Latest Updates
-
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த உறைவு ஏற்படாமல் தப்பிக்க இதெல்லாம் சாப்பிடுங்க…
மிகவும் சிக்கலான நிலையில் இருக்கக்கூடிய கோவிட்-19 நோயாளிகளில், மிகவும் பொதுவான நிகழ்வாக பார்க்கப்படுவது என்றால் இரத்த உறைதல் தான். கோவிட்-19 ஆல் மிகவும் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒரு பொதுவான நிகழ்வாக இது
மிகவும் சிக்கலான நிலையில் இருக்கக்கூடிய கோவிட்-19 நோயாளிகளில், மிகவும் பொதுவான நிகழ்வாக பார்க்கப்படுவது என்றால் இரத்த உறைதல் தான். கோவிட்-19 ஆல் மிகவும் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒரு பொதுவான நிகழ்வாக இது இருப்பதாக உலகெங்கிலும் பல்வேறு சான்றுகள் தெரிவிக்கின்றன. நியூயார்க் நகரத்தின் மருத்துவர்கள் கோவிட்-19 நோயாளிகளின் வெவ்வேறு உடல் உறுப்புகளில் இரத்த தடித்தல் மற்றும் உறைதல் அறிகுறிகள் ஏற்படுவதை கண்டறிந்துள்ளனர். பிரான்சிலிருந்து ஆராய்ச்சியாளர்களும் இதேப்போன்ற நிகழ்வுகளையும் கண்டுள்ளனர்.

பாரிஸில் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்ட, கடுமையாக பாதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளிடையே மிகவும் ஆழமான நரம்பு உறைவது மாதிரியான நிகழ்வுகளை அதிகம் கவனித்துள்ளனர். சிக்கலான கோவிட்-19 நோயாளிகளுக்கு ஆன்டிகோகுலண்ட் சிகிச்சையைப் (இரத்த மெலிவுறச்செய்யும் சிகிச்சை) பரிந்துரைக்கின்றனர்.
இரத்தம் உறைதல் என்பது இதயம் மற்றும் பிற உறுப்புகளை சேதப்படுத்தக்கூடிய மிகவும் ஆபத்தான காரணிகளில் ஒன்றாகும். உண்மையில், பல கோவிட்-19 நோயாளிகளுக்கு, இத்தகைய இரத்த உறைவு பிரச்சனையானது, இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுத்திருப்பதை மருத்துவர்கள் கவனித்துள்ளனர்.

கோவிட்-19 நோயாளிகளுக்கு இரத்த உறைவு ஏன் உண்டாகிறது?
சர்குலேஷன் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சி, இரத்த உறைவுக்கும் கோவிட்-19 க்கும் இடையிலான தொடர்பை அடையாளம் கண்டுள்ளது. கோவிட்-19 நோயாளிகளின் இரத்தத்தில் இரண்டு உயிரணுக்களின் அதிக எண்ணிக்கையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவை, நியூட்ரோபில்ஸ் (ஒரு வகை நோயெதிர்ப்பு உயிரணு) மற்றும் பிளேட்லெட்டுகள் (உறைதலுக்கு காரணமான செல்கள்). இந்த இரண்டு உயிரணுக்களுக்கும் இடையிலான எதிர்வினையின் விளைவாக கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் இரத்த உறைதல் பிரச்சனை இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த உடலியல் எதிர்வினையுடன் தொடர்புடைய மற்ற சிக்கல்கள் என்றால், இரத்த நாளங்களில் அடைப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள திசுக்களில் ஏற்படக்கூடிய சேதம் ஆகியவையாகும்.

