Latest Updates
-
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற குளுகுளு வெள்ளரிக்காய் சட்னி ரெசிபி..இப்படி செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...!
ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடாம இருந்தா, உடம்புல என்னலாம் நடக்கும்-ன்னு படிச்சு பாருங்க...
ஒரு மாதமாக நீங்கள் சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருந்தால், வாழ்நாள் முழுவதும் ஒரு ஆரோக்கியமான உடலைப் பராமரிக்கலாம். ஒருவரால் ஒருமாதம் சர்க்கரை சாப்பிடாமல் இருக்க முடிந்தால், உடலினுள் நல்ல விஷயங்கள் நடைபெற ஆரம்பிக்கும்.
உணவு என்று வரும் போது நாம் அனைவருமே ஒவ்வொரு விதமான உணவிற்கு அடிமையாக இருப்போம். உதாரணமாக, சிலருக்கு புளிப்பான உணவுகள் பிடிக்கும், இன்னும் சிலருக்கு இனிப்பான உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இதில் இனிப்பான உணவுகள் பற்றி பேசும் போது, அதில் சேர்க்கப்படும் சர்க்கரையைப் பற்றி கட்டாயம் அனைவரும் ஒரு விஷயத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

சர்க்கரை வெறும் இனிப்பைத் தருபவை மட்டுமல்ல, ஒருவரை அடிமையாக்கக்கூடிய மோசமான பொருளும் கூட. அதோடு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை ஒருவர் அதிகமாக நுகர்ந்தால், அது இன்சுலின் எதிர்ப்பு அபாயத்தை அதிகரிக்கும், டைப்-2 சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் அறிவாற்றல் செயல்பாடு போன்றவற்றின் அபாயத்தையும் அதிகரிக்கும். எனவே உங்கள் உணவில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை சேர்க்காமல் இருப்பது தான் நல்ல யோசனை. ஆனால் இந்த சர்க்கரை உங்களின் உடலை எவ்வாறு பாதிக்கும் என்பது தெரியுமா?

சர்க்கரையை சாப்பிடுவதால் சந்திக்கும் எதிர்மறை விளைவுகள்:
சர்க்கரையானது வெறும் சர்க்கரை நோயின் அபாயத்தை மட்டும் அதிகரிக்காது. இதில் ஊட்டச்சத்து எதுவும் இல்லை மற்றும் இது ஒருவரின் பசியை அதிகரிக்கும். உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, ஒருவரது எடை இழப்புக்கு ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து உண்பதே சிறந்த வழியாகும்.

சர்க்கரை சாப்பிடுவதால் சந்திக்கும் உடனடி விளைவுகள்:
அதிகமான சர்க்கரையை சாப்பிடும் போது, அது உடனடியாக ஒருவரது ஆவலை அதிகரிக்கும் மற்றும் மனநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கும். மேலும் இதை சாப்பிடுவது மூளையில் டோபமைனை அதிகமாக வெளியிட செய்து, மனநிலையை பாதிக்கும். அதோடு இது இரத்த சர்க்கரை அளவில் சட்டென மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, வியர்வை மற்றும் எரிச்சலூட்டும் மனநிலை போன்றவற்றிற்கும் வழிவகுக்கும்.

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தும் போது என்ன நடக்கும்?
சர்க்கரையைத் தவிர்த்த சில மணிநேரங்களுக்கு பின்...
சர்க்கரை உணவுகளை உண்பதால், ஊட்டச்சத்துள்ள உணவுகளின் மீதான ஆவல் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்க்கும் போது, ஆரோக்கியமான கொழுப்புக்கள், புரோட்டீன்கள் மற்றும் நார்ச்சத்துக்களை நிரப்புவதற்கு உடலில் அதிக இடம் கிடைக்கும். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்பட ஆரம்பிக்கும்.

