Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
இந்த காய்கறிகள் சாப்பிட்டவுடன் உங்கள் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஏன் தெரியுமா?
சாப்பிட்டு முடித்தவுடன் பலருக்கும் உடனடியாக வீக்கம் அல்லது வாயுத்தொல்லை ஏற்படும் வாய்ப்புள்ளது. அதற்கு காரணம் அவர்கள் சாப்பிடும் உணவுகள்தான்.
சாப்பிட்டு முடித்தவுடன் பலருக்கும் உடனடியாக வீக்கம் அல்லது வாயுத்தொல்லை ஏற்படும் வாய்ப்புள்ளது. அதற்கு காரணம் அவர்கள் சாப்பிடும் உணவுகள்தான். பொதுவாக துரித உணவுகளும், செயற்கை குளிர்பானங்களும்தான் வயிறு வீக்கத்தையும், வாயுக்கோளாறையும் ஏற்படுத்தும் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் சில காய்கறிகள் கூட வயிறு வீக்கத்தை ஏற்படுத்தும்.

உண்மைதான், சில காய்கறிகள் சாப்பிட்டவுடன் வயிறு வீக்கத்தை ஏற்படுத்தும். காய்கறிகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருந்தாலும் அவற்றால் இந்த பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. காய்கறிகள் ஏன் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது, என்னென்ன காய்கறிகள் உங்களுக்கு வயிறு வீக்கம் மற்றும் வாயுதொல்லையை ஏற்படுத்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வயிறு வீக்கம்
வயிறு வீக்கமானது உங்களுக்கு அசௌகரியத்தையும், வலியையும் ஏற்படுத்தும். நீங்கள் சாப்பிடும் சில காய்கறிகளில் இருக்கும் சில ஊட்டச்சத்துக்கள் உங்களின் வயிற்றில் வாயுப்பிரச்சினை உருவாக காரணமாக அமைகிறது. முட்டைகோஸ் வகையை சார்ந்த காய்கறிகள்தான் இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த வகை காய்கறிகளில் சில சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது, இவை குடலில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து வாயுவை உருவாக்குகிறது. இந்த காய்கறிகளில் இருக்கும் சர்க்கரையை உங்கள் உணவுப்பாதையால் முழுமையாக உடைக்க முடியாது.

நார்ச்சத்துக்கள்
நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவுகள் பலவீனமான செரிமான மண்டலம் உள்ளவர்களுக்கு எளிதில் வயிறு வீக்கத்தையும், வாயுக்கோளாறையும் ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் புதிதாக அதிக நார்ச்சத்து இருக்கும் உணவுகளை எடுத்துக்கொண்டால் உங்களுக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக பச்சைகாய்கறிகள் சாப்பிடுவது குடலின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். எந்தெந்த காய்கறிகள் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

பீன்ஸ்
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் உங்களின் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதற்கு காரணம் அதிலிருக்கும் புரோட்டின் மேலும் இதில் சர்க்கரை மற்றும் நார்ச்சத்துக்கள் இரண்டுமே உள்ளது, நமது செரிமான மண்டலத்தால் இவ்வளவு ஊட்டச்சத்துக்களை ஒரே நேரத்தில் சமாளிக்க இயலாது. இவை பெருங்குடலில் நுழையும்போது அங்கிருக்கும் பாக்டீரியாக்களுடன் சேர்ந்து இவை வீக்கத்தை ஏற்படுத்தும்.

பட்டாணி
பட்டாணி அனைவருக்கும் பிடித்த அதேசமயம் ஆரோக்கியமான ஒரு பொருளாகும். ஆனால் இது உங்கள் வயிறுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும். இதுவும் பீன்ஸ் வகைகளை சேர்ந்ததுதான், இதனை நமது உடலால் முழுமையாக உறிஞ்ச முடியாது.

காலிப்ளவர்
கார்போஹைட்ரேட்டுகளை பெறுவதற்கு காலிப்ளவர் ஒரு மிகச்சிறந்த பொருளாகும். முட்டைகோஸ், ப்ரோக்கோலி போன்று இதுவும் எளிதில் நமது உடலால் உறிஞ்சப்படக்கூடிய பொருள் அல்ல. இதனை நன்கு வேகவைத்து சாப்பிடுவது இதிலிருக்கும் நார்சத்துக்களை மென்மையானதாக மாற்றும். இதனை எப்பொழுதும் குறைவான அளவில் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் செரிமான மண்டலத்திற்கு நல்லது.

காளான்
காளான் உங்கள் செரிமான மண்டலஹேல் அசௌகரியத்தை ஏற்படுத்த காரணம் அதிலிருக்கும் சர்க்கரைதான். காளான்களில் ராஃபினோஸ் என்ற செரிமானம் அடையாத சர்க்கரை உள்ளது, இது பெருங்குடலில் நொதியாக மாறுகிறது. இதனால் வாயுக்கோளாறு மற்றும் வீக்கம் ஏற்படலாம்.

கார்ன்
கார்ன் உங்களின் அனைத்து உணவுகளுடனும் எளிதில் கலந்து விடக்கூடிய ஒன்றாகும். ஆனால் மற்ற காய்கறிகளை விட உங்கள் செரிமான மண்டலத்தில் அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும் பொருள் என்றால் அது கார்ன்தான். ஏனெனில் இதில் எளிதில் உடைக்க முடியாத கார்போஹைட்ரேட்டுகள் இருக்கிறது, இது உங்கள் வயிற்றில் GI பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து வாயுக்கோளாறை உருவாக்குகிறது.



Click it and Unblock the Notifications