For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆப்பிளை இந்த மாதிரி உங்க உணவில் சேர்த்துக் கொண்டால் உங்க ஆயுள் அதிகரிக்குமாம்…!

|

பொதுவாக பழங்கள் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. ஒரு அறிக்கையின் கூற்றுப்படி, ஆப்பிள்கள் பைட்டோ கெமிக்கல்களின் (கேடசின், குவெர்செட்டின் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் போன்றவை) வளமான மூலமாகும். இவை புற்றுநோய், இருதய நோய், நீரிழிவு மற்றும் ஆஸ்துமா போன்ற பல நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இவை தவிர, ஆப்பிள்களின் ஆக்ஸிஜனேற்ற தன்மை மெதுவான வயதாவது, எடை இழப்பு, குறைந்த கொழுப்பின் அளவு மற்றும் நல்ல இரைப்பை குடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது.

ஆரோக்கியமான உணவு பல நோய்களைத் தடுப்பதற்கும், உங்கள் நாளைத் தொடங்குவதற்கும் சிறந்த வழியாகும். அதற்கு ஆப்பிள் சிறந்த வழி. ஆப்பிள் எந்தவொரு உணவிலும் சுமூகமாக சேர்த்து உண்ணலாம். அவை ஒரு பழ சாலட், ஒரு இனிப்பு உணவு, சிப்ஸ் அல்லது காய்கறிகளாக இருந்தாலும் அவற்றில் ஆப்பிளை சேர்க்கலாம். இருப்பினும், இந்த ஆரோக்கியமான பழத்தை உங்கள் உணவில் சேர்த்து அவற்றை ஆரோக்கியமானதாகவும் ஊட்டச்சத்துடனும் மாற்ற பல வழிகள் உள்ளன. உங்கள் உணவில் ஆப்பிளைச் சேர்க்க சில சிறந்த வழிகளை இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் ஓட்ஸ்

ஆப்பிள் ஓட்ஸ்

ஓட்ஸ் மற்றும் ஆப்பிள் நன்மைகள் நிறைந்த ஆரோக்கியமான காலை உணவாக இருக்கும். இது மிகவும் எளிமையானது மற்றும் தயாரிப்பதும் மிக எளிது. இரவு தூங்குவதற்குமுன்பு ஓட்ஸை தண்ணீரில் ஊறவைத்து, அதில் நறுக்கிய ஆப்பிள்களையும் சில உலர்ந்த பழங்களையும் சேர்த்து இந்த ஆரோக்கியமான காலை உணவை உண்ணலாம். இது உங்கள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்குகிறது.

MOST READ: ஆன்லைனில் நிச்சயதார்த்தம் செய்த இந்தியர்!.. இப்படியாவது நடக்குமா? என்ற ஏக்கத்தில் 90கிட்ஸ்...!

ஆப்பிள் மற்றும் பெர்ரி சாலட்

ஆப்பிள் மற்றும் பெர்ரி சாலட்

ஆப்பிள் மற்றும் பெர்ரிகளின் கலவையானது ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவை உருவாக்குகிறது. ஆப்பிள் மற்றும் பெர்ரி சாலட் இரண்டு பழங்களின் ஆக்ஸிஜனேற்ற நன்மைகளையும் தருகிறது. ஸ்ட்ராபெர்ரி, கிரான்பெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற நான்கு நடுத்தர அளவிலான ஆப்பிள்கள் மற்றும் பெர்ரிகளை சேர்த்து ஃபுரூட்ஸ் சாலட்டாக உண்ணலாம்.

ஆப்பிள் பேன்கேக்

ஆப்பிள் பேன்கேக்

ஆப்பிள் பேன்கேக் உங்களுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவாக இருக்கும். இந்த உணவை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. உங்கள் வீட்டில் இதுபோன்ற ஆரோக்கியமான உணவுகளை சமைத்து அனைவரையும் ஈர்க்கலாம். ஆப்பிள் பேன்கேக் சில நிமிடங்களில் தயாரிக்கலாம். முட்டை, ஆப்பிள், வெண்ணெய், மாவு, சமையல் சோடா, சர்க்கரை மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை மாவுபோன்று அரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பேனில் இந்த கலவையை ஊற்றி, இருபுறமும் சரியான அளவில் வேகவைத்து பரிமாறலாம்.