இரத்தத்தை மெல்லியதாக்க செய்ய வீட்டில் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள்
பொதுவாகவே, ஒருவர் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினாலும், அவர்களுக்கு அதிகப்படியான கவனிப்பு என்பது தேவைப்படுகிறது. அதிலும், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் மற்றவர்களை காட்டிலும். இவர்கள் தான் இரத்த உறைதல் போன்ற பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. வீட்டிலேயே ஆன்டிகோஆகுலேஷன் மருந்துகள் எடுத்துக் கொள்வதை நிறுத்துமாறு உங்கள் மருத்துவர் அறிவுறுத்தினால், இந்த நிலை குறித்து நீங்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உங்கள் உணவில் சில இயற்கையாகவே இரத்தத்தை மெல்லியதாக்க சில உணவுகளை சேர்ப்பது குறித்து உங்கள் மருத்துவருடன் கலந்துரையாடுங்கள். கீழே, இயற்கையாகவே, இரத்தத்தை மெல்லியதாக்க உதவக்கூடிய சில உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டள்ளன. மருத்துவருடன் ஆலோசித்து இவற்றை எடுத்துக் கொள்வது குறித்து முடிவு செய்யுங்கள்.

மஞ்சள்
நம் உணவில் மிக முக்கிய பாரம்பரிய மசாலாகளில் ஒன்று மஞ்சள். அனைத்து வித சமையலிலுமே மஞ்சள் சேர்க்கப்படுகிறது. இது உங்களுக்கு இயற்கையான ஆன்டிகோகுலண்டாக செயல்படக்கூடும். இது இரத்த உறைவுக்கு காரணமான சில நொதிகளின் செயல்பாட்டைத் தடுக்கும் குர்குமின் என்ற பாலிபினாலுடன் சேர்ந்து செயல்படுகிறது.

சிவப்பு மிளகாய்
இதில் இரத்தத்தை மெல்லியதாக்க உதவக்கூடிய சாலிசிலேட் நிறைந்து காணப்படுகிறது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில், இரத்த நாளத்தில் உள்ள கட்டிகளால் வகைப்படுத்தப்படும் த்ரோம்போசிஸைக் கையாள இந்த சிவப்பு மிளகாய் உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது இரத்த சர்க்கரை மற்றும் லிப்பிட் அளவையும், உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. சிவப்பு மிளகாய், உடல் பருமன் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பது பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

இலவங்கப்பட்டை
அனைவரது வீட்டு சமையலையிலும் இலவங்கப்பட்டை சாதாரணமாக காணப்படக்கூடிய ஒரு பொருள் தான். ஆனால், அதில் உள்ள கூமலின் மிகவும் சக்திவாய்ந்த ஆன்டிகோகுலண்டாக செயல்படக்கூடியது. உண்மையில், இது வார்ஃபரின் போன்ற இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இஞ்சி
சிவப்பு மிளகாய் போன்றே, இஞ்சியும் அதன் தண்டுகளில் சாலிசிலேட் எனப்படும் ஆன்டிகோகுலண்ட் பண்புகளை கொண்டுள்ளது. இந்த கலவை மிதமான ஆன்டிகோகுலண்டாக செயல்பட்டு, உறைதல் கோளாறுகள், இரத்தப்போக்கு சிக்கல்கள் போன்றவற்றை சரிசெய்திடும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. முக்கியமாக, நீங்கள் வார்ஃபரின் எடுத்துக் கொள்பவராக இருந்தால், இஞ்சி மற்றும் இஞ்சி சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்த்திடவும்.

பூண்டு
பூண்டு இயற்கையாகவே இரத்தத்தை மெல்லியதாக்கும் ஆற்றல் கொண்டது. இது த்ரோம்போசிஸுக்கு எதிராக, பயனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில், இந்த நிலையில் அவதிப்பட்டால் நீங்கள் தொடர்ந்து பூண்டு எடுத்துக் கொள்ளலாம் என்று நிபுணர்களே பரிந்துரைக்கின்றனர். கூடுதலாக, வார்ஃபரின் அல்லது பிற வாய்வழி எதிர்விளைவு மருந்துகளுடன் பூண்டு சாற்றை எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது என்றும் ஆராய்ச்சி கூறுகிறது. இருப்பினும், இதை உங்கள் இருதய மருத்துவரிடம் ஆலோசித்து விட்டு எடுத்துக் கொள்வது சிறந்தது.



Click it and Unblock the Notifications