Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா?
அறிகுறியைப் பொறுத்து 6 வகையான கொரோனா வைரஸ் இருக்குதாம் - புதிய ஆய்வில் தகவல்
தற்போது ஆராய்ச்சியாளர்கள், 6 தனித்துவமான கொரோனா வைரஸை அடையாளம் கண்டுள்ளனர். ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அறிகுறிகளால் வேறுபடுகின்றன.
உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் நாவல் கொரோனா வைரஸ் குறித்து ஒவ்வொரு நாளும் புதிய கண்டுபிடிப்புக்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் மூக்கு, கண்கள் அல்லது வாய் வழியாக உடலில் நுழைகிறது என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பேசும் போது, தும்மும் போது அல்லது இருமும் போது வெளிவரும் நீர்த்துளிகள் வழியாக இது மற்றவர்களுக்கு பரவுகிறது.

ஆனால் தற்போது ஆராய்ச்சியாளர்கள், 6 தனித்துவமான கொரோனா வைரஸை அடையாளம் கண்டுள்ளனர். ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அறிகுறிகளால் வேறுபடுகின்றன. கூடுதலாக, இந்த வகைகள் நோயின் தீவிரத்தன்மை மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் போது சுவாச ஆதரவின் தேவை ஆகியவற்றை எளிதில் அறிய உதவுகின்றன.

லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள்
இங்கிலாந்தில் உள்ள லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள், பரவலாக பயன்படுத்தப்படும் கோவிட்-19 அறிகுறி ட்ராக்கிங் ஆப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட டேட்டாக்களை ஆய்வு செய்ததன் மூலம் பல்வேறு வகையான கோவிட்-19 அறிகுறிகளைக் கண்டறிந்தனர்.
இந்த கண்டுபிடிப்புகள் கொரோனாவின் மருத்துவ நிர்வாகத்திற்கு முக்கிய தாக்கங்களைக் கொண்டுள்ளன. மேலும் இந்த கண்டுபிடிப்புகளால் கொரோனா வைரஸ் தொற்றால் யார் மிகவும் ஆபத்தின் உள்ளனர் மற்றும் யாருக்கு மருத்துவமனை பராமரிப்பு தேவைப்படும் என்பதை கணிக்க மருத்துவர்களுக்கு உதவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் அந்த கல்லூரியின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

குறைவாக அறியப்பட்ட கோவிட்-19 அறிகுறிகள்
இருமல், காய்ச்சல், வாசனை இழப்பு (அனோஸ்மியா) ஆகியவை கோவிட்-19 இன் முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் கொரோனா ட்ராக்கிங் ஆப் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள், கொரோனா நோயாளிகளுக்கு தலைவலி, தசை வலி, களைப்பு, வயிற்றுப்போக்கு, குழப்பம், பசியின்மை, மூச்சுத் திணறல் மற்றும் பலவிதமான அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

எளிதில் சிகிச்சை அளிக்க உதவும்
மேலும் இந்த தரவு மூலம் நோயாளிகளிடையே உள்ள முன்னேற்றம் மற்றும் விளைவுகள் கணிசமாக வேறுபடுகின்றன என்பதும் தெரிய வந்தது. சிலர் லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளை அல்லது லேசான சொறி மட்டும் இருந்த நிலையில், மற்றவர்கள் கடுமையான அல்லது ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டனர் என்றும் தகவல்கள் தெரிய வந்தன.

1,600 பேர் கொண்ட ஆய்வு
ஏதேனும் குறிப்பிட்ட அறிகுறிகள் நோயின் முன்னேற்றத்துடன் தொடர்புடையதா என்பதை கண்டறிய, ஆராய்ச்சி குழு ஒரு இயந்திர கற்றல் வழிமுறையைப் பயன்படுத்தி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள 1,600 பேரிடமிருந்து பெறப்பட்ட தரவை பகுப்பாய்வு செய்ய, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 உடன் ஆய்வு செய்தனர்.
அதில் நோயின் வளர்ச்சியைப் பொறுத்து குறிப்பிட்ட அறிகுறிகளைக் கொண்ட குழுக்களாக கோவிட்-19 இல் ஆறு வகைகள் இருப்பதைக் கண்டறிந்தனர். அதோடு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் 1,000 பயனர்களின் கோவிட்-19 ட்ராக்கிங் ஆப்பில் மே மாதத்தில் பதிவு செய்திருந்த தரவுகளை ஆய்வு செய்தனர்.

6 வகையான கொரோனா அறிகுறிகள்
இந்த ஆய்வில் 6 வகையான கொரோனாவின் அறிகுறிகள் கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டன. அவையாவன:
* முதல் வகையில் காய்ச்சல் இல்லாத தலைவலி, வாசனை இழப்பு, தசை வலி, இருமல், தொண்டை புண், மார்பு வலி இருக்கும்.
* இரண்டாம் வகையில் காய்ச்சலுடன் தலைவலி, வாசனை இழப்பு, இருமல், தொண்டை புண், தொண்டை கரகரப்பு, பசியின்மை ஆகியவை ஏற்படும்.
* மூன்றாவது வகையில் தலைவலி, வாசனை இழப்பு, பசியின்மை, வயிற்றுப்போக்கு, தொண்டை புண், மார்பு வலி இருக்கும். ஆனால் இருமல் ஏதும் இருக்காது.
* 4 வது வகையில் மேலே கூறிய அனைத்து அறிகுறிகளுடன் அதீத சோர்வு ஏற்படும்.
* 5 ஆவது வகையில் மன குழப்பத்துடன், தலைவலி, வாசனை இழப்பு, பசியின்மை, இருமல், காய்ச்சல், தொண்டை புண், மார்பு வலி, களைப்பு, தசைவலி போன்றவை இருக்கும்.
* 6 ஆவது வகை தீவிர நிலை ஆகும். இதில் கடுமையான அடிவயிற்று வலி, வயிற்றுப் போக்கு, மன குழப்பம், மூச்சுத் திணறல், தலைவலி, வாசனை இழப்பு, பசியின்மை, காய்ச்சல், இருமல், களைப்பு, தசை வலி போன்றவை அடங்கும்.
இவ்வாறு கொரோனாவின் 6 வகைகளை கண்டறிந்தனர். இதில் 4, 5 மற்றும் 6 வகையின் அறிகுறிகளை சந்திக்கும் நோயாளிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதோடு, அவர்களுக்கு சுவாச ஆதரவான வெண்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் தேவைப்படுவதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.



Click it and Unblock the Notifications