ஆப்பிள் ஆம்லெட்

ஆப்பிள் ஆம்லெட்

ஆப்பிள் மற்றும் முட்டை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஆப்பிள் ஆம்லெட் உணவுடன் அவர்களின் நாளைத் தொடங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும். ஆப்பிள் ஆம்லெட்டைப் பற்றிய மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த உணவை நாளின் எந்த நேரத்திலும் சமைக்க முடியும். 2 முட்டை, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து ஆம்லெட் தயாரிக்கவும். அதன் மேல் ஆப்பிள் துண்டுகள், கீரை மற்றும் தக்காளி ஆகியவற்றைக் கொண்டு மேலே வைக்கவும். பின்னர், ஆம்லெட்டை உருட்டி சூடாக பரிமாறவும்.

MOST READ: இந்த காரணம்தான் உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறதாம்...!

ஆப்பிள் மற்றும் காய்கறிகள்

ஆப்பிள் மற்றும் காய்கறிகள்

பழம் மற்றும் காய்கறி இரண்டும் உடலுக்கு எவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆப்பிளை எந்த காய்கறியுடன் சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? ஆப்பிள் எந்த காய்கறிகளிலும் குறிப்பாக முட்டைக்கோஸுடன் சேர்க்கலாம். இது பல வழிகளில் ஆரோக்கியமானது. உங்களுக்கு பிடித்த காய்கறிகளை மிளகு, வெண்ணெய், உப்பு மற்றும் வெங்காயத்துடன் சேர்த்து லேசாக வறுக்கவும். நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்த்து பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர், சூடாக பரிமாறவும்.

ஆப்பிள் மற்றும் தயிர்

ஆப்பிள் மற்றும் தயிர்

தயிர் ஒரு புரோபயாடிக் ஆகும். இது பல செரிமான பிரச்சினைகளுக்கு உதவுகிறது. தயிரில் ஆப்பிள்களைச் சேர்ப்பது அதன் சுவையை வளப்படுத்துவதோடு ஒரே நேரத்தில் பல ஊட்டச்சத்துக்களையும் உங்களுக்கு வழங்குகிறது. ஒரு கப் தயிரில் சிறிது சிறிதாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்க்கவும். சில உலர்ந்த பழங்கள் மற்றும் பெர்ரிகளையும் இதில் சேர்க்கவும். இப்போது, சுவையான மற்றும் ஆரோக்கியமான டிஷ் ரெடி.

MOST READ: சிறிய பிரச்சனை என்று நீங்க நினைக்கும் இந்த அறிகுறிகள் உங்க உயிருக்கே ஆபத்தாய் மாறலாம்...!

ஆப்பிள் ஜெல்லி

ஆப்பிள் ஜெல்லி

பழுத்த ஆப்பிள் பழங்களை ஜெல்லியாக தயாரிக்கிறார்கள். இதன் மூலம் ஆப்பிளை நன்றாக சுவைக்கலாம். எந்தவொரு செயற்கை முகவர்களும் இல்லாமல் ஒரு பழ ஜெல்லியின் நன்மையை அனுபவிக்க இது சிறந்த வழியாகும். ஆப்பிள் க்யூப்ஸை சில கிராம்புகளுடன் தண்ணீரில் வேகவைக்கவும். கலவை மென்மையாக மாறும்போது, தண்ணீரை ஊற்றவும். எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து கலவையை கெட்டியாகும் வரை கிளறவும். பின்னர், ரொட்டியுடன் பரிமாறவும்.

உதவிக்குறிப்புகள்

உதவிக்குறிப்புகள்

உங்கள் உணவில் ஆப்பிளை சேர்க்க பிற எளிதான உதவிக்குறிப்புகளையும் இங்கே கொடுத்துள்ளோம். சிறந்த சுவைக்காக தானியங்களுடன் ஆப்பிள் துண்டுகளை சேர்த்து சாப்பிடலாம். ஒரு எளிய காலை உணவுக்கு ஆப்பிள் துண்டுகளுடன் வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் ரொட்டி சேர்த்து சாப்பிடலாம். வெட்டப்பட்ட ஆப்பிள்களை உங்களுக்கு பிடித்த சாண்ட்விச்சில் சேர்த்து சாப்பிடலாம். ஆப்பிள் துண்டுகளை சிறிது உப்பு மற்றும் மிளகு சேர்த்து வறுத்து, உங்கள் உணவில் சேர்த்து சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

ways to include apple in your diet

Here we are talking about healthy ways to include apple in your diet.