For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த தீபாவளியை வயித்து வலி இல்லாம கொண்டாட இந்த ஒரு விஷயத்த பண்ணுங்க போதும்...!

தீபாவளியின் போது ஏற்படும் மாசு, தீபாவளி பலகாரங்கள், வீட்டு வேலைகள், அலைச்சல்கள் என நமது ஆரோக்கியத்தை பாதிக்கும் பல விஷயங்கள் உள்ளது.

|

ஒளிகளின் திருவிழாவான தீபாவளி பண்டிகையை கொண்டாட அனைவரும் தயாராகிவிட்டோம். மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொண்டுவரும் தீபாவளி சில ஆரோக்கிய பிரச்சினைகளையும் கொண்டுவரும். தீபாவளியின் போது ஏற்படும் மாசு, தீபாவளி பலகாரங்கள், வீட்டு வேலைகள், அலைச்சல்கள் என நமது ஆரோக்கியத்தை பாதிக்கும் பல விஷயங்கள் உள்ளது.

Tips To Celebrate Diwali Without Fearing Weight Gain

இந்த தீபாவளியில் உங்களுக்கு இதுபோன்ற ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த தீபாவளி ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான தீபாவளியாக அமைய வாழ்த்துக்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறிப்பு 1

குறிப்பு 1

தீபாவளியை சிறப்பாக கொண்டாட நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகும். பண்டிகை மூடில் உங்களின் தினசரி உடற்பயிற்சியை செய்யாமல் இருக்காதீர்கள். அக்டோபர் மாத காலை நேரம் நடைப்பயிற்சிக்கு மிகவும் நல்லதாகும். உடற்பயிற்சி செய்வது உங்களை ம்=தீபாவளியை சிறப்பாக கொண்டாட உதவும்.

குறிப்பு 2

குறிப்பு 2

தீபாவளிக்கு பட்டாசு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு உணவும் முக்கியம். பிடித்த உணவுகளிடம் இருந்து ஒருபோதும் விலகி இருக்காதீர்கள். உங்களுக்கு பிடித்த எந்த உணவை சாப்பிட்டாலும் அதற்கேற்ற அளவிற்கு தண்ணீர் குடிப்பதை உறுதிசெய்து கொள்ளவும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதே உங்களை பாதி நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

MOST READ:தீபாவளியப்ப இதுல ஒரு பொருள் வாங்குனாலும் உங்களுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகுமாம் தெரியுமா?

குறிப்பு 3

குறிப்பு 3

ஆஸ்துமா நோயாளிகள் தீபாவளியின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். அவர்கள் இன்ஹேலரை எப்பொழுதும் உடன் வைத்திருப்பது அவசியம். பட்டாசு வெடிக்கும் இடங்களுக்கு அருகில் செல்லாமல் இருப்பது நல்லது. எண்ணெய் அதிகமாக இருக்கும் உணவுகளிடம் இருந்து விலகியிருப்பது நல்லது.

குறிப்பு 4

குறிப்பு 4

ஆல்கஹால் குடிப்பது மற்றும் இரவு நேர விருந்துகள் நிச்சயமாக உங்கள் தூக்க சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆல்கஹால் தூக்கத்தை சீர்குலைத்து, நள்ளிரவில் உங்களை எழுப்ப வைக்கும். தீபாவளி விருந்துகள் தவிர்க்க முடியாததாக இருந்தால், பிற்பகல் தூங்குவதற்கு இடமளிக்க முயற்சி செய்யுங்கள். அவை நிச்சயமாக இழந்த தூக்கத்தை ஈடுசெய்ய உங்களுக்கு உதவும். இந்த தீபாவளிக்கு சோர்வு, மனநிலை மாற்றங்கள் மற்றும் எடை அதிகரிப்பதைத் தடுக்க போதுமான தூக்கம் பெற முயற்சிப்பது ஒரு சிறந்த வழியாகும்.

 குறிப்பு 5

குறிப்பு 5

நண்பகல் விரதம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இரவு விருந்துக்கு செல்வதற்கு முன் உங்கள் உணவுகளை எடுத்துக்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தேவையற்ற நேரங்களில் இனிப்புகள் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஒருவேளை உங்களால் சாப்பிடும் ஆசையை கட்டுப்படுத்த முடியவில்லை எனில் வீட்டில் தயாரித்த இனிப்புகளை மட்டும் சாப்பிடவும். தீபாவளி அன்று பகல் பொழுதில் சாப்பிடாமல் இருப்பது தேவையற்ற வயிற்றுவலிகள் ஏற்படுவதை தடுக்க உதவும்.

MOST READ:தீபாவளிக்கு உங்கள் சமையலறையை ஈஸியா சுத்தம் பண்றது எப்படினு தெரியுமா?

குறிப்பு 6

குறிப்பு 6

தீபாவளி கொண்டாட்டங்கள் பட்டாசு இல்லாமல் ஒருபோதும் முழுமை பெறாது. குழந்தைகள் பட்டாசு வெடிப்பதற்காகவே தீபாவளிக்காக காத்திருப்பார்கள். பட்டாசு வெடிக்கும் முன் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பாக பட்டாசு வெடித்தாலும் தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவெடுத்து வைத்துக்கொள்ளவும். முடிந்தவரை சுற்றுசூழலை பாதிக்காத இயற்கை பட்டாசுகளை வெடிப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Celebrate Diwali Without Fearing Weight Gain

Here is the list of tips to celebrate diwali without fearing weight gain and health issues.
Story first published: Saturday, October 26, 2019, 20:03 [IST]
Desktop Bottom Promotion