Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...!
பாலில் இந்த 'ஒரு' பொருளை போட்டு 3 நாட்கள் குடிச்சா.. உடம்புல என்னென்ன அதிசயம் நடக்கும் தெரியுமா?
உடலுக்கு தேவையான கால்சியத்தைப் பெறுவற்கு தினசரி உணவில் ஒருசில சிறப்பான பொருட்களை சேர்க்க வேண்டியது அவசியம். கால்சியம் குறைபாட்டைப் போக்கும் அந்த இரண்டு பொருட்கள் தான் பாதாம் மற்றும் எள்ளு விதைகள்.
மனித உடலில் முதுமையுடன் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. வயது அதிகரிக்கும் போது, உடல் பலவீனம், சோர்வு, எலும்புகளின் வலி போன்ற பிரச்சனைகள் எழுந்து, அன்றாட பணிகளைக் கூட செய்ய முடியாதவாறு உடலை தொந்தரவு செய்ய தொடங்குகின்றன. இதற்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடு தான்.

இம்மாதிரியான சூழ்நிலையில், உடலுக்கு தேவையான கால்சியத்தைப் பெறுவற்கு தினசரி உணவில் ஒருசில சிறப்பான பொருட்களை சேர்க்க வேண்டியது அவசியம். அப்படியான இரண்டு சிறப்பான பொருட்களைப் பற்றியும், அவை கால்சியம் குறைபாட்டைப் போக்கி, உடலுக்கு எவ்வளவு நன்மைகளை வழங்குகின்றன என்பதைப் பற்றியும் இப்போது காண்போம்.
கால்சியம் குறைபாட்டைப் போக்கும் அந்த இரண்டு பொருட்கள் தான் பாதாம் மற்றும் எள்ளு விதைகள். இப்போது இந்த பொருட்களை எப்படி சாப்பிட வேண்டும் மற்றும் அவற்றின் நன்மைகளைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

பாதாம் மற்றும் எள்ளு விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்?
* 4 பாதாமை இரவு தூங்கும் போது அல்லது ஒரு மணிநேரம் நீரில் ஊற வைத்து, அதன் தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின் ஒரு வாணலியில் சிறிது எள்ளு விதைகளைப் போட்டு 3-4 நிமிடம் வறுத்து இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து, காற்றுப்புகாத ஒரு பாட்டிலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு காலையில் எழுந்ததும் பாலில் ஒரு ஸ்பூன் அரைத்த எள்ளு பொடியை போட்டு கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து ஊற வைத்து தோலுரிக்கப்பட்ட பாதாமை சாப்பிட வேண்டும்.
* ஒருவேளை உங்களுக்கு பாலில் எள்ளு பொடியை போட்டு குடிக்க பிடிக்காவிட்டால், வெதுவெதுப்பான நீரில் எள்ளு பொடியை கலந்து குடிக்கலாம். இப்படி ஒரு 3 நாளைக்கு தவறாமல் குடித்து வந்தால், உடலில் ஒரு நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

குறிப்பு
எப்போதும் பாதாமை ஊற வைத்து தோலுரித்த பின்னரே சாப்பிட வேண்டும். ஏனெனில் பாதாமின் தோலில் டானின் என்னும் பொருள் உள்ளது. இது செரிமான மண்டலத்தை பலவீனமாக்கக்கூடியது. ஆகவே எப்போதுமே பாதாமை தோலுரித்த பின்னரே சாப்பிட வேண்டும். அதோடு எள்ளு விதைகளை அப்படியே சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

பாதாமில் உள்ள சத்துக்கள்
பாதாமில் வைட்டமின் ஈ, கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து, ஒமேகா-3, ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் போன்ற பண்புகள் உள்ளன. ஆகவே இது ஒரு சூப்பர் உணவாக கருதப்படுகிறது. மேலும் இது உடலில் ஒரு மல்டி-வைட்டமின் போன்று செயல்படுகிறது.

எள்ளு விதையில் உள்ள சத்துக்கள்
நல்ல மணத்துடன் சுவையையும் கொண்ட எள்ளு விதைகளில் ஜிங்க், காப்பர், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, வைட்டமின் பி6, இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் போன்ற ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன.
இப்போது பாதாம் மற்றும் எள்ளு விதைகளை ஒரே வேளையில் சாப்பிடுவதால் பெறும் நன்மைகளைக் காண்போம்.

