Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உங்களுக்கு ஆஸ்துமா இருக்கா? ஆஸ்பத்திரி போகாம சரிசெய்யணுமா? அப்ப தினமும் இத செய்யுங்க...
உலகில் ஆஸ்துமா பிரச்சனையால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமை உலக ஆஸ்துமா தினம் கொண்டாடப்படுகிறது.
இன்று பலருக்கு ஆஸ்துமா பிரச்சனை உள்ளது. ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் எப்போதுமே கையில் இன்ஹேலரை வைத்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும். ஆஸ்துமா பெரியவர்களுக்கு மட்டுமின்றி, குழந்தைகளையும் தாக்கக்கூடியது. ஆஸ்துமா என்பது ஒரு சுவாச நோய். இது சுவாசப் பாதையில் ஏற்படும் அழற்சியால், சுவாசக் குழாய் குறுகி ஏற்படுவதாகும். இந்த நிலைமையால் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

தற்போது நுரையீரலை குறி வைத்து தாக்கும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் கவனத்தை செலுத்த வேண்டும். குறிப்பாக ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உலகில் ஆஸ்துமா பிரச்சனையால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமை உலக ஆஸ்துமா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்களிடையே ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆஸ்துமா பிரச்சனையை கண்டறிந்து அதற்கு சிகிச்சை ஏதும் மேற்கொள்ளாமல் இருந்தால், அதுவே ஒருவரது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிவிடும். தற்போது அடிக்கடி மருத்துவரிடம் செல்ல முடியாது என்பதால், தமிழ் போல்ட் ஸ்கை ஆஸ்துமாவை வீட்டிலேயே எளிமையாக எப்படி சரிசெய்வதென்று கொடுத்துள்ளது. ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்த முடியாவிட்டாலும், கட்டுப்பாட்டில் நிச்சயம் வைத்துக் கொள்ள முடியும்.

ஆஸ்துமாவின் அறிகுறிகள்
* தொடர் இருமல்
* சுவாசிக்கும் போது சப்தம் வரும்
* மார்பு நெரிசல்
* மூச்சு திணறால் போதுமான தூக்கமின்மை
* களைப்பு
* சுவாசப் பாதையில் அதிகப்படியான சளி உற்பத்தி
* நெஞ்சு வலி
* சிறு வேலை செய்த பின்னரும் மூச்சு விடுவதி சிரமத்தை சந்திப்பது

காரணங்கள்
ஒருவருக்கு ஆஸ்துமா வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவையாவன:
* வைரஸ் தொற்றுக்கள்
* புகைப்பிடிப்பது மற்றும் புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பது
* கெமிக்கல்கள்
* மகரந்தம், தூசி
* காற்று மாசுபாடு
* விலங்குகளின் முடி
* குளிர்ச்சியான காலநிலை
இப்போது ஆஸ்துமாவை பிரச்சனையை இயற்கையாகவே சரிசெய்யும் மற்றும் கட்டுப்படுத்தும் சில எளிய நாட்டு வைத்திய முறைகளைக் காண்போம்.

கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெய் மசாஜ் நாசி மற்றும் சுவாச பாதைகளை சுத்தம் செய்து, ஆஸ்துமாவை இயற்கையாக சரிசெய்யக்கூடியது.
வெதுவெதுப்பான கடுகு எணணெயில் சிறிது உப்பு சேர்த்து நெஞ்சு மற்றும் முதுகுப் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை செய்தால், ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

இஞ்சி
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆஸ்துமாவை இயற்கையாகவே சரிசெய்யும் திறன் கொண்டது. அதற்கு இஞ்சியைக் கொண்டு பானம் தயாரித்துக் குடிக்க வேண்டும்.
தேவையான பொருட்கள்:
* இஞ்சி
* எலுமிச்சை
* தேன்
* தண்ணீர்
செய்முறை:
* நீரில் இஞ்சியை சிறிது தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின் அதை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
* இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடிப்பது ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

பூண்டு
நுரையீரல் மற்றும் ஆஸ்துமாவிற்கு சிகிச்சை அளிக்க உதவும் மிகவும் சிறப்பான பொருள் தான் பூண்டு. பூண்டில் பல்வேறு மருத்துவ பண்புகள் உள்ளன. இதனால் ஏராளமான நன்மைகளும் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு பற்கள்
* பால்
செய்முறை:
பாலில் பூண்டு பற்களை சிறிது தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி பருக வேண்டும். இந்த பானம் ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

அத்திப்பழம்
அத்திப்பழம் ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய சிறப்பான பொருள். இந்த பழத்தில் ஏராளமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன. உலர்ந்த அத்திப்பழத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும். இப்படி சில மாதங்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், ஆஸ்துமா பிரச்சனை மாயமாக மறையும்.

யூகலிப்டஸ் ஆயில்
நல்ல நறுமணம் கொண்ட யூகலிப்டஸ் ஆயில் ஆஸ்துமாவிற்கான சிறப்பான நிவாரணப் பொருள். இது ஆஸ்துமாவைத் தூண்டும் காரணிகளைக் கட்டுப்படுத்தும். அதற்கு இந்த எண்ணெயை தூங்கும் போது, தலையணை உறையில் சில துளிகள் தடவிக் கொள்ளலாம். இல்லாவிட்டால், சுடுநீரில் சிறிது யூகலிப்டஸ் ஆயிலை சேர்த்து, ஆவி பிடிக்கலாம். தினமும் ஒருமுறை இப்படி ஆவி பிடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

வெங்காயம்
வெங்காயம் ஆஸ்துமாவிற்கான இயற்கை மருத்துவத்தில் சிறப்பாக செயல்படக்கூடியது. இது நுரையீரல் இறுக்கத்தைக் குறைக்கிறது மற்றும் இது ஆன்டி-ஹிஸ்டமைனின் இயற்கை வடிவமாகும். அதற்கு சிறிது வெங்காயத்தை சாலட்டில் பச்சையாக சேர்த்து சாப்பிட வேண்டும். அப்படி தினமும் ஒருமுறை உட்கொண்டு வந்தால், ஆஸ்துமா அறிகுறிகள் மறைய ஆரம்பிக்கும்.

தேன்
மருத்துவ குணம் நிறைந்த பொருள் தான் தேன். இது பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பெரிதும் உதவும் பொருளும் கூட. சுடுநீரில் சிறிது பட்டைத் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், ஆஸ்துமா பிரச்சனை அகலும்.

எலுமிச்சை
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு வைட்டமின் சி குறைபாடு இருப்பதைக் காணலாம். இந்த வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எலுமிச்சையில் அதிகம் உள்ளது. எனவே ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையை பிழிந்து தேன் கலந்து, தினமும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications