For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் வயிற்றில் செய்யும் இந்த செயல்கள் மற்றும் சாப்பிடும் உணவுகள் உங்கள் உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்

வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் சில உணவுகள், செய்யும் சில வேலைகள் நமது ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும், சிலசமயம் மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம்.

|

இந்த உலகில் எண்ணற்ற ஆரோக்கிய உணவுகள் உள்ளது, நம்முடைய ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவைதான் அடிப்படை. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது முக்கியமல்ல அவற்றை சரியான நேரத்தில் சாப்பிடுவதுதான் முக்கியம். ஏனெனில் தவறான நேரத்தில் சாப்பிடும் சில ஆரோக்கிய உணவுகள் நமது ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

What Should Not We Do On An Empty Stomach?

வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் சில உணவுகள், செய்யும் சில வேலைகள் நமது ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும், சிலசமயம் மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம். இந்த பதிவில் வெறும் வயிற்றில் செய்யக்கூடாதா செயல்கள் மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்னஎன்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காற்றேட்டப்பட்ட குளிர்பானங்கள்

காற்றேட்டப்பட்ட குளிர்பானங்கள்

சோடாக்கள் அதிக அமிலத்தன்மை கொண்டவை மற்றும் உங்கள் வயிற்று அமில அளவை அதிகரிக்கும். இதனால் உங்கள் குடலின் மேற்புறத்தில் எரிச்சலை ஏற்படுத்தும் மேலும் தசைப்பிடிப்பு மற்றும் குமட்டலுக்கு வழிவகுக்கும். இது உங்களுக்கு நாள் முழுவதும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

மாத்திரைகள்

மாத்திரைகள்

வெறும் வயிற்றில் மாத்திரைகள் போடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வெற்று வயிற்றில் மருந்து எடுத்துக் கொள்ளும்போது, அது வயிற்றின் புறணிக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது மற்றும் வயிற்று அமில அளவில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் உடலில் சமநிலையின்மை ஏற்படும்.

உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சிகள்

ஒருபோதும் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யாதீர்கள். வெறும் வயிற்றில் வேலை செய்யாதீர்கள். ஏன்? நீங்கள் பசியாக இருக்கும்போது வேலை செய்வதன் மூலம் அதிக தசை வலிமையை இழக்கலாம். பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, வெற்று வயிற்றில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் அதிக கலோரிகளை எரிக்க மாட்டீர்கள்.

MOST READ: வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த சமையலறை தவறுகள் உங்கள் வாழ்க்கையில் தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்

தக்காளி

தக்காளி

வெற்று வயிற்றில் தக்காளியை உட்கொள்ளும்போது, இதிலிருக்கும் அமிலங்கள் வயிற்றில் உள்ள இரைப்பை குடல் அமிலங்களுடன் வினைபுரிந்து கரையாத ஜெல்களை உருவாக்குகின்றன, பின்னர் அவை வயிற்று கால்குலஸை ஏற்படுத்தும், இது ‘வயிற்று கற்கள்' என்றும் அழைக்கப்படுகிறது.

காபி

காபி

நம்மில் பலரும் காலையில் எழுந்தவுடன் முதலில் செய்யும் காரியம் காபி குடிப்பதுதான். ஆனால் இதனை செய்யாமல் இருப்பதுதான் உண்மையில் நமக்கு நல்லது. இது வயிற்று அமில அளவை அதிகரிப்பது மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்துவதுடன், மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும், மேலும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். காபி குடிப்பதற்கு முன்னர் தண்ணீர் குடிப்பது இந்த பாதிப்பை குறைக்கும்.

தேநீர்

தேநீர்

காபியைப் போலவே, தேயிலை வயிற்று அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது, இது அதிக இரைப்பை அமிலத்தை சுரப்பதன் மூலம் நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்ணை ஏற்படுத்தும்.

MOST READ: நம் முன்னோர்கள் 'அந்த' விஷயத்திற்கு வயாகராவாக இந்த பொருட்களைத்தான் சாப்பிட்டார்களாம் தெரியுமா?

ஆல்கஹால்

ஆல்கஹால்

வெறும் வயிற்றில் மது அருந்துவதை ரசிக்கும் சிலர் இருக்கிறார்கள், ஏனெனில் அது ஒருவரை விரைவாக போதைக்கு உட்படுத்துகிறது. ஆனால், இது ஆரோக்கியமற்றது என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் ஆல்கஹாலில் இருக்கும் மூலபொருட்கள் உணவை உட்கொள்ளாத வெறும் வயிற்றில் இருக்கும்போது குடலின் மேற்பகுதியை எரிக்கக்கூடும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகள்

காரமான உணவுகள் குறிப்பாக மிளகாய் வயிற்றுப் புறணிக்கு எரிச்சலை ஏற்படுத்தும், அமிலத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் வலி மற்றும் பிடிப்பை ஏற்படுத்தும். மேலும் சரியான நேரத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால் இது வயிற்றுப் புண்ணையும் ஏற்படுத்தும்.

தயிர்

தயிர்

இந்த புரோபிடிக் பொருள் பல வழிகளில் ஆரோக்கியமானது, ஆனால் வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அல்ல. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் புறணி சாறுகளுடன் வினைபுரிகிறது, இதனால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

MOST READ: இரவு நேரத்தில் நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் உங்களுக்கு மோசமான கனவுகளை ஏற்படுத்துமாம்...

வாழைப்பழம்

வாழைப்பழம்

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது திடீரென்று உடலில் மெக்னீசியத்தை அதிகரிக்கும் மற்றும் இரத்தத்தில் உள்ள மெக்னீசியத்திற்கும் கால்சியத்திற்கும் இடையிலான சமநிலையை சேதப்படுத்தும். எனவே, இதை வெறும் வயிற்றில் உட்கொள்வது நல்லதல்ல.

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கில், டானின் மற்றும் பெக்டின் ஆகியவை உள்ளது உங்களுக்குத் தெரியுமா? இது வயிற்றுச் சுவரை அதிக இரைப்பை அமிலத்தை சுரக்க தூண்டுகிறது, இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும்.

MOST READ: இந்த ராசிக்காரங்க மாதிரி அக்கறையா இருக்க யாராலும் முடியாது...இவங்க கூட இருக்க அதிர்ஷ்டம் வேணுமாம்

வாக்குவாதம்

வெற்று வயிறு உங்கள் இரத்த சர்க்கரையை குறைத்து உங்கள் சுய கட்டுப்பாட்டை பலவீனப்படுத்தும். இதுமுழு வயிற்றில் நீங்கள் இருப்பதை விட உங்களை அதிக எரிச்சலடையச் செய்யும் மற்றும் சண்டையிடவும் வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Should Not We Do On An Empty Stomach?

Here is the list of things you should never do on an empty stomach.
Story first published: Friday, April 17, 2020, 18:56 [IST]
Desktop Bottom Promotion