Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
உண்மையாவே மனவலிமை இருக்குறவங்க இதெல்லாம் பண்ணவே மாட்டாங்களாம்... நீங்களும் அதுல ஒருத்தரா?
உடல் வலிமையைக் காட்டிலும் வெற்றிக்கு மனவலிமை மிகவும் அவசியமானதாகும். மனவலிமை வாய்ந்தவர்களுக்கு என்று சில சிறப்பு குணங்கள் இருக்கும்.
வலிமையானவர்களாக இருக்க வேண்டுமென்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசையாகும். உங்களை உடலளவில் வலிமையாக வைத்திருக்க பல உடற்பயிற்சிகளும், செயல்பாடுகளும் உள்ளது. ஆனால் இவை உங்களின் உடலை மட்டும்தான் வலிமையாக்கும். ஆனால் வாழ்க்கையில் வெற்றிபெற உடல் வலிமை மட்டும் போதாது என்பதை மறந்து விடக்கூடாது.

உடல் வலிமையைக் காட்டிலும் வெற்றிக்கு மனவலிமை மிகவும் அவசியமானதாகும். மனவலிமை வாய்ந்தவர்களுக்கு என்று சில சிறப்பு குணங்கள் இருக்கும். அவர்களின் செயல்பாடுகள் மற்றவர்களிடம் இருந்து மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். இவர்களின் வெற்றிக்கு காரணம் இவர்களின் இந்த பக்குவமான மனவலிமைதான். இந்த பதிவில் மனவலிமை மிக்கவர்கள் என்ன செயல்களையெல்லாம் செய்யமாட்டார்கள் என்று பார்க்கலாம்.

நேரத்தை வீணாக்க மாட்டார்கள்
மனதளவில் வலிமையானவர்கள் தங்கள் சூழ்நிலைகளைப் பற்றி அல்லது மற்றவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதைப் பற்றி வருத்தப்படுவதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் வாழ்க்கையில் தங்கள் பங்கிற்கு பொறுப்பேற்கிறார்கள் மற்றும் வாழ்க்கை எப்போதும் எளிதானது அல்லது நியாயமானதல்ல என்பதை புரிந்துகொண்டவராக இருப்பார்கள்.

தங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்
தங்களை மற்றவர்கள் கட்டுப்படுத்துவதை ஒருபோதும் அவர்கள் விரும்பமாட்டார்கள், தங்கள் மீதான அதிகாரத்தை வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். மற்றவர்களால் தனக்கு சிரமம் ஏற்படுவதாக இவர்கள் ஒருபோதும் கூறமாட்டார்கள், ஏனெனில் தங்களின் உணர்ச்சிகள் தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள்.

மாற்றங்களிடம் இருந்து விலகி இருக்க மாட்டார்கள்
மனதளவில் வலிமையானவர்கள் மாற்றத்தைத் தவிர்க்க முயற்சிக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக, அவர்கள் நேர்மறையான மாற்றத்தை வரவேற்கிறார்கள் மற்றும் நெகிழ்வாக இருக்க தயாராக இருக்கிறார்கள். மாற்றம் தவிர்க்க முடியாதது என்பதை அவர்கள் புரிந்துகொண்ட அதனை ஏற்றுக்கொள்ளும் தன்னுடைய திறன்களை நம்புகிறார்கள்.

கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில் ஆற்றலை வீணாக்க மாட்டார்கள்
மனதளவில் வலிமையானவர்கள் ஒருபோதும் தான் இழந்த பொருட்களைப் பற்றியோ அல்லது கடினமான சூல்நிலைப் பற்றியோ குறைகூற மாட்டார்கள். மாறாக, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் என்ன கட்டுப்படுத்த முடியும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள். சில நேரங்களில், அவர்கள் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே விஷயம் அவர்களின் அணுகுமுறைதான் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

மற்றவர்களைப் பற்றி கவலைப்படமாட்டார்கள்
எல்லா நேரத்திலும் அனைவரையும் மகிழ்விக்கத் தேவையில்லை என்பதை மன வலிமையானவர்கள் அறிவார்கள். இல்லை என்று சொல்லவோ, தேவைப்படும் நேரத்தில் பேசவோ இவர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள். அவர்கள் எப்போதும் நியாயமாக நடந்தது கொள்ள முயற்சிப்பார்கள், ஆனால் எப்போதும் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியாது என்ற எதார்த்தத்தை உணர்ந்தவர்கள்.

ரிஸ்க் எடுக்க பயப்பட மாட்டார்கள்
அவர்கள் பொறுப்பற்ற அல்லது முட்டாள்தனமான அபாயங்களை எடுத்துக்கொள்வதில்லை, ஆனால் கணக்கிடப்பட்ட அபாயங்களை எடுத்துக்கொள்ள ஒருபோதும் தயங்கமாட்டார்கள். மனதளவில் வலிமையானவர்கள் ஒரு பெரிய முடிவை எடுப்பதற்கு முன் அபாயங்கள் மற்றும் நன்மைகளை எடைபோடுவதில் நேரத்தைச் செலவிடுகிறார்கள், மேலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அவர்களுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கும்.

கடந்த காலங்களில் வாழமாட்டார்கள்
மனதளவில் வலிமையானவர்கள் கடந்த காலங்களில் வாழ்ந்து நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் கடந்த காலத்தை ஒப்புக்கொள்கிறார்கள், அதிலிருந்து தாங்கள் கற்றுக்கொண்டதை இவர்கள் நன்கு அறிவார்கள். அவர்கள் தொடர்ந்து மோசமான அனுபவங்களை புதுப்பிக்கவோ அல்லது மகிழ்ச்சியான நாட்களைப் பற்றி கற்பனை செய்யவோ மாட்டார்கள். இவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வார்கள், எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுவார்கள்.

ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யமாட்டார்கள்
அவர்கள் தங்கள் செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள் மற்றும் அவர்களின் கடந்த கால தவறுகளிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொள்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் அந்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்ய மாட்டார்கள். மாறாக, அவர்கள் முன்னேறி, எதிர்காலத்தில் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள்.

மற்றவர்களின் வெற்றியை எதிர்க்க மாட்டார்கள்
மனதளவில் வலிமையானவர்கள் வாழ்க்கையில் மற்றவர்களின் வெற்றியைப் பாராட்டலாம் மற்றும் கொண்டாடலாம். அவர்கள் பொறாமைப்படமாட்டார்கள். அதற்குப் பதிலாக, வெற்றி கடின உழைப்புடன் வருகிறது என்பதை அவர்கள் உணர்கிறார்கள், மேலும் வெற்றிக்காக கடினமாக உழைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

தனிமையை கண்டு அஞ்ச மாட்டார்கள்
மனதளவில் வலிமையானவர்கள் தனியாக இருப்பதை பொறுத்துக்கொள்வார்கள், அமைதியைக் கண்டு ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். அவர்கள் தங்கள் எண்ணங்களுடன் தனியாக இருக்க பயப்படுவதில்லை, தங்களின் தனிமையான நேரத்தை பயனுள்ளதாக மாற்றுவார்கள். அவர்கள் எப்போதும் தோழமை மற்றும் பொழுதுபோக்குக்காக மற்றவர்களைச் சார்ந்து இருப்பதில்லை, மாறாக தனியாக மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று இவர்கள் நம்புவார்கள்.



Click it and Unblock the Notifications











