Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
ஆண்களே! இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க அளவுக்கதிகமா சுயஇன்பம் செய்றீங்கன்னு அர்த்தமாம்... உடனே நிறுத்துங்க...!
சுயஇன்பம் என்பது இருபாலினத்தாருக்கும் பொதுவான இயற்கை நிகழ்வாகும். சுயஇன்பத்தை சுற்றி காலம் காலமாக பல கட்டுக்கதைகளும், மூடநம்பிக்கைகளும் இருந்து வருகிறது.
சுயஇன்பம் என்பது இருபாலினத்தாருக்கும் பொதுவான இயற்கை நிகழ்வாகும். சுயஇன்பத்தை சுற்றி காலம் காலமாக பல கட்டுக்கதைகளும், மூடநம்பிக்கைகளும் இருந்து வருகிறது. மருத்துவரீதியாக சுயஇன்பம் என்பது முற்றிலும் ஆரோக்கியமானது. உண்மையில், இது நிறைய ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால், எதையும் அதிகமாக செய்யும்போது அதில் நிச்சயம் சில ஆபத்துகள் இருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக நீங்கள் அளவிற்கு அதிகமாக சுயஇன்பம் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் உணரவே நீண்ட காலம் தேவைப்படும். அதற்குள் உங்கள் உடல் பல பக்க விளைவுகளை சந்தித்து விடும். இந்த ஆபத்துக்களை தவிர்க்க சுயஇன்பத்தை குறிப்பிட்ட அளவில், பாதுகாப்பான முறையில் பராமரிக்க வேண்டும். இந்த பதிவில் நீங்கள் அளவிற்கு அதிகமாக சுயஇன்பம் செய்கிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

அறிகுறி 1
முதல் தெளிவான அறிகுறி உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு சுயஇன்பம் செய்வது. அதற்கென துல்லியமான எண்ணிக்கைகள் எதுவும் இல்லையென்றாலும், உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்ளும் வரை தொடர்ந்து சென்றால், அதைக் கண்டிப்பாக குறைக்க வேண்டும்.

அறிகுறி 2
நீங்கள் ஏற்கனவே சுயஇன்பத்தில் ஈடுபட்ட பிறகும், ஆற்றல் இழந்த நிலையிலும், மீண்டும் சுயஇன்பம் செய்ய தூண்டப்படுவதாக உணர்வது. அடுத்தடுத்து சுயஇன்பம் செய்ய வேண்டிய கட்டாயத் தேவையை நீங்கள் உணர்ந்தால் அது அதிகளவு சுயஇன்பத்திற்கான அறிகுறியாகும்.

அறிகுறி 3
உண்மையான உடலுறவை விட நீங்கள் சுயஇன்பத்தை விரும்புகிறீர்கள் எனில் நீங்கள் சுயஇன்பத்திற்கு அடிமையாகி விட்டீர்கள் என்று அர்த்தம். துணையுடன் நெருக்கத்தை தவிர்த்து, உங்கள் சொந்த இன்பத்தை விட வேறு எதுவும் உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனில் நீங்கள் சுயஇன்ப அடிமைத்தனத்தை எட்டிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

அறிகுறி 4
உடலுறவு கொள்ளும்போது கூட ஆணுறுப்பில் விறைப்புத்தன்மையை பெறுவது உங்களுக்கு கடினமாக இருக்கும். ஒருவேளை விந்தணுவை மீண்டும் நிரப்புவதற்கு உங்கள் உடலுக்கு போதுமான நேரம் கொடுக்காதது இதற்கு காரணமாக இருக்கலாம்.

அறிகுறி 5
உங்களுக்கு பல பாலியல் துணைகள் இருந்தாலும், உடலுறவிற்குப் பிறகும் நீங்கள் திருப்தியாக உணர மாட்டிர்கள். இது நீங்கள் அதிகளவு சுயஇன்பம் செய்வதற்கான அறிகுறியாகும்.

அறிகுறி 6
அதிகப்படியான சுயஇன்பம் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். முடி உதிர்தலுக்கு அதிகளவு சுயஇன்பம் மட்டுமே காரணம் இல்லை என்றாலும், திடீரென்று முடி உதிர்வதை நீங்கள் கவனித்திருந்தால், சுயஇன்பத்தை கட்டுப்படுத்த வேண்டிய நேரமிது.

அறிகுறி 7
சுயஇன்பம் செய்யாமல் ஒரு நாளும் உங்களால் இருக்க முடியாது. நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், உங்கள்சிந்தனை முழுவதும் சுயஇன்பம் செய்வதற்கான தருணத்திற்காக காத்திருந்தால் உங்கள் சுயஇன்ப வேட்கை கட்டுப்பாடில்லாமல் செல்கிறது என்று அர்த்தம்.

அறிகுறி 8
ஒருமுறை சுயஇன்பம் செய்வது ஒருபோதும் உங்களுக்கு போதுமானதாக இருக்காது. ஒரே நாளில் பலமுறை சுயஇன்பம் செய்யும் பழக்கத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் அடிக்கடி இரவு வெகுநேரம் வரை விழித்திருப்பதைக் கண்டால், மீண்டும் ஆணுறுப்பு விறைப்பை அடையும் தருணத்திற்கு காத்திருந்தால், அது சுயஇன்ப அடிமைத்தனத்தின் அறிகுறியாகும்.



Click it and Unblock the Notifications