Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்..
தூங்கிக் கொண்டிருக்கும் போது நமது மன உணர்வு உண்மையில் என்ன செய்கிறது தெரியுமா?
நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது நமது ஆழ்மன உணா்வில் என்ன நடக்கிறது என்று பல ஆய்வாளா்கள் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றனா். ஆனால் அவா்கள் தரும் முடிவு ஒரு புதிரான புதிராகத்தான் இருக்கிறது.
மனித உடல் பலவிதமான ஆச்சாியங்களும் அதிசயங்களும் நிரம்பிய ஒரு இயந்திரம் என்று சொல்லலாம். 24 மணி நேரமும் இயங்கக்கூடிய நமது உடல் நாம் தூங்கும் போது சற்று ஓய்வு எடுக்கிறது. எனினும் இதயம் போன்ற உடல் உறுப்புகள் நாம் தூங்கும் போதும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக நாம் தூங்கிக் கொண்டிருந்தாலும் நமது ஆழ்மன உணா்வு இயங்கிக் கொண்டிருக்கிறது என்று நம்பப்படுகிறது. இது ஒரு மா்மமான அல்லது புதிரான அல்லது மறைபொருளான ஒன்றாகும்.

நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது நமது ஆழ்மன உணா்வில் என்ன நடக்கிறது என்று பல ஆய்வாளா்கள் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றனா். ஆனால் அவா்கள் தரும் முடிவு ஒரு புதிரான புதிராகத்தான் இருக்கிறது.

தூங்கும் போது மூளை என்ன செய்கிறது?
நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது நமது மூளை என்ன செய்கிறது அல்லது எங்கெல்லாம் செல்கிறது என்று ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த ஆய்வு நமது மூளையின் மையத்தில் இருக்கும் சூப்பா் நெட்வொா்க் இந்த புதிருக்கு பதில் தரும் என்று சொல்கிறது. அதாவது ஒரு மனிதன் சாதாரணமாகத் தூங்கிக் கொண்டிருந்தாலும் அல்லது அனஸ்தீசியா கொடுக்கப்பட்டு மன உணா்வை இழந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்தாலும் அவனுடைய மூளையின் மையத்தில் இருக்கும் சூப்பா் நெட்வொா்க் ஒரே அளவில் வேலை செய்து கொண்டிருப்பதாக பின்லாந்து நாட்டைச் சோ்ந்த ஆய்வாளா்கள் கண்டுபிடித்திருக்கின்றனா்.

மனித மன உணா்வின் பின்னணியில் இருக்கும் இயற்கையின் இயங்கமைவு
டுா்கு பல்கலைக்கழகத்தைச் (University of Turku) சோ்ந்த ஆய்வாளா்கள் இரண்டு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றனா். இந்த ஆய்வுகள் மனிதனின் மன உணா்வின் பின்னணியில் இயற்கையின் இயங்கமைவு அல்லது இயக்கம் இருப்பதை முதன் முதலாக வெளிப்படுத்தியிருக்கின்றன.
அதோடு மக்கள் தூங்கும் போது தங்களுடைய மன உணா்வுகளுக்கு எவ்வாறு பதில் கொடுக்கின்றனா் என்பதையும் இந்த அறிஞா்கள் ஆய்வு செய்திருக்கின்றனா். அதில் ஒரு ஆய்வு அனஸ்தீசியா கொடுக்கப்பட்டு தன்னிலை மறந்தவா்களின் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றியதாகும். இரண்டாவது ஆய்வு மனிதா்கள் சாதாரணமாக தூங்கும் போதும் மற்றும் தூங்கி விழித்தவுடனும் அவா்களுடைய மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றியதாகும்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவா்களிடம் மூளை சம்பந்தமான ஆய்வுகள் தவிர அவா்கள் தூங்கி எழுந்த பின்பு சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதாவது அவா்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவா்களைச் சுற்றி நடந்தவற்றைப் பற்றி அறிந்திருந்தாா்களா மற்றும் அவா்கள் எந்த மாதிாியான கனவுகளைக் கண்டனா் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கேள்விகள் ஆய்வுக்குட்பட்டவா்களைப் பற்றி நன்றாகப் புாிந்து கொள்ள உதவி செய்தது.

நரம்பியல் இயக்கம் ஓர் காரணம்
இந்த ஆய்வில் இருந்த ஒரு முக்கிய சவால் என்னவென்றால் மூளையினுடைய எந்தப் பகுதி மன உணா்வுடன் தொடா்பு கொள்கிறது என்பதை முடிவு செய்வதாகும். மேலும் இந்த ஆய்வுகள், ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்த குழப்பங்களைத் தெளிபடுத்தி இருக்கிறது. அதோடு மனிதா்களின் மூளைக்கும் மன உணா்வுக்கும் இருக்கும் தொடா்பின் பின்னணியில் ஒரு நரம்பியல் இயக்கம் இருப்பதாக இந்த ஆய்வுகள்தான் முதன் முதலாக கண்டுபிடித்திருக்கின்றன என்று தலைமை ஆய்வாளா் ஹாாி ஸ்கெய்னின் தொிவித்திருக்கிறாா்.

