Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
கல்லீரல் பெரிய ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
கல்லீரலின் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று நச்சுக்களை வெளியேற்றுவது. இப்படி முக்கியமான வேலையை செய்யும் கல்லீரல் செயலிழந்தால், உடலில் கற்பனை செய்ய முடியாத அளவில் மோசமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மனித உடலில் ஒவ்வொரு நாளும் பலவாறு பல்வேறு நச்சுக்கள் மற்றும் கழிவுகள் சேர்கின்றன. இப்படி உடலில் சேரும் நச்சுக்கள் மற்றும் கழிவுகள் முறையாக வெளியேற்றப்படாமல் இருந்தால், அது உடலில் பல தீவிரமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இப்படி உடலில் சேரும் நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றும் செயலில் தான் கல்லீரல் ஈடுபடுகிறது. அதுவும் இது பித்த நீரை உற்பத்தி செய்வதன் மூலம் உணவுகளை செரித்து, கொழுப்புக்களை உடைத்தெறிய உதவுகிறது.

கல்லீரலின் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று நச்சுக்களை வெளியேற்றுவது. இப்படி முக்கியமான வேலையை செய்யும் கல்லீரல் செயலிழந்தால், உடலில் கற்பனை செய்ய முடியாத அளவில் மோசமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடலின் மிக முக்கிய உறுப்பான கல்லீரலுக்கு மிகப்பெரிய எதிரி என்றால், அது ஆல்கஹால் தான். ஆல்கஹால் அருந்தும் பழக்கம் இருப்பவர்களது கல்லீரல் கடுமையான பாதிப்பில் இருக்கும். இதன் விளைவாக அவர்கள் உடலில் பல பிரச்சனைகளைக் கொண்டிருப்பார்கள்.
சரி, ஒருவரது கல்லீரல் கற்பனை செய்திராத அளவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் அது வெளிப்படுத்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள் என்னவென்று தெரியுமா? கீழே அந்த அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் உங்களிடம் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பசியின்மை
ஒருவருக்கு பசியே எடுக்காமல் இருந்தால், அது கல்லீரல் பிரச்சனையின் முக்கிய அறிகுறிகளுள் ஒன்று. ஏனெனில் கல்லீரலால் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற முடியாமல் போகும் போது, இம்மாதிரியான நிலை ஏற்படுகிறது. எனவே உங்களுக்கு சில நாட்களாகவே பசியுணர்வை உணராமல் இருந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள்.

சிறுநீரின் நிறமாற்றம்
சிறுநீர் மற்றும் கழிக்கும் மலத்தின் நிறமானது பிலிரூபின் என்னும் கெமிக்கல் கலவையின் விளைவாகும். உதாரணமாக, சிறுநீரின் நிறம் அடர் நிறத்தில் இருந்தால், கொலஸ்டாசிஸ் என்னும் கல்லீரல் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். கொலஸ்டாசிஸ் என்பது கல்லீரலில் இருந்து பித்த நீரின் ஓட்டத்தைக் குறைக்கும் அல்லது தடுக்கும் ஒரு நிலையாகும்.

மூச்சுத்திணறல்
சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், அது வெறும் இதய பிரச்சனையின் அறிகுறி மட்டுமல்ல. கல்லீரல் பிரச்சனை முற்றிய நிலையில் இருந்தால் கூட நுரையீரல் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக மூச்சுத்திணறல் மற்றும் பிற சுவாச பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மலக்குடல் இரத்தப்போக்கு
கல்லீரல் நோய் முற்றிய நிலையில் இருந்தால், அதாவது சிரோசிஸ் போன்ற நிலையானது, கல்லீரலில் உள்ள ஆரோக்கியமான திசுக்களில் வடுக்களை ஏற்படுத்தி சேதத்தை விளைவிக்கும். இதன் காரணமாக மலக்குடல் இரத்தப்போக்கு ஏற்படக்கூடும். இம்மாதிரியான சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டியது முக்கியம்.

சரும அரிப்பு
கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் சருமமும் பாதிக்கப்படுமா? ஆம், உடலால் கல்லீரல் பிரச்சனையின் காரணமாக பித்த உப்பை வெளியேற்ற முடியாமல் போனால், அந்த உப்பு சருமத்திற்கு அடியிலேயே தங்கிவிடும். இதன் விளைவாக சருமத்தில் கடுமையான அரிப்புக்களை சந்திக்க நேரிடும். எனவே உங்களுக்கு காரணமின்றி சரும அரிப்பு ஏற்பட்டால், அதை புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.



Click it and Unblock the Notifications
