Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
நடிகர் சஞ்சய் தத் பாதிக்கப்பட்டுள்ள 3 ஆம் கட்ட நுரையீரல் புற்றுநோய் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன?
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மூன்றாம் கட்ட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவ சிகிச்சைக்காக நடிப்பதில் இருந்து சிறிது இடைவெளி எடுப்பதாக டிவிட்டரில் அறிவித்துள்ளார்.
ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் புற்றுநோய் இறப்புக்கு நுரையீரல் புற்றுநோய் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் படி, 15 பேரில் 1 ஆணுக்கு நுரையீரல் புற்றுநோய்க்கான ஆபத்து உள்ளது. அதே சமயம் 17 பேரில் 1 பெண்ணுக்கு இந்நோயின் ஆபத்து உள்ளது. முக்கியமாக, புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கே இதன் அபாயம் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி புகைப்பிடிக்காமல் அல்லது புகைப்பிடிப்போரின் அருகில் நீண்ட காலமாக இருந்தாலும் நுரையீரல் புற்றுநோயைப் பெறலாம். ஆனால் இதற்கு எந்த தெளிவான காரணங்களும் இல்லை.

இதற்கிடையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மூன்றாம் கட்ட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக நடிப்பதில் இருந்து சிறிது இடைவெளி எடுப்பதாக டிவிட்டரில் அறிவித்துள்ளார். சரி, இப்போது மூன்றாம் கட்ட நுரையீரல் புற்றுநோய் என்றால் என்ன என்பதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்.

3 ஆம் கட்ட நுரையீரல் புற்றுநோய் என்றால் என்ன?
நுரையீரல் புற்றுநோய் என்பது ஒருவரின் நுரையீரலில் உள்ள திசுக்களில் கட்டுப்பாடற்ற உயிரணு வளர்ச்சி ஏற்படுவதாகும். மூன்றாம் கட்ட நுரையீரல் புற்றுநோய் என்பது, இந்நோயானது நுரையீரலுக்கு அப்பால் பரவ தொடங்கியது ஆகும்.
நுரையீரல் புற்றுநோய் கட்டங்களானது புற்றுநோயின் நிலைகள் மற்றும் சிகிச்சைகளை விவரிக்க மருத்துவர்கள் பயன்படுத்துவதாகும். அதில் மூன்றாம் கட்ட நுரையீரல் புற்றுநோய் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒரு நுரையீரலில் மட்டுமே ஏற்படும். இது நிணநீர், உறுப்புகள் மற்றும் அந்த உறுப்புக்கு அருகில் உள்ள பிற திசுக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த புற்றுநோய் நுரையீரலைத் தாண்டி வேறெங்கும் பரவி இருக்காது. எனவே இந்த மூன்றாம் கட்ட நுரையீரல் புற்றுநோய் உள்ளூர் நோய் (Locoregional Disease) என்றும் அழைக்கப்படுகிறது. அடுத்த கட்டம் தான் நான்காம் கட்ட புற்றுநோய். இது தான் கடைசி மற்றும் மிகவும் தீவிரமான கட்டமாகும்.

சிறியதாக அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 80-85 சதவீதம் பேருக்கு சிறியதாக அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோய் (Non-Small Cell Lung Cancer/NSCLC) இருப்பதாகவும், சுமார் 10-15 சதவீதம் பேர் சிறிய உயிரணு நுரையீரல் புற்றுநோயையும் கொண்டுள்ளனர். இது மிகவும் அரிதான வகை. இப்போது மூன்றாம் கட்ட சிறியதாக அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

மூன்றாம் கட்ட நுரையீரல் வகைகள்
மூன்றாம் கட்ட நுரையீரல் புற்றுநோயை - 3A, 3B மற்றும் 3C என வகைப்படுத்தலாம். இந்த வகையானது புற்றுநோய் கட்டியின் அளவு மற்றும் எந்த நிணநீர் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிற திசுக்களைப் பொறுத்தது.

ஸ்டேஜ் 3A
இந்த நிலையில் ஒரு நபருக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டிகள் இருக்கும் மற்றும் இந்த புற்றுநோய் அருகிலுள்ள நிணநீர் மண்டலங்களிலும் இருக்கும். ஆனால் இந்த புற்றுநோய் கட்டிகள் அருகில் உள்ள திசுக்களில் இருந்தாலும், தொலைதூர உறுப்புக்களை அடையாமல் இருக்கும்.

