Latest Updates
-
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க..
சாப்பிட்டதும் இத பண்ணாதீங்க... இல்லன்னா புற்றுநோய் சீக்கிரம் வந்துடும்...
உணவுக்கு பின் சிகரெட் பிடிக்கும் போது, சிறு குடலானது உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கு பதிலாக, சிகரெட்டில் உள்ள நிக்கோட்டினை அதிகமான உறிஞ்சும்.
புகைப்பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் அனைவருமே நன்கு அறிவோம். சாதாரண சூழ்நிலைகளில் புகைப்பிடிப்பது ஒருபோதும் பரிந்துரைக்கப்படுவதில்லை மற்றும் இது மிகவும் கடுமையான உடல்நல அபாயங்களைக் கொண்டுள்ளது. யுனைடெட் கிங்டத்தின் தேசிய சுகாதார மையத்தின் கூற்றுப்படி, புகைப்பிடிப்பது என்பது இங்கிலாந்தில் ஏற்படும் இறப்பு மற்றும் நோய்க்கான மிக முக்கியமான மற்றும் முதன்மையான காரணங்களில் ஒன்றாகும். மேலும் இந்த கூற்று உலகெங்கிலும் கூட பொருந்தும்.

2002 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின் படி, இந்தியாவில் வயது வந்த ஆண்களில் 70% பேர் புகைப்பிடிக்கிறார்கள். 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் புகைபிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை 108 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. அன்றிலிருந்து இன்று வரை இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புகைப்பிடிப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள்
சிகரெட் மன அழுத்தத்தில் இருக்கும் ஒருவருக்கு தற்காலிகமாக நிவாரணம் அளிக்க உதவுகிறதே தவிர, இந்த ஆரோக்கியமற்ற பழக்கம் சுவாச பிரச்சனைகள், இதய பிரச்சனைகள், உடல் பருமன் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, நுரையீரல், வாய் அல்லது பிற உறுப்புக்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கும் வழிவகுக்குகிறது. சொல்லப்போனால் புற்றுநோயால் இறந்த பலரைப் பார்த்தால், அவர்கள் புகைப்பழக்கம் கொண்டவர்களாகவே இருப்பர்.

உணவுக்கு பின்னான புகை மிகவும் ஆபத்தானது
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அனைவருமே, சாப்பிட்ட பிறகு சிகரெட் பிடிக்க வேண்டுமென்ற எண்ணம் தூண்டப்படுவதை ஒப்புக் கொள்வார்கள். மேலும் சிகரெட் பழக்கத்தைக் கைவிட முயற்சிப்பவர்களுக்கு கூட, உணவு உண்ட பிறகு சிகரெட் பிடிக்க வேண்டுமென்ற எண்ணம் அளவுக்கு அதிகம் எழுவதாகவும் கூறுவார்கள். இருப்பினும், வழக்கமான புகைப்பழக்கத்தை விட உணவுக்கு பிறகு புகைப்பிடிப்பதே மிகவும் ஆபத்தானது.

உணவு உண்ணும் போது என்ன நடக்கிறது?
உணவை உண்ணும் போது, உடல் அதை ஜீரணிக்க வேண்டும். அதாவது நமது உடல் உணவை உறிஞ்சக்கூடிய ஒரு வடிவமாக மாற வேண்டும். நாம் வாயில் உணவை வைக்கும் போதே செரிமான செயல்முறை ஆரம்பமாகிறது. அதில் வாயில் உள்ள எச்சிலில் இருந்து நொதிகள் இந்த செயல்முறையை ஆரம்பிக்கின்றன. அதன் பின் நமது வயிறு உணவை சைம் எனப்படும் சாறு போன்ற பொருளாக மாற்றுகிறது மற்றும் இந்த பகுதி தான் சிறு குடல்களாகும். இங்கு தான் உறிஞ்சுதல் செயல்முறை ஆரம்பமாகிறது. நாம் உண்ணும் உணவு நமது வயிற்றி சுமார் 4 மணிநேரம் இருக்கும். அதன் பின் சிறுகுடலில் 3-4 மணிநேரம் இருக்கும்.

உணவுக்கு பின் சிகரெட் பிடித்தால் என்ன நடக்கும்?
உணவு உண்ட பின் சிகரெட் பிடித்தால், உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சுவது குறையும். முன்பு கூறியது போல, செரிமான செயல்முறையானது உணவு உண்ண ஆரம்பிக்கும் போதே தொடங்குகிறது. சிறு குடலில் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் செயல்முறை நடக்கிறது. ஆனால் உணவுக்கு பின் சிகரெட் பிடிக்கும் போது, சிறு குடலானது உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கு பதிலாக, சிகரெட்டில் உள்ள நிக்கோட்டினை அதிகமான உறிஞ்சும்.

செரிமான மண்டலம்
உடலின் மிக முக்கியமான பகுதி செரிமான மண்டலம் ஆகும். ஏனெனில் இது முழு உடலிலும் இயங்குகிறது. முக்கியமாக இந்த செரிமான மண்டலம் உணவு உண்ட பின் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவதால், உணவுக்கு பின் சிகரெட் பிடிக்கும் போது, சிகரெட்டில் இருக்கும் நிக்கோட்டின் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜனுடன் பிணைகிறது. மேலும் சிகரெட் பிடிக்கும் போது வெளியாகும் ப்ரீ-ராடிக்கல்களால், குடல்கள் மற்றும் உடலின் பிற உள்ளுறுப்புகள் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகவே தான் உணவுக்கு பின் சிகரெட் பிடிப்பது குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை பன்மடங்கு அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பத்து மடங்கு அபாயகரமானது
வழக்கமாக புகைப்பிடிப்பதை விட, ஒருவர் உணவுக்கு பின் பிடிக்கும் ஒரு சிகரெட் பத்து சிகரெட்டுகளை ஒன்றாக புகைப்பதற்கு சமமாம். இந்த பழக்கத்தை இப்படியே ஒருவர் வைத்திருந்தால், அது அந்த நபருக்கு புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். ஆகவே புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள். குறிப்பாக உணவுக்கு பின் புகைப்பதை அறவே தவிர்த்திடுங்கள்.



Click it and Unblock the Notifications
