Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்..
காரணமே இல்லாம அடிக்கடி எரிச்சல் படுறீங்களா? அப்ப உடம்புல இந்த சத்து குறைவா இருக்குனு அர்த்தம்…
கலோரி உட்கொள்வதை குறைத்தால், கலோரி குறைபாடு ஏற்படுவதோடு பல்வேறு உடல் நல பிரச்சனைகளும் ஏற்படக்கூடும். அதாவது உடற்சோர்வு, மோசமான நோய் எதிர்ப்பு மண்டலம், முடி உதிர்வு என பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
பொதுவாகவே உடல் எடை குறைப்பு முறைகளில் முக்கிய இடத்தை வகிப்பது கலோரி குறைப்பு முறை தான். இதனை ஒரு ஆரோக்கியமான மற்றும் எளிமையான முறை என்றும் கூட கூறலாம். உடலின் அதிகப்படியான எடையை குறைப்பதற்கு, நாம் எடுத்துக் கொள்ளும் கலோரிகளின் அளவை குறைப்பது ஒரு நல்ல வழி என்றே சொல்ல வேண்டும். ஆனால், கலோரிகளால் உடல் எடை கூடாதவர்களுக்கு இது பொருந்தாது.

இதுப்போன்ற சந்தர்பங்களில், கலோரி உட்கொள்வதை குறைத்தால், கலோரி குறைபாடு ஏற்படுவதோடு பல்வேறு உடல் நல பிரச்சனைகளும் ஏற்படக்கூடும். அதாவது உடற்சோர்வு, மோசமான நோய் எதிர்ப்பு மண்டலம், முடி உதிர்வு என பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாருங்கள், கலோரி குறைபாடு குறித்து சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்...

கலோரி குறைபாடு
பெரும்பாலான மக்கள், தங்களது உடல் எடையை குறைக்க, எடுத்துக் கொள்ளும் கலோரியின் அளவே குறைக்கின்றனர். ஆனால், போதுமான அளவு கலோரி நம் உடலுக்கு கிடைக்காத பட்சத்தில் அது உங்களது அன்றாட வாழ்வின் செயல்களில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். உடல் எடை, ஃபிட்னஸ் அளவு, ஓர் நாளைக்கு தேவையான எனர்ஜி என அனைத்தையும் பாதிக்கக்கூடும்.
கலோரி குறைப்பு முறை ஒரு சிறந்த உடல் எடை குறைப்பு முறையாக இருந்தாலும், அது சில சமயங்களில் மோசமான விளைவுகளையும் உண்டாக்கிவிடும். உடலுக்கு தேவையான கலோரி அளவு சரியாக கிடைக்காத போது எதிர்வினைகளை நிகழ்த்திவிடும். ஆம், மனம், உணர்ச்சி மற்றும் உடல் அளவிலான பிரச்சனைகளும் ஏற்படக்கூடும். இப்போது கலோரி குறைபாடு இருப்பதை உணர்த்தும் 5 அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். இப்படி ஏதாவது தோன்றினால் உடனே நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரியின் அளவை அதிகரிக்க வேண்டும்.

முடி உதிர்வு
முடி உதிர்வு என்பதை சாதாரண பிரச்சனை என்று தான் பலரும் நினைக்கின்றனர். ஆனால், பல சமயங்களில் கலோரி குறைபாடு காரணமாகவும் முடி உதிர்வு ஏற்படக்கூடும். சரியான உணவுப்பழக்கம், முறையாக கூந்தல் பராமரிப்புகளை மேற்கொண்டும் உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் உடனே நீங்கள் கவனிக்க வேண்டியது உங்களது கலோரி அளவை தான். அனைத்தும் சரியாக இருந்தும் முடி உதிர்வு அதிகமாக இருந்தால், நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரிகளின் அளவை கூட்டிக் கொள்ள வேண்டும். அப்போது, ஆரோக்கியமான, உறுதியான மற்றும் மிருதுவான கூந்தலை பெற முடியும். நம் உடலுக்கு போதுமான அளவு கலோரிகள், புரதம், பயோடின் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை மிகவும் முக்கியம்.

சரும பிரச்சனை
வறண்ட, வெடிப்புக்கள் அல்லது அரிப்பு நிறைந்த சருமம் கூட கலோரி மற்றும் மற்ற சத்துக்கள் குறைப்பாட்டின் அறிகுறிகள் தான். அநேக சரும பிரச்சனைகள் வைட்டமின் ஈ மற்றும் சி குறைபாடு காரணமாக தான் ஏற்படக்கூடும். திடீரென நீங்கள் உட்கொள்ளும் கலோரியின் அளவை குறைக்கும் போது, உடலுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களின் அளவுகள் குறைகின்றன. இவை தான் உங்கள் சருமத்தின் பிரச்சனைகளை உண்டாக்கி விடுகின்றன. சரும பிரச்சனைகளுக்கு பல்வேறு காரணங்கள் இருக்க தான் செய்கின்றன. ஆனால், நீங்கள் கலோரி டயட்டில் இருக்கும் போது சரும பிரச்சனை ஏற்பட்டால் உடனே அதனை நிறுத்தி விட்டு, பரிசோதிக்க வேண்டியது அவசியம்.

குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி
எப்போது பார்த்தாலும் உடல் நிலை சரியில்லாமல் போகிறதா? இருமல், தும்மல் என ஏதாவது ஒன்று படுத்தி எடுக்கிறதா? அப்படியெனில் நீங்கள் உணவுப்பழக்கத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும் என்று அர்த்தம் ஏனென்றால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பதை உடல் உங்களுக்கு உணர்த்துகிறது. அதாவது, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இல்லை என்பதாகும். ஒருவேளை, நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்வதை குறைத்திப்பது கூட காரணமாக இருக்கலாம். எனவே, வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

சாதாரண வெப்ப நிலையிலும் குளிர்ச்சியாக உணர்வது
இத்தகைய அறிகுறி கூட உடலில் கலோரி குறைபாடு ஏற்பட்டுள்ளதை குறிப்பதாகும். ஏனென்றால், உடலின் வெப்பநிலையும், கலோரியின் அளவும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. உடலானது வெப்பத்தை உருவாக்க வேண்டுமானால், அதற்கு குறிப்பிட்ட அளவு கலோரி தேவை. அப்போது தான் உடல் சரியான வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளும். எப்போது நீங்கள், கலோரி குறைவாக உட்கொள்கிறீர்களோ, அப்போது, உடல் சீரான வெப்பநிலையில் இருக்க முடியாமல் போகும்.

அதிகப்படியான எரிச்சல்
எதற்கெடுத்தாலும் எரிச்சலாக உணர்வது கூட கலோரி குறைபாட்டின் அறிகுறி தான். குறைவான அளவு உணவு உண்பதால், உங்களுக்கு எப்போதும் பசித்து கொண்டே இருக்கும். அத்தகைய உணர்வு தான் உங்களுக்கு எரிச்சல் உணர்வாக மாறிவிடுகிறது. அதனால் கவனச்சிதறல் ஏற்படுவதோடு, காரணமே இல்லாமல் எதற்கெடுத்தாலும் எரிச்சல் படுவீர்கள். அது தவிர, எப்போது மந்தமாக இருப்பதோடு, நீங்கள் நீங்களாகவே இருக்க முடியாமல் போகும்.



Click it and Unblock the Notifications