ஸ்டேஜ் 3B
இது மிகவும் மேம்பட்டது மற்றும் ஒரு நபருக்கு ஒரே நுரையீரலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டிகள் இருக்கும். மேலும் இந்த நோய் காலர்போனுக்கு மேலே உள்ள நிணநீர் முடிச்சுகளுக்கு பரவியிருக்கலாம் மற்றும் மார்பின் எதிர்பக்கத்தில் உள்ள நிணநீர் முடிச்சுகளிலும் இருக்கலாம்.

ஸ்டேஜ் 3C
ஒரு நபருக்கு ஒரே நுரையீரலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டிகளுடன், காலர்போனுக்கு மேலே உள்ள நிணநீர் முடிச்சுகள் அல்லது மார்பின் எதிர் பக்கத்தில் உள்ள நிணநீர் முடிச்சுகளுக்கு பரவியிருக்கும். இந்த புற்றுநோய் மார்பு சுவரின் அனைத்து பகுதிகளுக்கும் அல்லது அதன் உள் புறணி, இதயம், மார்பக எலும்பு மற்றும் அருகிலுள்ள பிற திசுக்களுக்கும் பரவி இருக்கும். ஆனால் தொலைத்தூர உறுப்புகளுக்கு பரவாமல் இருக்கும். இது தான் மூன்றாம் கட்ட நுரையீரல் புற்றுநோயின் மிகவும் மேம்பட்ட கட்டமாகும்.

மூன்றாம் கட்ட நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்
சிறிய மற்றும் சிறியது அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோய் ஒத்த அறிகுறிகளைக் கொண்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். இருப்பினும், அந்த அறிகுறிகள் ஒருவருக்கு ஒருவர் வேறுபடலாம். மூன்றாம் கட்ட நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளாவன:
* மார்பு பகுதியில் வலி
* நீங்காத இருமல்
* இரத்தம் கலந்த சளி
* மூச்சுத்திணறல்
* சுவாசிப்பதில் சிரமம்
* எடை இழப்பு
* பசியின்மை
* குரல் மாற்றம்
* விழுங்கும் போது வலி அல்லது சிரமம்
* சோர்வு மற்றும் பலவீனம்
* முகம், கழுத்து நரம்புகளில் வீக்கம்
மூன்றாம் கட்ட புற்றுநோய் முன்னேறும் போது, அது உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்க ஆரம்பிக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட நபருக்கு எலும்பு வலி மற்றும் மஞ்சள் காமாலை போன்ற பிற அறிகுறிகளையும் உண்டாக்கக்கூடும்.

மூன்றாம் கட்ட நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சைகள்
மூன்றாம் கட்ட நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சையானது புற்றுநோயின் இடம், அளவு மற்றும் பிற குணாதிசயங்களையும், நோயாளியின் வயது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பொறுத்தது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், 3 ஆம் கட்ட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு கீழ்கண்டவாறு சிகிச்சை அளிப்பார்கள்.
* அறுவை சிகிச்சை
* ஹீமோதெரபி
* கதிர்வீச்சு சிகிச்சை
* இலக்கு சிகிச்சை
* நோயெதிர்ப்பு சிகிச்சை
* லேசர் சிகிச்சை
* எண்டோஸ்கோபிக் ஸ்டென்ட்
மூன்றாம் கட்ட நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சையானது பல அநோயாளிகளுக்கு ஆக்ரோஷமாக இருக்கும். ஏனெனில் இது உயிர் வாழ்வாற்கான சிறந்த வாய்ப்பை அளிக்கிறது. புற்றுநோய்க்கான சிகிச்சையால் நோயாளிகள் வலி அல்லது அசௌகரியத்தை அனுபவிக்கக்கூடும். இதுப்போன்ற சந்தர்ப்பங்களில், சிகிச்சையின் போது நோயாளிகள் அவர்களுக்கு மிகவும் வசதியாக அல்லது அவர்களின் பிரச்சனைகளை சமாளிக்க உதவும் மருத்துவர்களிட்ம் பேச வேண்டும்.



Click it and Unblock the Notifications