எலும்புகள் வலிமையாகும்
பாதாம் மற்றும் எள்ளு விதைகளை சாப்பிடுவதால், தசைகள் மற்றும் எலும்புகள் வலிமை பெறும். மேலும் இது மூட்டு, முதுகு மற்றும் முழங்கால் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். பற்கள் வலிமையாகும். கூடுதலாக, குடல் புற்றுநோயின் அபாயம் குறையும். ஒரு நாளைக்கு ஒரு டீபூன் எள்ளு விதைகளை சாப்பிடுவதால், உடலுக்கு 100 மிகி கால்சியம் கிடைக்கிறது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்
எள்ளு விதைகள் கொழுப்புக்களைக் குறைக்க உதவும். எனவே எள்ளு விதைகளை தினமும் சாப்பிடும் போது, அது கொழுப்புக்களின் அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும்.

சர்க்கரை நோய்க்கு நல்லது
பாதாம் மற்றும் எள்ளு விதைகளை சாப்பிடுவதால், உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் இந்த இரண்டு பொருட்களையும் அன்றாடம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இரத்த இழப்பு நீங்கும்
பாதாம் மற்றும் எள்ளு விதைகளில் இரும்புச்சத்து உள்ளது. எனவே இந்த பொருட்களை தினமும் உட்கொள்வதன் மூலம், உடலில் இரத்தக் குறைபாடு நீக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தினமும் கண்டிப்பாக இவற்றை சாப்பிட வேண்டும்.

நச்சுக்கள் நீங்கும்
பாதாம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. ஆகவே உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி, உடல் சுத்தமாக இருக்க வேண்டுமானால், காலையில் எழுந்ததும் 4 தோல் உரிக்கப்பட்ட பாதாமை சாப்பிடுங்கள். அதோடு எள்ளு பாலையும் குடியுங்கள்.

கண் பார்வை அதிகரிக்கும்
உங்களுக்கு கண்களில் பிரச்சனை உள்ளதா? அப்படியானால் பாதாமில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. எனவே பாதாமை தினமும் சாப்பிடும் போது, அது கண்பார்வையை பிரகாசமாக்க உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
தற்போதைய சூழ்நிலையில் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எள்ளு மற்றும் பாதாம் ஆகிய இரண்டையும் சாப்பிடுவதன் மூலம், உடல் சோர்வு, பலவீனம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனை நீங்கும். அதோடு நோயெதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிக்க உதவும்.

தலைமுடி மற்றும் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்
பாதாம் மற்றும் எள்ளு பாலை உட்கொள்வதன் மூலம், முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கப்படும். இதனால் தலைமுடி நன்கு நீளமாகவும், அடர்தியாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். அதே வேளையில் சரும செல்களுக்கும் ஊட்டமளிக்கப்படுவதால், சருமம் அழகாகவும், பொலிவோடும் காணப்படும்.
100 மிலி பாலில் 125 மில்லிகிராம் கால்சியம் மட்டுமே உள்ளது. ஆனால் 100 கிராம் எள் விதைகளில் 975 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. மேலும் எள்ளு விதைகளில் அத்தியாவசிய பைட்டோநியூட்ரியன்ட்கள் உள்ளன, அவை எலும்புகளை வலுப்படுத்துவதைத் தவிர, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகின்றன.
ஆம், எள்ளு விதைகளில் குழந்தைகள் செழித்து வளரத் தேவையான சத்துக்களான பி வைட்டமின்கள், ஃபோலேட் மற்றும் காப்பர், மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் மற்றும் செலினியம் போன்ற முக்கியமான கனிமச்சத்துக்கள் உள்ளன.
எள்ளு விதைகளில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளான நாட்டு வைத்தியத்தில் இது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சிறிய விதைகள் இதய நோய், சர்க்கரை நோய், ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். இருப்பினும், இதை தினமும் சிறிய அளவு தான் சாப்பிட வேண்டும்.
எள்ளு விதைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் பசியைக் கட்டுப்படுத்துகிறது. ஆகவே இது எடை இழப்புக்கு உதவுகிறது. உண்மையில், நார்ச்சத்துள்ள உணவுகள் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும். ஆனால் தசைகளை பராமரிக்க உதவும்.



Click it and Unblock the Notifications











