Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உடம்புல இந்த சத்து அதிகமா இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும் தெரியுமா?
அளவுக்கு அதிகமாக நார்ச்சத்தை ஒருவர் எடுத்தால், அது வாய்வுத் தொல்லை, உப்புசம் மற்றும் மலச்சிக்கலைக் கூட உண்டாக்கும்.
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதேப்போல் அளவுக்கு அதிகமாகவும் ஊட்டச்சத்துக்களை எடுக்கக்கூடாது. கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புக்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்ற எந்த ஒரு சத்துக்களும் உடலில் அளவுக்கு அதிகமாக இருப்பது நல்லதல்ல. தேவைக்கு அதிகமான அளவு சத்துக்களை எடுத்தால், அதனால் பல்வேறு பிரச்சனைகளும், நோய்களும் தான் ஏற்படக்கூடும்.
அதிலும் அளவுக்கு அதிகமாக நார்ச்சத்தை ஒருவர் எடுத்தால், அது வாய்வுத் தொல்லை, உப்புசம் மற்றும் மலச்சிக்கலைக் கூட உண்டாக்கும். இப்படிப்பட்ட அசௌகரியங்களால் அவஸ்தைப்படுபவர்கள் அதிலிருந்து விடுபட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். இக்கட்டுரையில் நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள், அதிகளவிலான நார்ச்சத்து எடுப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் விரிவாக காண்போம்.

அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
ஒரு நாளைக்கு குறைந்தது 70 கிராம் நார்ச்சத்தை நாம் சாப்பிட வேண்டும். இதற்கு அதிகமான அளவில் உட்கொள்ளும் போது தான் பிரச்சனைகள் எழுகிறது. அதிலும் நீங்கள் வெஜிடேரியனாக இருந்தால், இன்னும் சிரமம். அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளாவன:
* பருப்பு வகைகள்
* முழு தானியங்கள்
* சில பழங்கள் மற்றும் காய்கறிகள்
* விதைகள் மற்றும் நட்ஸ்

பாலினம் மற்றும் வயது
பாலினம் மற்றும் வயதுக்கு ஏற்ப, உட்கொள்ள வேண்டிய நார்ச்சத்து அளவு:
* வயது வந்த பெண்களுக்கு ஒரு நாளைக்கு 25 கிராம்
* வயது வந்த ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 38 கிராம்
* முதியவர்கள் (50 வயதிற்கு மேற்பட்டவர்கள்)
- பெண்கள் - 21 கிராம்
- ஆண்கள் - 30 கிராம்

அதிக நார்ச்சத்தின் அறிகுறிகள்:
நார்ச்சத்து உட்கொள்வது குடலியக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் தான் அதிகளவிலான நார்ச்சத்து மலச்சிக்கலை ஏற்படுத்தும் மற்றும் செரிமான மண்டலத்திற்கு நல்லதல்ல. ஆகவே ஒருவர் அதிகளவிலான நார்ச்சத்தின் எச்சரிக்கை அறிகுறிகளை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். கீழே அதிகப்படியான நார்ச்சத்து சாப்பிடுவதைக் குறிக்கும் சில பொதுவான அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன:
* வாய்வு
* சாப்பிடாமலேயே வயிறு நிறைந்த உணர்வுடன் இருப்பது
* உடல் எடை அதிகரிப்பு
* குமட்டல்
* வீக்கம்
* வயிற்று வலி
* மலச்சிக்கல்
* நீரிழப்பு/உடல் வறட்சி

அதிக நார்ச்சத்திற்கான சிகிச்சைகள்
உடலில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தின் அளவைக் குறைக்க அல்லது சமாதானப்படுத்த பல வழிகள் உள்ளன. அந்த வழிகளை மேற்கொண்டால் உடலில் அதிகளவு நார்ச்சத்து சேர்வதைத் தடுக்கலாம். இப்போது உடலில் உள்ள அதிக நார்ச்சத்தைத் தடுக்க உதவும் வழிகளைக் காண்போம்.

அதிக நீர் பருகுங்கள்
தண்ணீர் மற்றும் ஜூஸ் போன்ற திரவங்களை அதிகமாக குடிக்க முயற்சிக்க வேண்டும். தினமும் போதுமான அளவு நீரைக் குடிக்க முயற்சித்தாலே, இதை சரிசெய்யலாம். ஏனெனில் போதுமான நீரைக் குடிக்கும் போது, அது உடலில் உள்ள நார்ச்சத்தின் அளவையும் சமப்படுத்தும். அதிக நார்ச்சத்து உள்ள டயட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.

குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள்
குறைவான நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வது உடலில் உள்ள நார்ச்சத்தின் அளவைக் குறைத்து சமநிலையைப் பராமரிக்க உதவும். இத்தகைய உணவுப் பொருட்களில் நன்கு சமைத்த இறைச்சிகள், கேனில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், வெள்ளை பிரட், வெள்ளை அரிசி போன்றவை அடங்கும்.

உடல் செயல்பாடுகளை அதிகரிக்கவும்
உடற்பயிற்சி உடலுக்கு பல வகையில் நன்மை அளிக்கிறது. இது நோய்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பதிலும் பங்களிக்கிறது. உடலில் நார்ச்சத்து அதிகமாக இருந்தால், உடற்பயிற்சியை சற்று அதிகமாக செய்யுங்கள். ஒருவேளை முடியாவிட்டால், மருத்துவரை அணுகுங்கள்.

வீக்கத்தை உண்டாக்கும் உணவுகளைத் தவிர்க்கவும்
குறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள் உடலில் வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். அதுப்போன்ற உணவுப் பொருட்களாவன சூயிங் கம், பீன்ஸ், ஓட்ஸ், பால் பொருட்கள், ஆல்கஹால் போன்றவை. இந்த உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது, உடலில் அதிக நார்ச்சத்தினால் ஏற்படும் வீக்கத்தைத் தடுக்கும். எனவே இந்த மாதிரியான உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது புத்திசாவித்தனம்.

முடிவு
நார்ச்சத்துக்களில் இரண்டு வகைககள் உள்ளன. அவை கரையக்கூடிய மற்றும் கரையாதவை. இவை இரண்டுமே மனித உடலில் ஜீரணிப்பதற்கு கடினமாக இருக்கும். எனவே உங்கள் உணவில் சரியான அளவு நார்ச்சத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
