For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்திய ஆய்வின் படி இந்த உணவுகள் உங்க ஆயுளை பல ஆண்டுகள் அதிகரிக்குமாம்...!

தாவர புரதம் உங்கள் இதய நோய் மற்றும் பிற நாட்பட்ட நோய்களுக்கான ஆபத்தை குறைக்கலாம். உங்கள் தினசரி தாவர புரத உட்கொள்ளலை வெறும் 3 சதவீதம் மட்டுமே அதிகரிக்க வேண்டும்.

|

புரோட்டீன் என்பது நமது உடலுக்கு அதன் செயல்பாடுகளை பராமரிக்கவும் அன்றாட வாழ்க்கையின் வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்யவும் அதிக அளவு தேவைப்படும் மிக முக்கியமான மக்ரோனூட்ரியன்களில் ஒன்றாகும். இது புதிய செல்களை உருவாக்க மற்றும் சேதமடைந்த திசு மற்றும் செல்களை சரிசெய்ய உதவுவதால் இது வாழ்க்கையின் கட்டுமான தொகுதி என்று அழைக்கப்படுகிறது.

This Kind of Protein Diet Can Promote Longevity: Study

இப்போது, உங்கள் உணவில் அதிக புரதச்சத்து நிறைந்த உணவை சேர்க்க விஞ்ஞானிகள் மற்றொரு காரணத்தைக் கண்டறிந்துள்ளனர். சமீபத்திய ஆராய்ச்சியின் படி, ஒரு குறிப்பிட்ட வகையான புரதத்தை சாப்பிடுவது உங்கள் நீண்ட ஆயுளை மேம்படுத்த உதவும். இதைப்பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரதம் மற்றும் நீண்ட ஆயுள்

புரதம் மற்றும் நீண்ட ஆயுள்

2020 ஆம் ஆண்டில் பி.எம்.ஜே என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அதிக புரதத்தை சாப்பிடுவது, குறிப்பாக தாவர புரதம் உங்கள் வாழ்க்கையில் பல ஆண்டுகளைச் சேர்க்க உதவும். புரதத்தைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை ஆராய்ச்சியாளர்கள் கோடிட்டுக் காட்டுவது இது முதல் முறை அல்ல. முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அதிக தாவர புரதங்களை சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் புற்றுநோய் உருவாகும் அபாயத்தை குறைக்கும். இதனால் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

MOST READ: இந்த உணவுகள் உங்க மன அழுத்தத்தை குறைத்து மன ஆரோக்கியத்தை பாதுகாக்குமாம்...!

தாவர புரதம் ஏன்?

தாவர புரதம் ஏன்?

புரதத்தின் சிறந்த மூலத்தைத் தீர்மானிக்க, ஆராய்ச்சியாளர்கள் முந்தைய ஆய்வுகளை முழுமையாக ஆய்வு செய்தனர். 18 வயதுக்கு மேற்பட்ட 7,15,128 ஆண்கள் மற்றும் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 32 முடிக்கப்பட்ட ஆய்வுகளை அவர்கள் மதிப்பீடு செய்தனர். முடிவில், அதிக தாவர புரதங்களை சாப்பிடுவது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.

தாவர புறத்தின் நன்மைகள்

தாவர புறத்தின் நன்மைகள்

தாவர புரதம் உங்கள் இதய நோய் மற்றும் பிற நாட்பட்ட நோய்களுக்கான ஆபத்தை குறைக்கலாம். உங்கள் தினசரி தாவர புரத உட்கொள்ளலை வெறும் 3 சதவீதம் மட்டுமே அதிகரிக்க வேண்டும். இது உங்கள் ஆரம்பகால இறப்பு அபாயத்தை 5 சதவீதம் குறைக்கும்.

 புரதத்தின் இரண்டு ஆதாரங்கள்

புரதத்தின் இரண்டு ஆதாரங்கள்

பொதுவாக, புரதத்தின் இரண்டு ஆதாரங்கள் உள்ளன. அவை ஒன்று தாவர வகை, மற்றொன்று அசைவம். தாவர அடிப்படையிலான புரத மூலங்கள் முழுமையற்ற புரதம் என்றும் அசைவம் சார்ந்த புரத மூலங்கள் முழுமையான புரதம் என்றும் அழைக்கப்படுகின்றன. புரதத்தின் முழுமையான மூலமானது அனைத்து ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது.

MOST READ: பால் மற்றும் வாழைப்பழம் இவற்றை சேர்த்து உட்கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

சைவ மற்றும் அசைவை புரதங்க்ள்

சைவ மற்றும் அசைவை புரதங்க்ள்

கோழி, மீன், முட்டை, பால் மற்றும் கடல் உணவுகள் ஒரு முழுமையான புரதமாகும். அதே நேரத்தில் குயினோவா, பக்வீட் மற்றும் சோயா பொருட்கள் தவிர அனைத்து தாவர அடிப்படையிலான உணவு மூலங்களும் முழுமையற்ற புரதமாகும்.

இறுதிகுறிப்பு

இறுதிகுறிப்பு

தாவர அடிப்படையிலான உணவில் ஒரு முழுமையான புரதத்தை உருவாக்க தேவையான அனைத்து வகையான அமினோ அமிலங்களும் இருக்கக்கூடாது. ஆனால் இது ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் உங்கள் நீண்ட ஆயுளை அதிகரிக்கும். எனவே, நீங்கள் நீண்ட காலம் வாழ விரும்பினால், தாவர அடிப்படையிலான உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Kind of Protein Diet Can Promote Longevity: Study

According to latest study eating this type of protein can increase your longevity.
Story first published: Saturday, October 10, 2020, 18:21 [IST]
Desktop Bottom Promotion