சில நாட்களுக்குப் பின்...
சர்க்கரை உணவுகளுக்கு குட்-பை சொல்லிய சில நாட்களுக்குப் பின் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக உணர ஆரம்பிக்கலாம். உடலின் சர்க்கரை போதை அளவைப் பொறுத்து, வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு அறிகுறிகளை அனுபவிக்கககூடும். முதலில் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்கும் போது, தலைவலி மற்றும் குறைவான ஆற்றல் அளவுகள் போன்ற அறிகுறிகளை சந்திக்கக்கூடும். சில சந்தர்ப்பங்களில், இதற்கு நேர்மாறாகவும் சந்திக்கலாம். மேலும் நீங்கள் பசியையும், தாகத்தையும் கூட அதிகம் உணரக்கூடும். எனவே அடிக்கடி நீர் குடித்து உடலை நீரேற்றுவதன் மூலம், பசியைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

ஒரு மாதத்திற்கு பின்...
ஒரு மாதமாக நீங்கள் சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருந்தால், வாழ்நாள் முழுவதும் ஒரு ஆரோக்கியமான உடலைப் பராமரிக்கலாம். அதிலும் ஒருவரால் ஒருமாத காலம் சர்க்கரை சாப்பிடாமல் இருக்க முடிந்தால், உடலினுள் நல்ல விஷயங்கள் நடைபெறத் தொடங்கும். முக்கியமாக இனிப்பான உணவுகளின் மீதுள்ள விருப்பம் மறைந்துவிடும். மேலும் ஆரோக்கிய நன்மைகளை அனுபவிக்க ஆரம்பிப்பீர்கள். கீழே ஒரு மாதத்திற்கு சர்க்கரை சாப்பிடாமல் இருப்பதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நன்மை #1
சர்க்கரையை முற்றிலும் தவிர்க்கும் போது, சர்க்கரை வடிவில் உள்ள கலோரிகள் உடலில் சேர்வது தடுக்கப்படும் மற்றும் முழுமையான ஆரோக்கிய உணவுகளால் விரைவில் வயிறும் நிரப்பப்படும். இது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

நன்மை #2
சர்க்கரையைத் தவிர்ப்பது என்பது குறைந்த கலோரிகளையும், உடல் எடையையும் குறிக்கிறது. அதாவது, உடலில் நல்ல கொழுப்புக்கள் சிறப்பான அளவில் நிறைந்துள்ளது உறுதியாகும்.

நன்மை #3
என்ன தான் ஆரோக்கியமான உடல் எடையுடன் இருந்தாலும், சர்க்கரையை முழுமையாக தவிர்ப்பதால், உடலில் ஊட்டச்சத்துக்கள் சிறப்பான அளவில் இருக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். ஏனெனில் உடலைப் பழுது பார்க்கவும், பாதுகாக்கவும், போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் உடலில் இருக்க வேண்டியது அவசியம்.

நன்மை #4
பொதுவாக சர்க்கரையை உணவில் அளவுக்கு அதிகமாக சேர்க்கும் போது, இதயத்தைக் கட்டுப்படுத்தும் இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் சேதமடையும். அதுவே சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதால், இதய நோயின் அபாயம் குறைவாக இருக்கும்.

நன்மை #5
பல் சிதைவு அல்லது பல் சொத்தைகளுக்கு முக்கிய காரணமே சர்க்கரை தான். இந்த சர்க்கரை நுகர்வைக் குறைக்கும் போது அல்லது தவிர்க்கும் போது, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

நன்மை #6
உடலில் சர்க்கரை அதிகமாக இருந்தால், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற நோய்கள் போன்ற தீவிரமான நோய்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் இருக்கும். அதுவே அந்த சர்க்கரையை முற்றிலும் தவிர்க்கும் போது, இந்த ஆபத்துக்கள் குறையும்.

முடிவு
சர்க்கரையைத் தவிர்ப்பதால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நன்மைகள் கிடைக்கும். ஆனால் இதை மேற்கொள்ள நினைக்கும் போது, சரியான ஊட்டச்சத்து நிபுணரை அணுகி, அவர் பரிந்துரைக்கும் அன்றாட உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுங்கள். அதிலும் நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் இலக்கைக் கொண்டிருந்தால், ஆரோக்கியமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சியை அன்றாடம் பின்பற்றுவதன் மூலம் பயனுள்ள முடிவுகளை எளிதில் பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே சர்க்கரையை தவிர்த்தது, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications











