Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
உங்களின் பாலியல் ஆசையும், சக்தியும் அதிகரிக்கணுமா? இந்த ஈஸியான வேலைய பண்ணுங்க போதும்...!
மருத்துவ வழிகளை தவிர்த்து உங்களின் பாலியல் ஆசைகளை தூண்டுவதற்கு வேறு சில வழிகளும் உள்ளது. இந்த வழிகளில் பெரும்பாலானவை ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.
திருமண பந்தத்தில் ஆண், பெண் இருவருக்குமிடையே இருக்கும் பிணைப்பை அதிகரிப்பது அவர்களுக்குள் இருக்கும் சீரான தாம்பத்யம்தான். ஆனால் நாளடைவில் இருவருக்குமிடையே இருக்கும் நெருக்கம் குறையும்போது அவர்களின் பாலியல் ஆசையும் குறைந்துவிடும். ஆண், பெண் இருவரின் பாலியல் ஆசைகளை அதிகரிக்க மருத்துவரீதியாக பல வழிகள் உள்ளது.

மருத்துவ வழிகளை தவிர்த்து உங்களின் பாலியல் ஆசைகளை தூண்டுவதற்கு வேறு சில வழிகளும் உள்ளது. இந்த வழிகளில் பெரும்பாலானவை ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். இந்த பதிவில் பாலியல் ஆசையை அதிகரிக்கும் வித்தியாசமான எளிய வழிகள் என்னவென்று பார்க்கலாம்.

திகில் திரைப்படம்
உங்கள் அட்ரினலின் சுரப்பை அதிகரிப்பது உங்கள் பாலியல் இயக்கத்தை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட முறையாகும். இதனை செய்ய பல வழிகள் உள்ளது, இதனை உங்கள் படுக்கையில் இருந்து எழாமல் கூட பண்ணலாம். பயமுறுத்தும் திரைப்படத்தைப் பார்க்கும்போது, ஒரு நபரின் அட்ரினலின் இயற்கையாகவே பயத்தின் விளைவாக உயர்கிறது. உங்கள் துணையுடன் சேர்ந்து திகில் திரைப்படம் பார்ப்பது உங்கள் பாலியல் செயல்திறனை அதிகரிக்கும்.

க்ரீன் டீ
கிரீன் டீ உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பல அதிசயங்களை செய்கிறது. இது உடல் எடையை குறைக்கவும், உங்கள் மனதைக் கூர்மையாக வைத்திருக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது. மேலும் இது ஒரு லிபிடோ பூஸ்டர் ஆகும், இதில் ஆற்றல் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் பல வேதிப்பொருட்கள் உள்ளது. இதில் இருக்கும் காஃபைன் பாலியல் ஆசையை அதிகரிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது உங்கள் மனநிலையை அமைதிப்படுத்துவதுடன் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கிறது.

ஜிங்க்
உங்களின் பாலியல் செயல்திறனையும், ஆசையையும் அதிகரிக்க எளிய மற்றும் உபயோகமான வழி நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஜிங்க் அளவை அதிகரிப்பதுதான். சிறந்த இயற்கை லிபிடோ பூஸ்டர் என்று புகழப்படும் ஜிங்க் ஆண்களுக்கும், பெண்களுக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. டெஸ்டோஸ்டிரோன் எந்த அளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு உங்கள் பாலியல் செயல்திறன் அதிகமாக இருக்கும். ஜிங்க் மாத்திரைகள், மட்டன், சிக்கன், கீரை, பூசணிக்காய் விதைகள் போன்றவற்றில் ஜிங்க் அதிகமுள்ளது.

நிதானமான குளியல்
நிதானமான வெதுவெதுப்பான குளியல் உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் என்று நீங்கள் அறிவீர்கள், ஆனால் இது உங்களின் பாலியல் ஆசையை அதிகரிக்கும் என்று நீங்கள் அறிவீர்களா?. உங்களின் மனஅழுத்தம் உங்களின் பாலியல் ஆசைகளை வெகுவாக பாதிக்கும். எனவே உங்கள் மனதை அமைதிப்படுத்துவது உங்கள் பாலியல் ஆசையை அதிகரிக்கும் சிறப்பான வழி என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உங்கள் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

ஆழமான தூக்கம்
போதுமான தூக்கம் கிடைக்காதது உங்கள் உடலின் ஆற்றல் நிலைகள், வேலை செயல்திறன் மற்றும் மனநிலை போன்ற பல அம்சங்களை குழப்பக்கூடும். மேலும் தூக்கமின்மை என்பது டெஸ்டோஸ்டிரோனின் பற்றாக்குறை என்பதையும் குறிக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் உங்கள் உடலில் உள்ள முக்கிய வேதிப்பொருளாகும், இது உங்கள் லிபிடோவை இயக்குகிறது, மேலும் ஆய்வுகள் நீங்கள் எவ்வளவு தூங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து டெஸ்டோஸ்டிரோன் அளவு மாறுபடுவதை கண்டறிந்துள்ளது. எந்த வேலையாக இருந்தாலும் உங்களின் எட்டு மணி நேரத்தை தூக்கத்தில் செலவழிப்பது உங்களின் பாலியல் வாழ்க்கைக்கு நல்லது.

அரோமாதெரபி
லாவெண்டர் மற்றும் வெண்ணிலா ஆகியவற்றைக் கொண்டிருக்கும் அத்தியாவசிய எண்ணெய்கள் உங்கள் மனநிலையை அமைதிப்படுத்துவதாக ஆய்வுகளை கூறுகிறது. நீங்கள் நிம்மதியாக உணரும்போது உங்கள் உடலின் பாலியல் ஆசைகள் அதிகரிக்கும். அரோமாதெரபி உங்கள் விருப்பத்தை நிதானப்படுத்தவும் வலுப்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும், ஏனெனில் இது உங்கள் அடிப்படை மனித உணர்வுகளைத் தூண்டுகிறது, இது உங்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

கவர்ச்சியான உடை
உங்களை பற்றி நீங்களே கவர்ச்சியாக உணராவிட்டால் உங்களுக்கு பாலியல் ஆர்வம் அதிகரிக்காது. உங்களின் மீது உங்களுக்கே தன்னம்பிக்கை இல்லாதது உங்கள் பாலியல் ஆசையை தீவிரமாக பலவீனப்படுத்தி, உடலுறவில் இருந்து நீங்கள் பெறும் இன்பத்தில் தலையிடும். எனவே கவர்ச்சியான உடைகளை அணிவதை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். நீங்கள் அணியும் ஆடைகள் உங்களின் தன்னம்பிகையை அதிகரிப்பதாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