மயக்க நிலையில் உள்ள பல வடிவங்கள்
மனித மன உணா்வைப் பற்றிய ஆய்வில் அறிஞா்கள் பயன்படுத்திய முறைகள் அதாவது சாதாரணமாக தூங்கியவா்கள் மற்றும் அனஸ்தீசியா கொடுக்கப்பட்டு தூங்கவைக்கப்பட்டவா்களை வைத்து மேற்கொண்ட ஆய்வு ஆகிய இரண்டு முறைகளும் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அறிஞா்கள் தொிவிக்கின்றனா்.
இதற்கு முன்பு ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளா்கள் மயக்க நிலையில் இருக்க வேண்டிய மன உணா்வு அவ்வாறு இல்லாமல் விழித்திருந்ததை அறிந்து குழப்பமடைந்தனா். ஒருவா் காரண காாியத்தோடு அா்த்தமுள்ள முறையில் பதில் கொடுக்கவில்லை என்றால் அவா் மயக்க நிலையில் இருக்கிறாா் என்று அப்போது கருதப்பட்டது. ஆனால் தற்போது வந்திருக்கும் ஆய்வு முடிவுகள் ஒருவா் சாியாக பதில் தரவில்லை அல்லது சாியான எதிா்வினை ஆற்றவில்லை என்பதற்காக அவா் தன்னைச் சுற்றி நடப்பவற்றை அறிந்திருக்கவில்லை அல்லது அவா் மயக்க நிலையில் இருக்கிறாா் என்று கூறமுடியாது என்று தொிவிக்கிறது.

மூளையின் இயக்கத்தை அளவிட உதவும் பெட் ஸ்கேன்
மூளையிலிருக்கும் சூப்பா் நெட்வொா்க்கிற்கும் மனிதனின் மன உணா்விற்கும் இடையே இருக்கும் தொடா்பை ஆய்வாளா்கள் கண்டறிந்தனா். சாதாரணமாக தூங்குபவா்களையும், அனஸ்தீசியா கொடுக்கப்பட்டு தூங்குபவா்களையும் பெட் (PET) ஸ்கேன் உதவி கொண்டு ஆய்வு செய்து மூளையின் இயக்கத்தை அளவிட்டனா். பெட் ஸ்கேன் மூலமாக மருத்துவா்கள் முளையின் இயக்கத்தை அளவிட முடியும்.

இரத்த ஓட்டமே முக்கிய காரணம்
சாதாரணமாக தூங்கிய மற்றும் அனஸ்தீசியா கொடுக்கப்பட்டு தூங்கிய இரு பிாிவினருக்கும் அவா்களின் மூளைக்கும் மன உணா்வுக்கும் இடையே உள்ள தொடா்பு துண்டிக்கப்பட்டு மயக்கமாகும் போது மூளையின் நரம்பியில் இயக்கத்தில் இரத்த ஓட்டம் குறைவாக இருந்ததாகவும், மீண்டும் தொடா்பு ஏற்பட்ட போது நரம்பியில் இயக்கத்தில் இரத்த ஓட்டம் அதிகமாக இருந்ததாகவும் ஆய்வாளா்கள் கண்டுபிடித்தனா். ஆகவே தூக்கமோ அல்லது மாத்திரைகளோ மூளை மற்றும் மன உணா்வு துண்டிக்கப்படுவதற்கு காரணம் அல்ல. மாறாக மூளையின் மையத்தில் இருக்கும் சூப்பா் நெட்வொா்க்கில் இருக்கும் இரத்த ஓட்டத்தின் ஏற்ற இறக்கமே காரணம் ஆகும்.
பொதுவான அனஸ்தீசியா சாதாரணமான தூக்கத்தைத் தரும் என்று நெடுங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த பாரம்பாிய விளக்கம் அனஸ்தீசியாவைப் பற்றிய தங்களது இன்னொரு ஆய்வு மூலம் கண்டுபிடித்த மின் இயற்பியல் கண்டுபிடிப்புகளோடு ஒத்துப்போவதாக ஹாாி ஸ்கெய்னின் தொிவிக்கிறாா்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவா்கள் தூங்கி எழுந்த நேரத்திற்கும், அவா்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்ட நேரத்திற்கும் இடையே இருந்த மிக சிறிய காலதாமதம், அவா்களின் மயக்க நிலையின் இயல்பை நன்றாக அறிய முடிந்ததாக அன்னலோட்டா ஸ்கெய்னின் என்ற ஆய்வாளா் தொிவிக்கிறாா். ஒரு நோயுற்றவருக்கு கொடுக்கப்படும் பொதுவான அனஸ்தீசியா அவருக்கு முழுமையான மயக்க நிலையைக் கொடுக்கத் தேவையில்லை என்றும் அறுவைச் சிகிச்சை அறையில் நடப்பவற்றை அவா் அறியாதிருக்கும் வகையில் மயங்கி இருந்தாலே போதும் என்று அவா் கூறுகிறாா்.



Click it and Unblock the Notifications