாடுகள் நீடித்தால், அதன் விளைவாக ஒவ்வொரு உறுப்புக்களின் செயல்பாடும் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

#2
தற்போது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் ஜங்க் உணவுகள் அதிகம் விற்கப்படுகின்றன. இந்த ஜங்க் உணவுகளில் கலோரிகள் அதிகமாகவும், பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும் இருப்பதால், அந்த மாதிரியான உணவுகளை அதிகம் உட்கொள்ளும் போது, அதன் காரணமாக உடல் பருமன் பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. உடல் பருமன் பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு இதய நோய் மற்றும் பிற நாள்பட்ட நோய்களின் அபாயம் அதிகம் உள்ளது.

#3
ஒருவரது உணவில் சாச்சுரேட்டட் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள், கொலஸ்ட்ரால், உப்பு மற்றும் சர்க்கரை போன்றவை அதிகம் இருந்தால், அது நாள்பட்ட நோய்களான இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே இம்மாதிரியான பழக்கம் உங்களிடம் இருந்தால் உடனே கைவிடுங்கள்.

#4
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை, உப்பு போன்றவை அளவுக்கு அதிகமாக இருக்கும். இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சேர்க்கும் போது, அது இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்திவிடும். இதன் விளைவாக ஒருவரது ஆற்றலின் அளவும், மனநிலையும் பெரிதும் பாதிக்கப்படும்.

#5
யார் ஒருவர் நார்ச்சத்து குறைவான உணவுகளை அதிகமாகவும், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாகவும் உட்கொள்கிறார்களோ, அவர்கள் செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கல், வயிற்று உப்புசம், வாயு தொல்லை, நெஞ்செரிச்சல் போன்றவற்றால் அதிகம் அவதிப்பட நேரிடும். செரிமான பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தால், அதுவே நாளடைவில் பெரிய பிரச்சனையை உண்டாக்கிவிடும்.

#6
தற்போது நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்க வேண்டுமானால், போதுமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும். அதைவிட்டு ஜங்க் உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பிட்சா போன்றவற்றை உட்கொண்டால், அதன் விளைவாக நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு அடிக்கடி ஆளாகி அவதிப்பட நேரிடும்.
நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியமாக சிறப்பாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், மேல் கொடுக்கப்பட்டுள்ளதை நினைவில் கொண்டு, அதற்கேற்ப இனிமேல் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்...



Click it and Unblock the Notifications