For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...!

அனைவருக்குமே வயதாகும்போது அவர்களின் மூளையின் செயல்திறன் குறையத்தான் செய்யும். ஆனால் ஒரு சிலருக்கு வயதாகும் முன்னரே மூளையின் செயல்திறன் குறையும் அபாயம் உள்ளது.

|

நமது உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் சக்தியாக இருப்பது நமது மூளைதான். அனைவருக்குமே வயதாகும்போது அவர்களின் மூளையின் செயல்திறன் குறையத்தான் செய்யும். ஆனால் ஒரு சிலருக்கு வயதாகும் முன்னரே மூளையின் செயல்திறன் குறையும் அபாயம் உள்ளது. இதற்கான பல அறிகுறிகளை நாம் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

signs your brain is aging faster than you are

மூளைக்கு வயதாவதற்கு பல காரணங்கள் உள்ளது. உங்களின் பணிச்சுமை, மனநிலை, உணவுப்பழக்கங்கள் என காரணங்கள் இருக்கிறது. இந்த பதிவில் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாவதன் அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறுகிய கால நினைவிழப்பு

குறுகிய கால நினைவிழப்பு

மூளைக் கோளாறு என்று வரும்போது அதில் முதலிடத்தில் இருப்பது அல்சைமர் நோய்தான். அல்சைமர் ஏற்பட்டவர்களுக்கு குறுகிய கால நினைவிழப்பு ஏற்படும். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகள், உரையாடல்கள் போன்றவற்றை மறந்து விடுவது இதன் அறிகுறியாகும். இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.

வார்தைகளை கண்டுபிடிப்பதில் சிரமம்

வார்தைகளை கண்டுபிடிப்பதில் சிரமம்

40 வயதில் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு கூட பெயர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. நாளடைவில் இது வார்த்தைகளை கூட கண்டறிவதை சிரமம் ஆக்குகிறது. இதற்கு காரணம் மொழியை கட்டுப்படுத்தும் உங்கள் மூளையின் பாகங்கள் சரியாக செயல்படாமல் இருப்பதுதான். மேலும் இது அல்சைமர், மூளைப்புண், பக்கவாதம் போன்றவற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

வாகனம் ஓட்டுவதில் சிரமம்

வாகனம் ஓட்டுவதில் சிரமம்

டிமென்ஷியா உள்ளவர்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை பெரும்பாலும் உணர்வதில்லை ஆனால் அவர்களின் நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் அவர்களின் பிரச்சினையை நன்கு அறிவார்கள். பொதுவாக மூளைக் குறைபாடு இருந்தால் அவர்களுக்கு வாகனம் ஓட்டுவது மற்றும் உடலில் ஏற்படும் கோளாறுகள் போன்றவை ஏற்படலாம்.

MOST READ: இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தையை பற்றி உங்களுக்கு தெரியுமா? இன்று அவரின் 100வது பிறந்த நாள்...!

வாசனை இழப்பு

வாசனை இழப்பு

உங்கள் வாசனையின் திறன் குறைவது பார்கின்சன் நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கும் என்பது மட்டுமின்றி அது மூளையின் செயல்திறனின் குறைபாட்டின் அறிகுறியாகவும் இருக்கலாம். காபி, புகை, பழங்கள் போன்றவற்றின் வாசனை இழப்பது உங்கள் மூளைக்கு வயதாவதன் அறிகுறியாகும்.

கேட்பதில் சிக்கல்

கேட்பதில் சிக்கல்

செவித்திறன் இழப்பிற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் அதில் மூளையின் குறைபாடும் ஒன்றாகும். இந்த நிலையில் தொடர்புடைய மூளையில் உள்ள பிளேக்குகள் தளத்தின் கூற்றுப்படி, செவிப்புலன் மையத்தின் செயல்பாட்டு திறனில் தலையிடக்கூடும்.

பதட்டம்

பதட்டம்

உங்கள் மனநிலைக்கும் வயதாவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்களுக்கு ஏற்படும் பதட்டம் மூளைக்கு வயதாவதன் அறிகுறியாக இருக்கலாம். ஆய்வுகளின் அடிப்படையில் இது மூளைக்கு வயதாவதன் ஆரம்பகால அறிகுறியாக இருக்கலாம் என்று கூறுகிறது.

MOST READ: ராகு பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள்... ராகு தோஷம் உங்கள் வாழ்க்கையை எப்படி சிதைக்கும் தெரியுமா?

பார்வைக் குறைபாடு

பார்வைக் குறைபாடு

பார்வைக் குறைபாடும் உங்கள் மூளைக்கு வயதாவதன் அறிகுறியாக இருக்கலாம். இந்த குறைவான பார்வைக் கூர்மை பொதுவாக விழித்திரை மற்றும் பார்வை நரம்பில் ஏற்படும் வீக்கத்தால் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs Your Brain Is Aging Faster Than You Are

There are some symptoms which says your brain is aging faster than you are.
Story first published: Monday, August 12, 2019, 15:09 [IST]
Desktop Bottom Promotion