Latest Updates
-
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும்
கொரோனா குறித்த அடுத்த அதிர வைக்கும் செய்தி: காற்றில் பரவும் கொரோனா- தடுப்பது எப்படி?
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளியின் இருமல், தும்மல் வழியாக மட்டுமின்றி, பேசும் போதும் காற்றின் நீர்த்துளிகள் வழியே மக்கள் மத்தியில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு நீண்ட காலமாக நினைத்தது.
உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் நாவல் கொரோனா வைரஸ் தற்போது SARS-CoV-2 என அழைக்கப்படுகிறது. சமீபத்தில் கொரோனா வைரஸ் காற்றில் பரவக்கூடும் என்ற சில விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, காற்றில் உள்ள சிறிய துகள்கள் மூலம் கூட வைரஸ் மக்களை பாதிக்கக்கூடும் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. முன்னதாக, புதிய கொரோனா வைரஸால் ஏற்படும் நோயான கோவிட்-19 வான்வழி பரவுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பால் 2020 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி உலகளாவிய பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்ட கொரோனா வைரஸால் இன்று வரை 11, 343,890 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் உலகளவில் குறைந்தது 531, 789 பேர் இறந்துள்ளனர்.
பிரபல இதழின் அறிக்கையின் படி, 32 நாடுகளில் உள்ள சுமார் 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் அந்த கடிதத்தில் கொரோனா பரவும் முறைகள் குறித்த பரிந்துரைகளை திருத்துமாறு ஐ.நா சுகாதார நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் உலக சுகாதார நிறுவனம் இதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறியது.

கொரோனா காற்றின் வழியே பரவுமா?
பொதுவாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளியின் இருமல், தும்மல் வழியாக மட்டுமின்றி, பேசும் போதும் காற்றின் நீர்த்துளிகள் வழியே மக்கள் மத்தியில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு நீண்ட காலமாக நினைத்தது. ஆனால் சமீபத்தில் காற்றின் பெரிய நீர்த்துளிகள் வழியே மட்டுமின்றி, 5 மைக்ரான்களைக் காட்டிலும் மிகச்சிறிய துளிகள் வழியாகவும் பரவுவதற்கு சாத்தியம் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

காற்றின் வழியே பரவும் கொரோனா போன்ற நோய்த்தொற்றுக்களைத் தடுப்பது எப்படி?
* மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதனால் காற்றின் வழியே பரவும் கிருமிகளுடன் தொடர்பு கொள்ளும் அபாயம் குறையும் மற்றும் தடுக்கப்படும்.
* அவசியம் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.
* நல்ல காற்றோட்டம் உள்ள அறைகள் காற்றை வேகமாக சுத்தப்படுத்த உதவுகின்றன.
* தும்மல் அல்லது இருமலின் போது கட்டாயம் கைக்குட்டைகள் அல்லது முழங்கைகளைக் கொண்டு மறைக்க வேண்டியது அவசியம்.
* கூடுதலாக, தேவையில்லாமல் முகம், மூக்கு மற்றும் கண்களைத் தொடாதீர்கள்.

காற்றின் வழியே பரவும் நோய்கள் யாவை?
காற்றின் வழியே பரவும் நோய்கள் என்பவை சிறிய கிருமிகளான பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் போன்றவை காற்றில் பரவி ஒருவரைத் தாக்குவதாகும். இந்த கிருமிகளானது பாதிக்கப்பட்டவர்கள் தும்மல், இருமல் மற்றும் பேசும் போது கூட பரவக்கூடும். சில சமயங்களில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சளி மூலமாகவும் நோய் பரவக்கூடும்.

காற்றில் பரவும் நோய்கள்:
* சாதாரண சளி
* இன்ப்ளூயன்ஸா
* தட்டம்மை
* சின்னம்மை
* காசநோய்
* பொன்னுக்கு வீங்கி
* கக்குவான் இருமல்
இவற்றில் பல வான்வழி நோய்களின் அறிகுறிகள் ஒரே மாதிரியானவையாக சளி, காய்ச்சல், இருமல், தொண்டைப்புண், மூக்கு ஒழுகல், குளிர், தசை மற்றும் உடல் வலி, களைப்பு, தலைவலி, மார்பு நெரிசல், சைனஸ் பிரச்சனை போன்றவற்றை கொண்டிருக்கும்.

கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள்
வான்வழி பரவும் நோய்களை முற்றிலும் தவிர்ப்பது சாத்தியமில்லை என்றாலும், நோய்வாய்ப்படும் அபாயத்தைக் குறைக்க ஒருசில நடவடிக்கைகளை எடுக்கலாம். கீழே அவை கொடுக்கப்பட்டுள்ளன.
* குறைந்தது 20 நொடிகளுக்கு கைகளை நன்கு கழுவுங்கள்.
* பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அறிகுறிகள் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்திடுங்கள்.
* உடல்நிலை சரியில்லாத போது வீட்டிலேயே இருங்கள்.
* நீங்கள் மற்றவர்களுடன் இருக்கும் போது, கிருமிகள் பரவாமல் இருக்க அல்லது அந்த கிருமிகளை சுவாசிப்பதைத் தடுக்க முகக்கவசம் அணியுங்கள்.
* தும்மல் அல்லது இருமலின் போது வாய் மற்றும் மூக்கு பகுதியை மூடுங்கள்.
* அசுத்தமான கைகளால் முகம் அல்லது மற்றவர்களைத் தொடாதீர்கள்.

தடுப்பூசிகள் அவசியம்
காற்றின் மூலம் பரவும் நோய்களான சின்னம்மை, இன்ப்ளூயன்ஸா, தட்டம்மை, கக்குவான் இருமல் போன்றவை தாக்கும் அபாயத்தைக் குறைக்க தடுப்பூசிகள் உதவும். எனவே அந்தந்த நேரத்தில் போட வேண்டிய தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.



Click it and Unblock the Notifications