For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெங்காயத் தோலை குப்பையில் போடுறீங்களா? இனிமே அந்த தப்ப தெரியமா கூட செய்யாதீங்க... ஏன் தெரியுமா?

நீங்கள் உங்கள் உணவுகளில் புகைப்பிடிக்கும் ஒருவராக இருந்தால், வெங்காயத் தோலை கருமை நிறமாக மாறும் வரை அடுப்பில் வறுத்து வெங்காய சாம்பலை உருவாக்கவும். பின்னர் அவற்றை உங்கள் உணவிகளில் கிரேவிகளில் நன்றாக தூள் செய்து தூவ வேண்ட

|

வெங்காயம் என்றாலே தோலை நீக்கி சமைக்க வேண்டும் என்றுதான் நமக்கு முதலில் சொல்லித்தரப்பட்டுள்ளது. அந்த உரித்த வெங்காயத் தோலை நீங்களும் தூக்கி எறிவீர்களா? ஆம். எனில், இந்த கட்டுரையில் உள்ள தகவலைப் படித்த பிறகு, நீங்கள் அவற்றை வீசுவதை நிறுத்தலாம். ஆம், வெங்காயத் தோலின் அற்புதங்களை தெரிந்துகொண்டால், நீங்கள் அவற்றை தூக்கி வீச மாட்டீர்கள். வெங்காயத் தோல் பல ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும். அவற்றில் வைட்டமின் ஏ உள்ளது, இது பார்வைக்கு மிகவும் உதவியாக இருக்கும். அவை வைட்டமின் சி மற்றும் ஈ ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இவற்றை தோல் சிகிச்சையில் பயன்படுத்தப்படலாம்.

Unique Ways to use onion peels in tamil

ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த தோல்கள் மற்ற உணவுகளை மேம்படுத்த பல வழிகளில் பயன்படுத்தப்படலாம். வெங்காயத்தோலின் குறைவாக அறியப்பட்ட சமையல் பயன்பாடுகளை அறிய இக்கட்டுரையை முழுவதும் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூப் மற்றும் கிரேவியில் சேர்க்கவும்

சூப் மற்றும் கிரேவியில் சேர்க்கவும்

சூப் மற்றும் கிரேவியில் வெங்காயத் தோலை சேர்க்கலாம். சூப், ஸ்டாக் மற்றும் கிரேவி கொதிக்கும் போது வெங்காயத் தோல்களைச் சேர்க்கத் தொடங்குங்கள். இது கிரேவியை கெட்டியாக மாற்றவும், கண்ணுக்கு இதமான நிறத்தை கொடுக்கவும் உதவும். ஓரிரு நிமிடங்கள் வேகவைத்த பிறகு, தோல்களை வெளியே எடுத்துவிடுங்கள். உங்கள் கிரேவியின் நிறமும், தன்மையும், சுவையும் அருமையாக இருக்கும்.

புகையை ஊட்டவும்

புகையை ஊட்டவும்

நீங்கள் உங்கள் உணவுகளில் புகைப்பிடிக்கும் ஒருவராக இருந்தால், வெங்காயத் தோலை கருமை நிறமாக மாறும் வரை அடுப்பில் வறுத்து வெங்காய சாம்பலை உருவாக்கவும். பின்னர் அவற்றை உங்கள் உணவிகளில் கிரேவிகளில் நன்றாக தூள் செய்து தூவ வேண்டும். இதை முயற்சி செய்து பிறகு, நீங்களே அடிக்கடி செய்யத் தொடங்குவீர்கள்.

வெங்காயத் தோல் தேநீர் தயாரிக்கவும்

வெங்காயத் தோல் தேநீர் தயாரிக்கவும்

நீங்கள் தேநீர் குடித்திருக்கலாம். ஆனால், வெங்காயத் தோல் தேநீர் குடித்திருக்கிறார்களா? ஆம், வெங்காயத் தோல் டீ என்று ஒன்று உண்டு. நிபுணர்களின் கருத்துப்படி, இந்த தேநீர் மனதை அமைதிப்படுத்த உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது, டீ பேக்/கிரீன் டீ இலைகள் மற்றும் வெங்காயத் தோல்கள் கொண்ட ஒரு கோப்பையில் வெந்நீரை ஊற்றி, இரண்டையும் சிறிது நேரம் ஊற விடவும். இப்போது, தேநீரை வடிகட்டி அருந்துங்கள்.

தண்ணீரில் சேர்க்கவும்

தண்ணீரில் சேர்க்கவும்

வெங்காயத்தோலை தண்ணீரில் சேர்த்தும் குடிக்கலாம். ஆய்வுகளின்படி, இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் தசைப்பிடிப்புகளைத் தளர்த்த உதவுகிறது. தோலை ஒரு கிளாஸ் தண்ணீரில் குறைந்தது 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். தோலை நீக்கிவிட்டு, நல்ல பலன்களுக்கு உட்செலுத்தப்பட்ட தண்ணீரைக் குடிக்கவும்.

அரிசியில் சேர்க்கவும்

அரிசியில் சேர்க்கவும்

நீங்கள் எந்த அரிசி உணவைச் செய்தாலும், சில வெங்காயத் தோல்களைச் சேர்த்து செய்யலாம். ஏனெனில், இது சுவையை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இது அரிசிக்கு நுட்பமான ஒரு சுவையை அளிக்கிறது. இந்த சுவையை பலரும் விரும்புகிறார்கள்.

ரொட்டியில் கலக்கவும்

ரொட்டியில் கலக்கவும்

நீங்கள் வீட்டில் ரொட்டி சுடுகிறீர்கள் என்றால், ஒரு டீஸ்பூன் அரைத்த வெங்காயத் தோலைச் சேர்த்து சுடவும். இது ரொட்டியின் சுவையை அதிகரிப்பது மட்டும்மல்லாமல், நல்ல மனத்தையும் கொடுக்கும். இனிமேல், வீட்டில் ரொட்டி செய்யும்போது, கண்டிப்பாக வெங்காயத் தோலைச் சேர்த்து செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unique Ways to use onion peels in tamil

Here are the surprising ways to use onion peels in tamil.
Story first published: Thursday, October 6, 2022, 15:05 [IST]
Desktop Bottom Promotion