Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்..
ஈறுகளில் இரத்த கசிவா அல்லது பல் வலியா? இது எதோட அறிகுறி தெரியுமா?
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு சராசரியாக 700 மில்லி கிராம் பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. பாஸ்பரஸ் குறைபாடு பல்வேறு வகையாக பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும்.
பாஸ்பரஸ் என்பது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களுள் ஒன்று. உடல் செயல்பாட்டிற்கு பாஸ்பரஸ் உகந்தநிலையில் இருக்க வேண்டும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். ஆமாம், நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு சராசரியாக 700 மில்லி கிராம் பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. பாஸ்பரஸ் குறைபாடு பல்வேறு வகையாக பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும்.

சிறந்த சிறுநீரக வேலைபாட்டிற்கு பாஸ்பரஸ் மிகவும் தேவைப்படும் ஒன்று. எலும்பு மற்றும் பற்களை பலப்படுத்தவும் பாஸ்பரஸ் அத்தியாவசியமானது. உடலில் தேவைக்கு குறைவான பாஸ்பரஸ் இருந்தால், எலும்புகள் பலவீனமடைவதோடு, வாய்வழி பிரச்சனைகள் மற்றும் கீழ்வாதம் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். அதுமட்டுமல்லாது, பசியின்மை, நோய்தொற்றுகள் கூட ஏற்படுமாம்.
இந்த கட்டுரை மூலம், பாஸ்பரஸ் வாய்வழி ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள். இப்போது, நீங்களாகவே இந்த பிரச்சனைகளை எவ்வாறு தடுப்பது என்பதை பற்றி பார்ப்போம்...

பச்சை காய்கறிகளை நீண்ட நேரம் வேக வைக்கக்கூடாது
நாம் உண்ணும் உணவை சரியாக சமைக்கவில்லை என்றால், அதன் சத்துக்கள் நமக்கு முழுவதுமாக கிடைக்காது. அப்படித் தான், பச்சை காய்கறிகளை அதிக வெப்பநிலையில் வைத்து சமைத்தால் அதிலிருக்கும் சத்துக்கள் முழுவதுமாக அழிந்துவிடும். எனவே, அவற்றை எப்போதும் நீண்ட நேரம் வேக வைக்கக்கூடாது. சரியான அளவில் சமைத்தாலே அதன் சத்துக்களை அப்படி பெற முடியும். அவற்றில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு முழுவதுமாக அப்படியே கிடைக்க வேண்டுமெனில் அவற்றை ஜூஸ் போட்டு குடிக்கும் பழக்கத்தை விட்டு, பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது.

எலும்புகள் பலம் பெற உதவும் பாஸ்பரஸ்
உடலுக்கு தேவையான மிக முக்கிய தாதுக்களில் 2வது முக்கிய சத்து தான் பாஸ்பரஸ். ஆரோக்கியமான, பலமான எலும்புகளுக்கு பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்தின் கலவை தான் கால்சியத்துடன் இணைந்து செயல்படுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது. பற்கள் மற்றும் ஈறுகளின் பிரச்சனையை பாஸ்பரஸ் தான் அகற்றுகிறது. பற்களின் எனாமல் மற்றும் ஈறுகளை பலப்படுத்துவதும் பாஸ்பரஸ் தான். அன்றாட உணவில் போதிய அளவு பாஸ்பரஸை உணவில் உட்கொண்டாலே கீல்வாதம் எனும் மூட்டு வலியில் இருந்து தப்பித்திடலாம்.

பாஸ்பரஸ் நிறைந்த உணவுகள்!
கோதுமை
கோதுமையினால் செய்த ஒரு பிரட் துண்டில் மட்டும் 57 மில்லிகிராம் அளவிற்கு பாஸ்பரஸ் உள்ளது. உடலில் பாஸ்பரஸ் அளவை உயர்த்த விரும்புபவர்கள், கோதுமை பிரட்டை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம். இது அவ்வளவு விலை உயர்ந்த பொருளும் அல்ல.

சிக்கன்
அசைவ பிரியர்களில் கோழி சாப்பிடாதவர்களே இருக்கமாட்டார்கள். இதில், கோழி சாப்பிடுவதால் என்ன பயனென்றே தெரியாமல் சாப்பிடுபவர்கள் தான் அதிகம். இப்போது தெரிந்து கொள்ளுங்கள், வெறும் 75 கிராம் கோழியில், 370 கிராம் அளவிற்கு பாஸ்பரஸ் உள்ளது. கோழி சாப்பிட்டாலே தினசரி தேவைப்படும் பாஸ்பரஸ் தாராளமாக கிடைத்துவிடும்.

மீன்
உங்களுக்கு மீன் பிடிக்கும் என்றால், கடல் மீனை மட்டும் தவிர்த்திடாதீர்கள். உடலுக்கு தினமும் பாஸ்பரஸின் அளவில், மூன்றில் ஒரு பங்கு 75 கிராம் மீனிலேயே உள்ளது. அதாவது, சுமார் 238 கிராம் பாஸ்பரஸ் 75 கிராம் மீனில் உள்ளது.

சீஸ்
பெரும்பாலான மக்கள், சீஸ் ஒரு ஆரோக்கியமற்ற உணவு என்றே நினைக்கின்றனர். ஆனால் இது ஒரு தவறான கருத்து. 50 கிராம் சீஸில் சுமார் 250 கிராம் அளவிற்கு பாஸ்பரஸ் உள்ளது.

சுண்டைக்காய்
பசி ஏற்பட்டால், சுண்டைக்காய் விதைகள் ஒரு நல்ல தீனியாக இருக்கும். 100 கிராம் சுண்டைக்காய் விதைகளை சாப்பிட மறக்காதீர்கள். ஏனென்றால், 100 கிராம் சுண்டக்காய் விதைகளில் 100 மில்லிகிராம் அளவிற்கு பாஸ்பரஸ் உள்ளது. இதை சாப்பிடுவதால் பசி குறைவதோடு மட்டுமல்லாமல் உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உவுகிறது.

பாதாம்
ஒருவேளை, உங்களுக்கு சுண்டைக்காய் விதைகள் பிடிக்காது என்றால், பாதாம் சாப்பிடலாம். உண்மையில் பாதாமில் பாஸ்பரஸ் அதிகமாகவே உள்ளது. ஆனால் கால் கப் பாதாம் சாப்பிடுவதன் மூலம் 200 மில்லிகிராம் பாஸ்பரஸை மட்டுமே பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
