Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்களுக்கு தொப்பை ஏன் குறையமாட்டீங்குது தெரியுமா? அதுக்கு உண்மையான காரணம் இது தான்..!
வயிற்றுக் கொழுப்பிற்கான காரணங்களை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இதனால் எளிதில் தொப்பையைக் குறைக்க சரியான தீர்வைக் காணலாம்.
இன்று நிறைய பேருக்கு தொப்பையைக் குறைப்பது ஒரு இலக்காக உள்ளது. தொப்பை ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மோசமான உணவு முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற முக்கிய காரணங்களாகும். பெரும்பாலான மக்கள் தொப்பையால் அதிகம் சிரமப்படுகிறார்கள். உடலில் வயிற்றுப் பகுதியில் தான் எளிதில் கொழுப்புக்கள் தேங்கும். அதேப் போல் உடலிலேயே வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்பைக் கரைப்பது தான் மிகவும் கடினம்.

வயிற்றுப் பகுதியில் தேங்கும் கொழுப்புக்களால் வயிறு வீங்கி அசிங்கமாக காணப்படுவதோடு, உடல் எடையை அதிகரித்து பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக தொப்பை உள்ளவர்களுக்கு இதய நோயின் அபாயம் அதிகம் உள்ளது. ஆகவே தான் வயிற்றுக் கொழுப்பிற்கான காரணங்களை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இதனால் எளிதில் தொப்பையைக் குறைக்க சரியான தீர்வைக் காணலாம்.

மெட்டபாலிசம்
வயது அதிகரிக்கும் போது உடலின் மெட்டபாலிசம் குறைந்து, தொப்பை வருவதற்கு வழிவகுக்கும். ஆண்களை விட பெண்கள் தங்களின் வயிற்றில் அதிக உணர்திறன் கொண்டவர்கள். சிலர் என்ன தான் ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டாலும், அவர்களின் உடல் எடை அதிகரிக்காமல் ஒல்லியாகவே இருப்பர். இதற்கு காரணம் அவர்களின் மெட்டபாலிசத்தின் வேகம் தான். எப்போது ஒருவரது மெட்டபாலிசம் மெதுவாகிறதோ, அப்போது தொப்பை வர ஆரம்பிக்கும். மேலும் மெதுவான மெட்டபாலிசம் தைராய்டு பிரச்சனைகள், சர்க்கரை நோய் மற்றும் பிற மருத்துவ கோளாறுகளால் பாதிக்கப்படலாம்.

மோசமான உணவு முறை
கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அதிகமாக உண்பதும் அடிவயிற்று கொழுப்பிற்கு மற்றொரு காரணம். இன்றைய காலத்தில் எங்கும் ஆரோக்கியமற்ற உணவுகள் தான் நிறைந்துள்ளன. இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது அது தொப்பையை உண்டாக்கி, இதய நோய், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை, பக்கவாதம் போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

மன அழுத்தம்
மன அழுத்தம் மற்றும் மோசமான ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மாற்றங்கள் உடல் பருமனுக்கு காரணமாக இருக்கக்கூடும். நமது அட்ரீனல் சுரப்பிகள் தான் மன அழுத்தத்திற்கு காரணமான அட்ரினலின் மற்றும் கார்டிசோல் ஹார்மோன்களை வெளியிடுகின்றன. இதில் கார்டிசோல் கொழுப்புக்களை தேக்கி வைக்கிறது. குறிப்பாக இந்த ஹார்மோன் தான் வயிற்றுப் பகுதியில் கொழுப்புக்களை அதிகமாக தேங்க வைக்கிறது.

அதிகப்படியான ஆல்கஹால்
அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் அருந்துவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். ஏனெனில் இதில் கலோரிகள் அதிகளவில் உள்ளது. அதிகளவு ஆல்கஹால் அருந்துவது 50 சதவீதம் தொப்பை வர காரணமாக உள்ளது. அதோடு இது கல்லீரலை சேதப்படுத்தும் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

உடற்பயிற்சியின்மை
நாம் தினமும் போதுமான அளவு உடற்பற்சியை செய்ய வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சி செய்யும் போது எண்டோர்பின் என்னும் ஹார்மோன்கள் வலி மற்றும் பதற்றத்தைப் போக்க உதவுகிறது. மேலும் எண்டோர்பின்கள் செரடோனின் அளவுகளை மேம்படுத்தி, சிறப்பாக உணர வைக்கிறது. இது தவிர உடற்பயிற்சி கலோரிகளை எரிக்கிறது மற்றும் இது எடை இழப்புக்கு உதவுகிறது.



Click it and Unblock the Notifications