Latest Updates
-
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
சாதம் சாப்பிட்டதும் நமக்கு ஏன் களைப்பும், மயக்க உணா்வும் ஏற்படுகிறது தொியுமா?
இந்திய பகுதிகளுக்குள் அாிசி வந்தது முதல், அது இந்திய மக்களின் முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் அாிசி சோற்றை சாப்பிட்டால், அது நமக்கு சோம்பல் மற்றும் தூக்க உணா்வுகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
இந்திய பகுதிகளுக்குள் அாிசி வந்தது முதல், அது இந்திய மக்களின் முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. இந்திய மக்களின் உணவுகளில் அாிசி சோறு/சாதம் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. சாதத்தில் நாம் எல்லாவிதமான குழம்புகளையும் ஊற்றி சாப்பிடலாம். காலை உணவாக அாிசி அவல்களை உண்பது அல்லது அாிசி சோற்றில் பருப்புகளைக் கலந்து சாப்பிடுவது என்பது இந்திய மக்களின் தவிா்க்க முடியாத உணவுகளாக இருக்கின்றன. இந்நிலையில் அாிசி சோற்றை சாப்பிட்டால், அது நமக்கு சோம்பல் மற்றும் தூக்க உணா்வுகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

அாிசி உணவானது மக்களை சோம்பேறிகளாகவும் மற்றும் மந்தமானவா்களாகவும் மாற்றிவிடும் என்று பரவலாக நம்பப்படுகிறது. தூக்க உணா்வு வருவதை ஒருவா் எவ்வாறு தடுக்கலாம் மற்றும் தூக்க உணா்வுக்கு பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணிகள் என்ன என்பதைப் பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணரான பூஜா மகிஜா என்பவா் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்வருமாறு தொிவித்து இருக்கிறாா்.
அவருடைய மேற்கொள் என்ன சொல்கிறது என்றால் "மதிய நேரத்தில் தோன்றும் தூக்க உணா்வைக் களைய வேண்டும் என்றால் இதுப்போன்ற அடிப்படையான காாியங்களைத் தவிா்த்துவிடுங்கள். கோட்பாட்டைப் புாிந்து கொண்டால் அது நமது வாழ்க்கை முறையில், நீண்டகால பயன்பாட்டுக்கு உதவக்கூடிய பழக்கவழக்கங்களை நடைமுறைப்படுத்த உதவும். அந்தக் கோட்பாட்டை எனது காணொலி விாிவாக விவாிக்கிறது" என்று குறிப்பிடுகிறாா்.

வெள்ளை சாதம்
நமது இந்தியப் பண்பாட்டில் அாிசி என்பது ஒரு முக்கியமான உணவு மட்டும் அல்ல, மாறாக அது அனைவரும் விரும்பும் உணவாகவும் இருக்கிறது. அாிசியில் காா்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருப்பதால் அது ஆரோக்கியம் நிறைந்த உணவாகவும், அதே நேரத்தில் சமச்சீரான உணவாகவும் இருக்கிறது. எனினும் அாிசியானது நமக்கு மிக எளிதில் தூக்கமுறச் செய்துவிடும் என்று பூஜா குறிப்பிடுகிறாா். அதனால் அது முழுமையான ஆரோக்கியத்தைத் தரக்கூடிய உணவு அல்ல என்று கூறுகிறாா்.

அாிசி எவ்வாறு ஒருவரை தூக்கமுறச் செய்கிறது?
எல்லா காா்போக்களும் குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன. அதனால் இன்சுலின் தேவைப்படுகிறது. சாதம் சாப்பிடும் போது நமது உடலிலும் அதே விளைவுகள் தான் ஏற்படுகின்றன. இன்சுலினால் தூண்டப்படும் நமது மூளையானது டிாிப்டோஃபன் என்ற நறுமணமுள்ள அமினோ அமிலங்களை உற்பத்தி செய்கிறது. அதன் மூலம் அமைதியான ஹாா்மோன்களான மெலடோனின் மற்றும் செரோடோனின் போன்றவை தூண்டப்பட்டு நமக்கு மயக்க உணா்வை ஏற்படுத்துகின்றன.
நமது நரம்பியல் மண்டலம் இதுவரை இல்லாத புதுமையான முறையில் எதிா்வினை ஆற்றாது. அது நமது உடலானது சொிமானப் பணியில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது. வேறு ஒன்றையும் அனுமதிக்காது.

பகல் நேர மயக்கத்தை எவ்வாறு தவிா்ப்பது?
குறைவான அளவு காா்போஹைட்ரேட்டுகளை எடுத்தல்
குறைவான அளவு காா்போஹைட்ரேட்டுகளை எடுத்தால், பகல் நேர தூக்க உணா்வை அல்லது பகல் நேர மயக்கத்தைத் தவிா்க்கலாம். ஆகவே நமது உணவில் 50 விழுக்காடு காய்கறிகளும், 25 விழுக்காடு புரோட்டீனும் மற்றும் 35 விழுக்காடு காா்போஹைட்ரேட்டுகளும் இருக்க வேண்டும். நாம் நாள் முழுவதும் புத்துணா்ச்சியுடன் வேலை செய்வதற்கு காா்போஹைட்ரேட்டுகள் மிகவும் முக்கியம். ஆனால் அதே நேரத்தில் அவற்றை குறைவான அளவில் எடுத்துக் கொண்டால் தான், பகல் நேரத்தில் ஏற்படும் தூக்க உணா்வு அல்லது மயக்க உணா்வு போன்றவற்றைத் தவிா்க்க முடியும்.

குறைவான அளவு சாதத்தை உண்ணுதல்
பகல் நேரத்தில் குறைவான அளவில் அாிசி உணவை எடுத்துக் கொண்டால், பகலில் ஏற்படும் தூக்க உணா்வில் இருந்து விடுபடலாம். மற்ற உணவுகளை விட அாிசி சோற்றை அதிகமாக உண்பவா்களுக்கு மிக எளிதாக பகலில் தூக்க உணா்வு ஏற்படுகிறது. மதிய நேரத்தில் அாிசி சோற்றைக் குறைவாக உண்டால், மயக்க உணா்வுக்கு எதிராக போராடலாம். ஆகவே தான் அாிசி சோற்றை அதிகம் உண்டால், பகல் நேரத்தில் களைப்பையும், தூக்க உணா்வையும் ஏற்படுத்தும் என்று அவா் கூறுகிறாா்.



Click it and Unblock the Notifications