Latest Updates
-
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும்
இந்த பிரச்சினைகள் உள்ள பெண்களுக்கு உடலுறவில் எப்போதும் ஆசை தோன்றாதாம்...
பெண்களை பொறுத்தவரையில் அவர்களின் பாலியல் ஆசை குறைவதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமானது அவர்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், சில தவறான உணவுமுறைகளும்தான்.
பாலியல் இன்பம் என்பது ஆண், பெண் இருவருக்குமே அவசியமானதாகும். இன்று பெரும்பாலான ஆண்களும், பெண்களும் சந்திக்கும் பிரச்சினை என்னவென்றால் குறுகிய காலத்திலேயே பாலியல் ஆசை குறைந்து விடுவது. இதற்கு உடல்ரீதியான மற்றும் மனரீதியான பல காரணங்கள் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெண்களை பொறுத்தவரையில் அவர்களின் பாலியல் ஆசை குறைவதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமானது அவர்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், சில தவறான உணவுமுறைகளும்தான். இந்த பதிவில் பெண்களின் லிபிடோவை குறைக்கும் விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

வைட்டமின் டி குறைபாடு
டெஸ்டோஸ்டிரோன் அளவை உயர்த்தவும், உற்சாகமான பாலியல் ஆர்வத்திற்கு தேவையான வலிமையை உடலுக்கு வழங்கவும் வைட்டமின் டி உதவும் என்று பாலியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். தினமும் போதுமான அளவிற்கு வைட்டமின் டி எடுத்துக் கொள்வது பெண்களின் பாலியல் வாழ்க்கையை சீராக வைத்திருக்கும். மீன் முட்டையின் மஞ்சள்கரு, புரதச்சத்து நிறைந்த இறைச்சி போன்றவற்றில் போதுமான அளவு வைட்டமின் டி உள்ளது.

மன அழுத்த மருந்துகள்
பெண்கள் மனஅழுத்தத்தை எதிர்க்க எடுத்துக் கொள்ளும் மருந்துகள் அவர்களின் பாலியல் ஆர்வத்தை வெகுவாக பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் உங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிப்பதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

செலீனியம் குறைபாடு
செலீனியம் குறைபாடு பெண்களின் பாலியல் ஆசையை குறைப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆண்களை பொறுத்த வரையில் செலீனியம் அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. பிரேசில் கொட்டைகளில் செலீனியம் அதிகமுள்ளது, ஆனால் இது உடலில் அதிகமாக இருப்பதும் ஆபத்துதான். எனவே சரியான அளவில் இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் ஏ குறைபாடு
தி அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷனின் ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, குறைந்த அளவு வைட்டமின் ஏ குறைவான பாலியல் ஆர்வத்திற்கு காரணமாக அமைகிறது.குறைந்த வைட்டமின் ஏ நுகர்வு உடலில் குறைந்த டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு வழிவகுக்கும், இது பாலியல் ஹார்மோன்கள் மற்றும் லிபிடோவை எதிர்மறையாக பாதிக்கும்.

துணை மீதான ஆர்வமின்மை
எந்த பெண்ணும் தன்னை கோபப்படுத்தும் மற்றும் அழவைக்கும் ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. இந்த மனக்கசப்பு எதனால் வேண்டுமென்றாலும் ஏற்படலாம். இந்த மனக்கசப்புகளை உடனடியாக தீர்த்து விடுவது நல்லது.

அதிகளவு மது அருந்துவது
தொடர்ச்சியாக அதிகளவு மது அருந்துவதை நீங்கள் வழக்கமாக வைத்திருந்தால் அது உங்கள் பாலியல் வாழ்க்கையில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். வைன் குடிப்பது உங்கள் பாலியல் செயல்பாட்டை அதிகரித்தாலும் அதுவும் குறிப்பிட்ட அளவில்தான் இருக்க வேண்டும்.

வயது
நடுத்தர வயது மற்றும் மாதவிடாய் நிறுத்தம் ஆகியவை பாலியல் இயக்கி தொடர்பான ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் உடல் பல மாற்றங்களைச் சந்திப்பதால், மாதவிடாய் காலத்தில் குறைவான பாலியல் ஆர்வத்தை அடைவது இயல்பு. எனவே உங்கள் உறவில் அடிக்கடி புதிய முயற்சிகளை செய்ய முயலுங்கள்.

பிறப்பு கட்டுப்பாடு
டெஸ்டோஸ்டிரோன் அளவு இயல்பை விட குறைவாக இருப்பதால், பிறப்பு கட்டுப்பாட்டில் இருப்பது லிபிடோவைக் குறைக்கும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் உங்களின் பாலியல் ஆர்வத்தை குறைப்பதாக தாங்கள் உணர்ந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி வேறு மாத்திரைகளை உபயோகிக்கவும்.

குறட்டை விடுவது
ஆச்சரியமளிக்கும் வகையில் இரவில் குறட்டை விடுவது என்பது பாலியல் ஆர்வத்தை வெகுவாக குறைக்கும் ஒன்றாகும். உங்களுக்கு குறட்டை விடும் பழக்கம் உள்ளதாக உங்கள் ரூம் மேட்டோ அல்லது உங்கள் துணையோ கூறினால் அதனை சரி செய்ய மருத்துவரை அணுகுவது நல்லது.

நீரிழப்பு
நீங்கள் பகலில் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை மற்றும் உங்கள் உடல் நீரிழப்புடன் இருந்தால், அது உங்கள் செக்ஸ் இயக்கத்தை எதிர்மறையாக பாதிக்கும். உங்கள் பாலியல் இயக்கத்தை சீராக வைத்திருக்க ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும்.

குறைந்த கார்டிசோல்
கார்டிசோல் அளவிற்கும் லிபிடோவிற்கும் நிச்சயமாக தொடர்பு உள்ளது. அதிகப்படியான கார்டிசோல் மற்றும் மன அழுத்தத்தைக் கொண்டிருப்பது உங்களை பாலியல் ஆர்வத்தை குறைக்கும். கார்டிசோலின் அளவு மிகக் குறைவாக இருப்பதும் உங்கள் பாலியல் ஆர்வத்தை வெகுவாக குறைக்கும்.



Click it and Unblock the Notifications