Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
சிறிய பிரச்சனை என்று நீங்க நினைக்கும் இந்த அறிகுறிகள் உங்க உயிருக்கே ஆபத்தாய் மாறலாம்…!
உங்கள் சருமத்தில் ஒரு காயம் அல்லது வெட்டு ஏற்படும்போது, உடனடியாக இரத்தப்போக்கு தொடங்குகிறது. சிறிது நேரத்தில், நம் இரத்தம் தடிமனாகி, இரத்தப்போக்கு நிறுத்தப்படும் ஒரு ஸ்கேப் உருவாக வழிவகுக்கிறது. இந்த
நம் உடல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால் எல்லா உறுப்புகளும் தங்களுடைய வேலைகளை சரியாக செய்ய வேண்டும். அதற்கு முக்கியமாக அனைத்து உறுப்புகளுக்கும் இரத்தம் செல்ல வேண்டும். அப்படி ஒரு வேளை இரத்தம் செல்லவிட்டால், அது உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அது உயிருக்கே கூட ஆபத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளது. உங்கள் சருமத்தில் ஒரு காயம் அல்லது வெட்டு ஏற்படும்போது, உடனடியாக இரத்தப்போக்கு தொடங்குகிறது. சிறிது நேரத்தில், நம் இரத்தம் தடிமனாகி, இரத்தப்போக்கு நிறுத்தப்படும் ஒரு ஸ்கேப் உருவாக வழிவகுக்கிறது. இந்த இரத்த உறைவு பொதுவானது.

ஆனால், காயம் ஏற்படாமல் உங்கள் நரம்புகளில் ஒன்றிற்குள் ஒரு இரத்த உறைவு உருவாகும்போது, அது தானாகவே கரைந்து போகாமல் இருந்தால், அது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையாக மாறக்கூடும். உங்கள் உடலில் இரத்த உறைவு ஏற்பட்டால் அதை உடனே கண்டுபிடித்து மருத்துவரிடம் செல்ல வேண்டும். இக்கட்டுரையில் இரத்த உறைவின் அறிகுறிகள் பற்றி இங்கே விளக்குகிறோம்.

இரத்த உறைவு வகைகள்
இரத்தக் கட்டிகள் பொதுவாக மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை சிரை இரத்த உறைவு, தமனி த்ரோம்பி மற்றும் இதயத்தில் இரத்த உறைவு. தேங்கி நிற்கும் இரத்தம் பொதுவாக கால்களில் சேகரிக்கப்பட்டு, கட்டிகளை உருவாக்கும் போது சிரை இரத்த உறைவு ஏற்படுகிறது. இரத்த நாளங்களில் உள்ள தகடு வழிப்பாதையை சுருக்கும்போது தமனி த்ரோம்பி ஏற்படுகிறது, இதனால் இரத்தம் சுருக்கப்பட்ட இடத்தில் சேகரிக்கப்படுகிறது. இதய தசை சரியான சுழற்சியில் பம்ப் செய்யாதபோது இருதய த்ரோம்பி ஏற்படுகிறது, இதனால் இரத்தம் தேக்கமடைகிறது.

பாதிப்புகள்
இரத்த உறைவு என்று சாதாரணமாக இருக்ககூடாது. இது பக்கவாதம் அல்லது மாரடைப்பை ஏற்படுத்தும். எனவே, இரத்த உறைவு அறிகுறிகளை அடையாளம் கண்டு உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம். இரத்த உறைவு உடைந்து இதயம் மற்றும் நுரையீரலுக்கு சென்றால், அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். ஒரு உறைவை உருவாக்கும் இரத்தத்தின் நிறை திரவத்திலிருந்து ஜெல் போன்ற அல்லது அரை-திட நிலைக்கு மாறலாம்.

அறிகுறிகளை கண்டுபிடிக்க வேண்டும்
இரத்த உறைவுக்கான அறிகுறிகளை அடையாளம் காண்பது மிக முக்கியம். ஏனென்றால் உங்கள் நரம்புகளில் ஒன்றிற்குள் ஒரு உறைவு உருவாகும்போது, அது தானாகவே கரைந்து போகாமல் இருக்கும்போது, அது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இரத்த உறைவுக்கான பொதுவான அறிகுறிகளைக் கண்டுபிடிக்க கீழே கொடுத்துள்ளதை படிக்கவும்.

திடீர் இருமல்
விவரிக்கப்படாத இருமல் இரத்த உறைவுக்கான முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். இதற்காக உங்கள் இதய துடிப்பு மற்றும் சுவாசத்தையும் நீங்கள் கண்காணிக்க வேண்டும். எந்தவொரு வடிவத்திலும் ஏதேனும் உடலில் பிரச்சனை இருந்தால், அதை உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மூச்சு திணறல்
மூச்சு திணறல் ஏற்படுவதற்கு நமது உடலின் வளர்சிதை மாற்றங்கள், உணவு பழக்கம், கழிவுப்பொருளின் செயல்பாடு போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலும் நுரையீரல் பிரச்சனையாலும் மூச்சு திணறல் ஏற்படும். நுரையீரல் தக்கையடைப்பு உள்ள நபர்களில் இது பொதுவாக காணப்படுகிறது. இரத்த உறைவின் ஒரு பகுதி நுரையீரலுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்போது மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

இரத்த உறைவு
நரம்புகளில் இரத்தம் உறைந்தால், இரத்தம் இதயத்திற்கு செல்லாமல் நின்றுவிடும். இதற்கு கால்கள் அல்லது கை பகுதியில் சிவத்தல், வீக்கம் மற்றும் வலி போன்ற பல அறிகுறிகள் ஏற்படுகின்றன. மேலும் இது தசைப்பிடிப்பு மற்றும் வலியை ஏற்படுத்தும்.

நெஞ்சு வலி
இதயத்தில் உள்ள தமனிகளில் இரத்தம் உறைந்திருந்தால், மார்பு வலி அல்லது அழுத்தம் மூலமாக அதன் அறிகுறிகள் வெளிபடும். மார்பு வலி உங்கள் ஆழ்ந்த சுவாசத்துடன் இருக்கும்போது, உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

தோலில் சிவப்பு கோடுகள்
தோலில் சிவப்பு கோடுகள் இருப்பது இரத்த உறைதலுக்கான பொதுவான அறிகுறியாகும். இரத்தக் கட்டிகள் நரம்புகளுடன் சிவப்பு கோடுகள் வடிவில் தோன்றக்கூடும். அவை சாதாரண நரம்புகளாக கருதப்படக்கூடாது. இதற்கு உடனடி மருத்துவ உதவி தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கால்களில் வீக்கம்
கால்களின் வீக்கம் ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. அங்கு இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இந்த நிலை முக்கிய உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை மாற்றுவதைத் தடுக்கிறது. இதனால் வீக்கம் ஏற்படுகிறது. எனவே இதற்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.

பரிசோதனை
இரத்த உறைவு தீவிரமானது. ஆனால் அவற்றை தடுக்கலாம். இரத்தக் கட்டிகளைத் தடுக்க நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம், அதனுடன் தொடர்புடைய ஆபத்தைப் பற்றி அறிந்து கொள்வது. திடீரென மூச்சுத் திணறல், மார்பு அழுத்தம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் அல்லது பேசுவதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது.



Click it and Unblock the Notifications