Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
நம் முன்னோர்கள் இந்த பழத்தோட இலை தேநீரை குடிச்சிதான்... சர்க்கரை நோய் வராமல் தடுத்தாங்கலாம்!
தோல் மற்றும் முடி பராமரிப்பு முறைக்கு கொய்யா இலை தேநீர் அல்லது தண்ணீர் சேர்ப்பது முக தசைகளை இறுக்குவதற்கு உதவுகிறது மற்றும் இந்த கலவையுடன் முடியைக் கழுவுவது முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.
குளிர்காலம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. அந்தந்த பருவத்திற்கு ஏற்ப உடலில் பல நோய்களும், மாறுபாடுகளும் நிகழும். பொதுவாக குளிர்காலத்தில் உங்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால், காய்ச்சல், சளி இரும்பல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், குளிர்காலம் உங்களை சோம்பேறி ஆக்குவதால், உங்களின் உடல் எடை அதிகரிக்கும் மற்றும் சர்க்கரை அளவும் அதிகரிக்கும். இது உங்களுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆதலால், சில புதிய பருவகால பழங்களை உண்ணும் நேரம் இது. சில குளிர்கால பழங்கள் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றன.

இந்த குளிர்கால பழங்களைப் போலவே, இந்த தாவரத்தின் இலைகளிலும் இயற்கையாகவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கொய்யா இலைகள் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இக்கட்டுரையில் உள்ளன.

கொய்யா மற்றும் அதன் இலைகள் ஏன்?
இந்தியில் அம்ரூட் என்றும் அழைக்கப்படும் கொய்யா, லைகோபீன், வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற தாதுக்கள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இனிப்புப் பழமாகும். அதுமட்டுமின்றி, இந்த பழத்தில் சுமார் 80% நீர்ச்சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆனால் கொய்யாவின் இலைகள் பழத்தை விட ஆரோக்கியமானது. இந்த இலையை நீங்கள் ஏன் முயற்சி செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

பருவகால சளி மற்றும் காய்ச்சல்
பொதுவான காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்றவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கு கொய்யா இலைகள் நீண்ட காலமாக வீட்டு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இது சளி, இருமல், தொண்டை புண் மற்றும் சுவாச பாதையை சுத்தப்படுத்த உதவுகிறது. குளிர்காலத்தில் கொய்யா இலைகளுடன் ஒரு சூடான தேநீர் குடிப்பதே உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சிறந்த வழி.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
கொய்யா இலைகள் இன்சுலின் ஏற்றத்தாழ்வை மேம்படுத்தவும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். உண்மையில், உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் கொய்யா இலை நீர் அல்லது தேநீர் குடிப்பது இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை மெதுவாக உறிஞ்சுவதற்கு உதவும் என்று கூறுகிறார்கள். ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றத்தில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, கொய்யா இலை செரிமான அமைப்பில் உள்ள கார்போஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றும் நொதிகளை வெளியிட உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தில் உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது.

தோல் மற்றும் முடி பராமரிப்பு
தோல் மற்றும் முடி பராமரிப்பு முறைக்கு கொய்யா இலை தேநீர் அல்லது தண்ணீர் சேர்ப்பது முக தசைகளை இறுக்குவதற்கு உதவுகிறது மற்றும் இந்த கலவையுடன் முடியைக் கழுவுவது முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

எடை இழப்புக்கு உதவுகிறது
கொய்யா இலை தேநீர் பருகுவது உடல் எடையை குறைக்க உதவும். சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரையாக மாறுவதைத் தடுப்பதன் மூலம் விரைவான எடை இழப்புக்கு உதவும். அதனால், எடை இழப்பு திட்டத்தில் உள்ளவர்கள் உங்கள் தினசரி பழக்கத்தில் கொய்யா இலை தேநீரை சேர்த்துக்கொள்ளுங்கள்.

கொய்யா டீ தயாரிப்பது எப்படி?
பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இந்த தேநீரை தயாரிக்க, ஒரு கடாயை எடுத்து தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் கொய்யா இலைகள் மற்றும் ½ தேக்கரண்டி இஞ்சி (விரும்பினால்) துருவி போடவும். நன்றாக கொதிக்க வைத்து இந்த தேநீரை வடிகட்டவும். சுவைக்கு தேன் சேர்த்துக்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











