Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம்
தினமும் ஒரு நிமிடம் இப்படி செய்வதால் உடலில் நிகழும் மாயங்கள் குறித்து தெரியுமா?
ஸ்பைக்கி பந்து முதலில் டென்மார்க்கில் மனச்சோர்வு கண்டறியப்பட்ட மனநல நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அதாவது மனநல மருத்துவர்கள், தங்கள் நோயாளியின் மனநிலையை அறிவதற்கு இதைப் பயன்படுத்தினர்.
ஸ்பைக்கி மசாஜ் பந்து என்பது சிறு சிறு முட்களைக் கொண்ட பந்தாகும். இது புண்ணான பாதங்களை சரிசெய்ய பயன்படுத்தும் அற்புதமான பொருட்களுள் ஒன்றாகும். இந்த ஸ்பைக்கி பந்து முதலில் டென்மார்க்கில் மனச்சோர்வு கண்டறியப்பட்ட மனநல நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அதாவது மனநல மருத்துவர்கள், தங்கள் நோயாளியின் மனநிலையை அறிவதற்கு இதைப் பயன்படுத்தினர்.

இந்த பந்தின் வடிவமைப்பு மிகவும் எளியது மற்றும் இதன் நீடித்த பிளாஸ்டிக் பயன்பாட்டை எளிதாக்குகிறது. மேலும் இந்த பந்தில் உள்ள கூர்மையான முட்கள் மிகவும் கூர்மையானவை அல்ல. அதன் விளிம்புகள் வட்டமானவை. இந்த பந்து பல வடிவங்களில் கிடைக்கும் மற்றும் மசாஜ் செய்யும் இடங்களில் தசை இறுக்கத்தைப் போக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை பந்துகளை நாம் வீட்டிலேயே, ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண பயன்படுத்தலாம்.

கால் மற்றும் கணுக்கால் காயங்களைத் தடுக்கும்
பாதங்களில் கொடுக்கப்படும் மசாஜ்களானது மூட்டு வலிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. இந்த வகை சிகிச்சையால் வலியில் இருந்து நிவாரணம் கிடைப்பதுடன், கால்களுக்கான உடற்பயிற்சி போன்றும் இருப்பதால் கால்கள் வலிமையாகும். ஏற்கனவே கால் மூட்டுக்களில் இருக்கும் காயங்களில் இருந்து விரைவில் விடுபட, முட்களைக் கொண்ட பந்துகளைக் கொண்டு பாதங்களில் மசாஜ் செய்வது நல்லதாம்.

இரத்த ஓட்டம் மேம்படும்
நாள் முழுவதும் உடலுழைப்பு ஏதும் இல்லாமல் பல மணிநேரம் உட்கார்ந்தவாறு இருப்போம். உடலுழைப்பு என்பது பாதங்களுக்கு மிகவும் அவசியம். ஒருவேளை இரத்த ஓட்டம் மோசமாக இருந்தால், அதுவே பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் தற்போது பலர் தங்களுக்கு பொருத்தமில்லாத ஷூக்களை அணிந்து, பல மோசமான கால் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
ஸ்பைக்கி பந்துகளை பாதங்களுக்கு அடியில் ஒரு நிமிடம் வைத்து தினமும் 10-20 நிமிடம் சுழற்றும் போது, உடலில் இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, உடல் மற்றும் மனம் அமைதியாகும். இதன் விளைவாக இரவில் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

தலைவலி நீங்கும்
2000 ஆம் ஆண்டு டென்மார்க்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ரிஃப்ளெக்சாலஜி சிகிச்சைகள் ஒருவருக்கு ஏற்படும் தலை வலி மற்றும் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களுக்கு தலைவலிக்கான மருந்துகள் எடுப்பது நிறுத்தப்பட்டு, ஸ்பைக்கி பந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று மாத சிகிச்சைகளுக்குப் பின், 65% மக்களின் தலைவலிக்கான் அறிகுறி குறைந்திருப்பது தெரிய வந்தது மற்றும் பலருக்கு தலைவலிக்கான அறிகுறி எதுமே தெரியவில்லை. ஆகவே உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருமாயின் ஸ்பைக்கி பந்தை கால்களுக்கு அடியில் வைத்து மசாஜ் செய்யுங்கள்.

இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படுகிறது. மேலும் ஜீன்கள் மற்றும் சுற்றுப்புற காரணிகளும் நிலைமை மோசமாவதற்கு காரணங்களாகும். 2013 இல் BMC நர்சிங்கில் வெளிவந்த ஆராய்ச்சியில், வாரத்திற்கு 3 முறை 10 நிமிட பாத மசாஜ் மேற்கொள்வதால், மனநிலை மேம்படும், மன பதற்றம் சரியாகும் மற்றும் இரத்த அழுத்தம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.

மன இறுக்கம் மற்றும் மன பதற்றம் சரியாகும்
பாதங்களுக்கு முறையாக மசாஜ் செய்தால், உடல் மற்றும் மனம் சாந்தமடையும். மேலும் ஸ்பைக்கி பந்துகளைக் கொண்டு பாதங்களுக்கு மசாஜ் கொடுப்பதால், மன பதற்றம் குறைவதாக புற்றுநோயாளிகள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த முறை மன இறுக்கத்தையும் சரிசெய்ய உதவுவதாகவும் கூறுகின்றனர்.

குதிகால் வலியை சரிசெய்யும்
நாள்பட்ட குதிகால் வலி பொதுவாக பாதத்தின் வளைவை ஆதரிக்கும் இணைப்பு திசுக்களின் சீரழிவால் ஏற்படுகிறது. இத்தகைய வலியை பாத பயிற்சிகள் மற்றும் பாதங்களில் உள்ள திசுக்களுக்கு கொடுக்கப்படும் மசாஜ் மூலம் சரிசெய்யலாம். ஆகவே ஸ்பைக்கி பந்தை பாதங்களுக்கு அடியில் வளைவான பகுதியில் வைத்து மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்வதால் நிச்சயம் குதிகால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

நீர்க்கட்டுக்களைக் குறைக்கும்
கர்ப்ப காலங்களில் பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படும். பெரும்பாலும் இது நீர்க்கோர்வையால் ஏற்படுவதாகும் மற்றும் கர்ப்ப காலத்தின் இறுதி காலங்களில் தான் பெண்கள் கால் வீக்கத்தால் அவஸ்தைப்படுவார்கள். இத்தகையவர்கள் ஸ்பைக்கி பந்துகளைக் கொண்டு தினமும் பாதங்களுக்கு மசாஜ் கொடுத்து, போதுமான ஓய்வு எடுக்க வேண்டும். முக்கியமாக நல்ல ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.



Click it and Unblock the Notifications
