Latest Updates
-
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
காலை எழுந்ததும் ஏன் கட்டாயம் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
உங்கள் உடலுக்கு காலையில் எழுந்ததுமே நீரேற்றம் செய்வது தான் உங்களுக்கு நீங்களே செய்யக்கூடிய மிகச்சிறந்த விஷயம்.
காலையில் எழுந்ததும் நாம் செய்யும் சிறு விஷயம் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும். குறிப்பாக காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால், நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் ஏராளமான நன்மைகளைத் தரும் என்பது தெரியுமா?

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் பல உடல்நல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். உங்கள் உடலுக்கு காலையில் எழுந்ததுமே நீரேற்றம் செய்வது தான் உங்களுக்கு நீங்களே செய்யக்கூடிய மிகச்சிறந்த விஷயம். பொதுவாக நாம் காலையில் எழுந்ததும், ஒருவித தாகத்தை உணர்வோம். ஏனெனில் இரவு நேரத்தில் நாம் தூங்கும் போது, நமது உடல் ஒருசில வேலைகளைத் தவறாமல் செய்கிறது. பொதுவாக நாம் விழித்திருக்கும் போது, அவ்வப்போது நீரைக் குடிப்போம். ஆனால் தூங்கும் போது அவ்வாறு இல்லை.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலை செம்மைப்படுத்த உதவுகிறது. சொல்லப்போனால் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் போது, அது உடலை ரீசார்ஜ் செய்கிறது மற்றும் மற்ற அனைத்து செயல்பாடுகளையும் உடல் சிறப்புடன் செய்யத் தொடங்குகிறது. இப்போது நாம் காலையில் எழுந்ததும் குறைந்தது 1 நிமிடம் கழித்து ஏன் கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வோம்.

செரிமான செயல்முறை தொடங்குகிறது
காலையில் ஒரு பெரிய டம்ளர் தண்ணீர் குடிப்பது உங்கள் செரிமானத்தை 24% தொடங்க உதவுகிறது. செரிமான செயல்பாடு காலையிலேயே சிறப்பாக இருந்தால், அஜீரண பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

நச்சுக்களை வெளியேற்றுகிறது
மனித உடலில் சிறுநீரகங்கள் தான் உடலில் உள்ள நச்சுக்களை இரத்தத்தின் மூலம் எடுத்து சென்று வெளியேற்றுகின்றன. உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க தண்ணீர் தேவைப்படுகிறது. ஆகவே காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் போது, இந்த செயல்பாடு இன்னும் சிறப்பாக செயல்படுகிறது. எனவே நாள் முழுவதும் போதுமான நீரைக் குடிக்க முயற்சி செய்யுங்கள்.

குறைவாக சாப்பிட செய்யும்
சில சமயங்களில் தாகத்தை தவறுதலாக புரிந்து கொண்டு நாம் சாப்பிடுவோம். பசிக்காமல் சாப்பிடுவது செரிமானத்தை பாதிக்கும். எனவே காலையில் ஒரு டம்ளர் தண்ணீர் உங்கள் தாகத்தை தணித்து, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டைத் தூண்டிவிடும். அதோடு தண்ணீர் குடிப்பதால் காலையிலேயே அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படும். இதனால் உடல் பருமனாவது தடுக்கப்படுகிறது.

நோயெதிர்ப்பை அதிகரிக்க உதவுகிறது
காலையில் எழுந்ததும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது, நிணநீர் கட்டமைப்பின் நல்வாழ்வுக்கு உதவும். இது உடலைத் தாக்கும் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது.

சருமத்தை அழகாக வைத்திருக்கும்
காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நீர் குடிப்பது, சருமத்தை மென்மையாகவும், சுத்தமாகவும், மிருதுவாகவும் மாற்றும். எனவே நீங்கள் அழகாக காண ஆசைப்பட்டால், முதலில் இந்த பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். இதனால் தானாக உங்கள் அழகு மேம்படும்.

உள்ளுறுப்புக்களை கவனித்துக் கொள்ளும்
நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, பெருங்குடலில் சேரும் கழிவுகளில் இருந்து குடலானது தண்ணீர் உறிஞ்சும். இது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். எனவே உங்கள் பெருங்குடல் சிறப்பாக செயல்பட நினைத்தால் மற்றும் மலச்சிக்கலைத் தவிர்க்க விரும்பினால், காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் தானாக மேம்படுவதைக் காண்பீர்கள்.



Click it and Unblock the Notifications