For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலுமிச்சை தோலை இப்படி யூஸ் பண்ணுறது... உங்க வாழ்க்கைக்கு என்னென்ன நன்மைகளை கொடுக்கும் தெரியுமா?

எலுமிச்சை தோல்கள் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறப்படுகிறது. ஏனென்றால், எலுமிச்சை தோலில் பெக்டின் என்ற கூறு உள்ளது, இது எடை இழப்புக்கு உதவும் என்று நம்பப்படுகிறது.

|

எலுமிச்சை பழம் உங்கள் உடல், சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. இவை மட்டுமல்லாமல் வீட்டு பயன்பாடுகளுக்கும் எலுமிச்சை பயன்படுகிறது. இதன் சிறப்பு அம்சம் பெரும்பாலான வழிகளில் இதை பயன்படுத்தி, பல்வேறு நலன்களை நாம் பெறலாம்என்பதுதான். எலுமிச்சை பழம் மட்டுமில்லாமல் அதன் தோலும், நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்று உங்களுக்கு தெரியுமா? ஆம். எலுமிச்சை தோலின் ஆரோக்கிய நன்மைகள் தெரியமால் மக்கள் அதை தூக்கி எறிகிறார்கள். இதில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன என்று பல ஆராய்ச்சிகள் கூறுகிறது.

smart-uses-of-lemon-peels-that-will-change-your-life-in-tamil

அதன் நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கங்கள் வாய்வழி ஆரோக்கியம், நோயெதிர்ப்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கலாம். இது பல புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எலுமிச்சை தோலை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையை மாற்றும் எலுமிச்சை தோல்களின் புத்திசாலித்தனமான பயன்பாடுகள் பற்றி இக்கட்டுரையில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை தோல் மார்மலேட்

எலுமிச்சை தோல் மார்மலேட்

எலுமிச்சை தோல்களைப் பயன்படுத்தி ஒரு சுவையான மர்மலாட் செய்யலாம். எலுமிச்சை தோல்களை அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தை எடுத்து அரைத்த எலுமிச்சை தோல் விழுது, எலுமிச்சை சாறு, தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து, கலவையை கெட்டியாகவும், மிருதுவாகவும் மாறும் வரை கிளறவும். அதை கலந்து டோஸ்ட்களுடன் மகிழுங்கள். சுவையை அதிகரிக்க இதில் இலவங்கப்பட்டையையும் சேர்க்கலாம்.

எலுமிச்சை தோல் எண்ணெய்

எலுமிச்சை தோல் எண்ணெய்

பாதாம் எண்ணெய் அல்லது எள் எண்ணெயில் எலுமிச்சைத் தோல்களை சேர்க்கலாம். இந்த எண்ணெய் உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்க உதவும். உண்மையில், இந்த எண்ணெயைக் கொண்டு தினமும் மசாஜ் செய்வது குறைபாடற்ற பளபளப்பான சருமத்தை உங்களுக்கு வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் தேவையான ஊக்கத்துடன் சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும் உதவும்.

சாலட் டிரஸ்ஸிங்

சாலட் டிரஸ்ஸிங்

புதிய எலுமிச்சை தோல்களை அரைத்து, அவற்றை ஒரு காகித பேப்பரில் வைக்கவும். அதை வெயிலில் உலர்த்தி அல்லது 2-3 நிமிடங்கள் கடாயில் சுட்டு எடுத்து வைக்கவும். நீங்கள் சாலட் செய்யும்போது, ஆலிவ் எண்ணெய், ரோஸ்மேரி இலைகள், கருப்பு மிளகுத்தூளுடன் இந்த எலுமிச்சை தோலையும் சேர்த்து நன்கு கலக்கவும். இது உங்கள் சாலட்களுக்கு புதிய நறுமணத்தை கொடுக்கும். பல ஆரோக்கிய நன்மைகளையும் நீங்கள் பெறலாம். மேலும், பல நாட்கள் மற்றும் மாதங்களுக்கு கூட இந்த எலுமிச்சை தோல் டிரஸ்ஸிங்கை நீங்கள் வைத்து பயன்படுத்தலாம்.

எலுமிச்சை தோல் பூச்சி விரட்டி

எலுமிச்சை தோல் பூச்சி விரட்டி

அறையின் நறுமணத்தை மாற்றுவது முதல் பூச்சிகள் மற்றும் பூச்சிகளை வீட்டில் அண்ட விடாமல் வைத்திருப்பது வரை, எலுமிச்சை தோல்கள் ஒரு நல்ல பூச்சிக்கொல்லியாக இருக்கும். ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நொறுக்கப்பட்ட நாப்தலீன் உருண்டைகள், சவர்க்காரம், வினிகர், எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் எலுமிச்சைத் தோல்களைக் கலந்து இந்த எளிய தீர்வைத் தயாரிக்கலாம். பாதிக்கப்பட்ட இடங்களில் இந்த கலவையை தெளிக்கவும், தேவையற்ற பூச்சிகள் மற்றும் பூச்சிகளை அகற்ற இவை உதவும்.

எலுமிச்சை தோல் தூள்

எலுமிச்சை தோல் தூள்

நீங்கள் கவர்ச்சியான உணவுகளை சாப்பிட விரும்பும் நபராக இருந்தால், இந்த சுவையான எலுமிச்சை தோல் பொடியை முயற்சிக்கவும். அதை உங்கள் சாலடுகள், கேக் பேட்டர்கள், கறிகள், குழம்புகள், இனிப்புகள், சூப்கள் ஆகியவற்றில் பயன்படுத்தலாம். இவை உங்களுக்கு புத்துணர்ச்சியையும் ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும். இந்த விரைவான பொடியை தயாரிக்க, எலுமிச்சை தோலை வெயிலில் காயவைத்து, பொடியாக அரைக்கவும். பின்னர், இந்த பொடியை ஒரு கொள்கலனில் சேமித்து தேவைப்படும்போது, பயன்படுத்தலாம்.

எடை இழப்புக்கு எலுமிச்சை தோல் நல்லதா?

எடை இழப்புக்கு எலுமிச்சை தோல் நல்லதா?

எலுமிச்சை தோல்கள் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறப்படுகிறது. ஏனென்றால், எலுமிச்சை தோலில் பெக்டின் என்ற கூறு உள்ளது, இது எடை இழப்புக்கு உதவும் என்று நம்பப்படுகிறது.

முகத்தில் எலுமிச்சை தோலை எவ்வாறு பயன்படுத்துவது?

முகத்தில் எலுமிச்சை தோலை எவ்வாறு பயன்படுத்துவது?

எலுமிச்சை தோல்களை அரைத்து, அதனுடன் தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும். உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் அல்லது வயது புள்ளிகள் உள்ள இடங்களில் பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள். இந்த பேஸ்ட் ஒரு மணி நேரம் உங்கள் முகத்தில் இருக்கட்டும். அதன்பின்னர், தண்ணீரில் கழுவவும். இதற்கான பலனை விரைவில் நீங்கள் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Smart uses of lemon peels that will change your life in tamil

Here we are talking about the Smart uses of lemon peels that will change your life in tamil.
Story first published: Friday, January 13, 2023, 19:10 [IST]
Desktop Bottom Promotion