For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த சம்மர்ல நீங்க ஏன் வெள்ளை வெங்காயம் சாப்பிடணும் தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க...!

வெள்ளை வெங்காயம் நார்ச்சத்து மற்றும் ப்ரீபயாடிக்குகளின் வளமான மூலமாகும், இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

|

இந்திய சமையலில் தவிர்க்க முடியாத ஒரு உணவுப்பொருள் வெங்காயம். ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, வெள்ளை வெங்காயம் வைட்டமின்-சி, ஃபிளாவனாய்டுகள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸுடன் சூப்பர் ஆரோக்கியமானது. வெங்காயத்தில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள், பார்கின்சன், பக்கவாதம் மற்றும் இருதய நோய்கள் போன்ற சில நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். இவை தவிர, வெங்காயத்தில் ஃபைபர், ஃபோலிக் அமிலம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு முகவர்கள் உள்ளன.

Why it is important to have white onions in summer

கோடை காலத்தில் நமது அன்றாட உணவில் தேவையான மாற்றங்களைச் செய்வது முக்கியம். இதனால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த கோடை வானிலையில், வெங்காயம் அதிகமாக சாப்பிடும்படி எப்போதும் கூறப்படுகிறது. ஏனெனில் இது வெப்பத்தை விலக்கி வைக்க உதவுகிறது. வெள்ளை வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள், அதை எவ்வாறு பயன்படுத்துவது, ஏன் இதுபோன்ற உள்ளூர் இந்திய உணவுப் பொருட்களுக்குச் செல்வது முக்கியம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள்

வெள்ளை வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள்

வெள்ளை வெங்காயம் மாலை வீக்கம், இரவு வியர்வையை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், குடல் பாக்டீரியா பிரச்சனையை குறைக்கவும் இது உதவுகிறது. ஏனெனில், வெள்ளை வெங்காயம் ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்படுகிறது மற்றும் உங்கள் வயிறு மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது .

MOST READ: கொரோனாவிடமிருந்து உங்க குழந்தைய பாதுகாக்க அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிக்கணும்?

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

வெள்ளை வெங்காயத்தில் செலினியம் இருப்பதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை நிர்வகிக்க ஒரு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. வைரஸ் மற்றும் ஒவ்வாமை நிலைகளை நிர்வகிப்பதில் செலினியம் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்

வெள்ளை வெங்காயத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் சேர்மங்கள் உள்ளன. இவை வீக்கத்தை எதிர்த்துப் போராடுகின்றன, ட்ரைகிளிசரைட்களைக் குறைக்கின்றன மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கின்றன. இவை அனைத்தும் உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல், வெள்ளை வெங்காயத்தின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த உறைவுகளிலிருந்து பாதுகாக்கவும் உதவும்.

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கிறது

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கிறது

வெள்ளை வெங்காயத்தில் உள்ள குரோமியம் மற்றும் சல்பர் போன்ற உள்ளடக்கங்கள் இரத்த சர்க்கரையை சீராக்க மற்றும் இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகின்றன. நீரிழிவு அல்லது பிரீடியாபயாட்டிஸ் உள்ளவர்களுக்கு வெள்ளை வெங்காயத்தை வழக்கமான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நுகர்வு நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. கூடுதலாக, வெங்காயத்தில் காணப்படும் சில சேர்மங்களான குர்செடின் மற்றும் சல்பர் கலவைகள் ஆண்டிடியாபடிக் விளைவுகளைக் கொண்டுள்ளன.

MOST READ: சமையலுக்கு பயன்படுத்தும் இந்த பருப்பு வகைகள் நம்மை கொரோனாவிலிருந்து பாதுகாக்குமாம் தெரியுமா?

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

வெள்ளை வெங்காயம் நார்ச்சத்து மற்றும் ப்ரீபயாடிக்குகளின் வளமான மூலமாகும், இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். வெங்காயம் குறிப்பாக ப்ரீபயாடிக் இன்யூலின் மற்றும் பிரக்டூலிகோசாக்கரைடுகளில் நிறைந்துள்ளது. மேலும் வழக்கமான நுகர்வு மூலம், உங்கள் குடலில் நட்பு பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.

உங்கள் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயத்தை எவ்வாறு சேர்ப்பது?

உங்கள் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயத்தை எவ்வாறு சேர்ப்பது?

வெப்பத்தை எளிதில் சமாளிக்க கரும்பு வினிகருடன் சாலட் வடிவில் நீங்கள் வெள்ளை வெங்காயத்தை எடுத்துக்கொள்ளலாம். இதை நீங்கள் மில்லட் பக்ரியுடன் பச்சையாகவும் சாப்பிடலாம். சாம்பார், குழம்பு போன்ற சமையல் உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். ஏனெனில் இது மாலை வீக்கம் மற்றும் இரவு வியர்த்தலைக் கட்டுப்படுத்த உதவும். வெள்ளை வெங்காயத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

MOST READ: உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாக்க இந்த உணவுகள சாப்பிடுங்க...!

வேறு என்ன?

வேறு என்ன?

மாறுபட்ட உணவு கலாச்சாரத்திற்குச் செல்வதன் பின்னணியில் உள்ள யோசனை மண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மற்றும் உணவுப் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பது. மேலும் உங்கள் ஆரோக்கியத்தை மிகவும் இயற்கையான, விவேகமான மற்றும் மலிவான வழியில் பாதுகாப்பதாகும்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

வெள்ளை வெங்காயம் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் பல ஆரோக்கிய நன்மைகளுக்கிடையில், இது நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தக்கூடும். இது தவிர, வெள்ளை வெங்காயத்தில் சிவப்பு வெங்காயத்தை விட லேசான சுவை இருக்கும். இது கோடைகாலத்தில் உணவில் சேர்க்க எளிதாக்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why it is important to have white onions in summer

Here we are talking about the Why it is important to have white onions in summer.
Story first published: Saturday, April 24, 2021, 13:05 [IST]
Desktop Bottom Promotion