Latest Updates
-
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
செப்டம்பர் 14, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க நிறைய சோதனைகளை சந்திக்கப் போறாங்களாம்
நெயில் பாலிஷ் பயன்படுத்திய சில மணிநேரங்களில் நம் உடலில் என்னலாம் நடக்கும் தெரியுமா?
தற்போதுள்ள பெண்கள் தங்கள் விரல்களை அழகுபடுத்த அடிக்கடி நெயில் பாலிஷ் பயன்படுத்துகின்றனர். ஆனால் உண்மையில் இப்படி நெயில் பாலிஷ் பயன்படுத்திய 10 மணி நேரத்திற்கு பிறகு உடலில் என்ன நடக்கும் தெரியுமா?
தற்போதுள்ள நவீன கால பெண்கள் தங்கள் விரல்களை அழகுபடுத்த அடிக்கடி நெயில் பாலிஷ் பயன்படுத்துகின்றனர். அவர்கள் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது நெயில் பாலிஷ் பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதில் தற்காலிக மற்றும் பாதி தற்காலிகமான மெனிக்யூர் வேலைப்பாடுகளை செய்து வருகிறார்கள்.

சிலர் விதவிதமான கலரில் விதவிதமான டிசைன்களில் நெயில் ஆர்ட் பண்ண விரும்புகின்றனர். ஆனால் உண்மையில் இப்படி நெயில் பாலிஷ் பயன்படுத்திய 10 மணி நேரத்திற்கு பிறகு நம் உடலில் என்ன நடக்கும் என்று தெரியுமா?

ஆய்வு
நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்தும் 24 பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களின் ஒவ்வொருவரின் உடலிலும் நெயில் பாலிஷில் காணப்படும் டிரிஃபில்பாஸ்பேட் என்ற பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நகங்களில் நெயில் பாலிஷ் பயன்படுத்தப்பட்ட 10 மணி நேரத்திற்குப் பிறகு, இந்த பெண்கள் ரசாயனங்களை வெளிப்படுத்தும் அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கினர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. நெயில் பாலிஷின் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் இந்த பொருளைப் பயன்படுத்துகின்றன.

டோலுயீன் வேதிப்பொருள்
இது ஒரு கரைப்பான். இது உங்கள் நகங்களுக்கு நேர்த்தியான தோற்றத்தை அளிக்கிறது மற்றும் நெயில் பாலிஷ் கலரை பாதுகாக்கிறது. டோலுயீன் என்ற பொருள் மத்திய நரம்பு மற்றும் இனப்பெருக்க அமைப்பை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதிலும் குறைந்த தரமான நெயில் பாலிஷைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகளில் தலைவலி, பலவீனம், தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஆகியவை அடங்கும்.

ஃபார்மால்டிஹைடு
நெயில் பாலிஷில் உடலைப் பாதிக்கும் மற்றொரு பொருள் ஃபார்மால்டிஹைடு. இது நிறமற்ற வாயு, இது எண்ணெயின் ஆயுளை அதிகரிக்கும். உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், ஃபார்மால்டிஹைடுடன் தொடர்பு கொள்வது தோல் அழற்சி அல்லது ரசாயன தீக்காயங்களை ஏற்படுத்தும். மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களில், இது இதய தாள பிரச்சனைகள், வலிப்புத் தாக்கங்கள் மற்றும் புற்றுநோயைக் கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது .

டிபுட்டில் பித்தலேட்
நீங்கள் தவிர்க்க வேண்டிய மூன்றாவது பொருள் டிபுட்டில் பித்தலேட் ஆகும். இந்த மூலப்பொருள் வாசனை திரவியமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த அபாயகரமான கூறு நெயில் பாலிஷில் இருப்பதால் எண்டோகிரைன், மகளிர் மருத்துவ மற்றும் சுவாசக்குழாய் பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கலாம் .

குறிப்பு
மருத்துவ வல்லுநர்கள் சுற்றுச்சூழலுக்கும் சருமத்திற்கும் நண்பனான நெயில் பாலிஷை மட்டும் பயன்படுத்த வலியுறுத்துகின்றனர். குறிப்பாக மலிவான விலையில் விற்கப்படும் நெயில் பாலிஷ்களை வாங்கி பயன்படுத்துவதை தவிருங்கள்.

பேஸ் கோட்டிங்
நெயில் பாலிஷ் பயன்படுத்தும் போது உங்கள் நகங்களை சுத்தமாகவும், கறை இல்லாமல் வைத்திருக்கவும், பல வண்ண நெயில் பாலிஷைப் பயன்படுத்துவதற்கு முன்பு நகங்களுக்கு பேஸ் கோட்டிங் போட்டுக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
