Latest Updates
-
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
இரைப்பை குடல் அழற்சியின் அறிகுறிகளும்.. அதை சரிசெய்யும் சில எளிய கை வைத்தியங்களும்...
உங்களுக்கு அடிக்கடி வயிற்று உப்புசம், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உங்கள் இரைப்பையில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.
மழைக்காலத்தில் பெரும்பாலும் அடிக்கடி வயிற்று தொற்றுகள் ஏற்படும். ஏனெனில் ஈரப்பதமான சூழ்நிலையால் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகம் பெருக்கமடையும். எனவே தான் மழைக்காலத்தில் தெருவோரங்களில் விற்கப்படும் அல்லது கடைகளில் விற்கப்படும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டாம் என்று சொல்வதோடு, வீட்டில் நன்கு சமைத்து சூடாக சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.

சிலருக்கு நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும். அத்தகையவர்கள் கவனமாக இல்லாவிட்டால், அவர்களுக்கு எளிதில் வயிற்று பிரச்சனைகள் அல்லது இரைப்பை குடல் அழற்சி ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும். உங்களுக்கு அடிக்கடி வயிற்று உப்புசம், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உங்கள் இரைப்பையில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். எனவே மழைக்காலத்தில் நாம் எவ்வளவு கவனமாகவும், சுத்தமாகவும் இருக்கிறோமோ, அவ்வளவு ஆரோக்கியமாக நாம் இருக்க முடியும்.
இப்போது இரைப்பை குடல் அழற்சியின் அறிகுறிகள் என்ன மற்றும் அந்த பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில எளிய கை வைத்தியங்கள் என்னவென்றும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இரைப்பை குடல் அழற்சி என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
இரைப்பை குடல் அழற்சி என்பது வைரஸ் அல்லது பாக்டீரியாவால் இரைப்பை அல்லது சிறுகுடலில் ஏற்படும் தொற்றாகும். ஒருவருக்கு இந்த அழற்சி இருந்தால் ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அவையாவன:
* வாந்தி
* வயிற்று வலி
* நீர் போன்ற வயிற்றுப் போக்கு
* வயிற்று பிடிப்புகள்
* குமட்டல்
* உடல் வறட்சி
* லேசான தலை பாரம்
* தலை வலி
இந்த அறிகுறிகள் உங்களுக்கு தீவிரமானால் அல்லது தாங்க முடியாத அளவில் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். லேசான அறிகுறிகளை சந்தித்தால், மருத்துவரிடம் செல்லும் முன், சில கை வைத்தியங்களை மேற்கொண்டாலே எளிதில் சரிசெய்துவிட முடியும்.
இப்போது இரைப்பை குடல் அழற்சியை சரிசெய்ய உதவும் சில கை வைத்தியங்களைப் பார்ப்போம்.

புரோபயோடிக் யோகர்ட்
குடல் ஆரோக்கியத்திற்கு புரோபயோடிக்குகள் ஒரு வரப்பிரசாதம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த புரோபயோடிக்குகள் குடல் தாவரங்களை தக்க வைப்பதோடு, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக பராமரிக்கவும் உதவும். யோகர்ட்டில் புரோபயோடிக்குகள் வளமாக அளவில் உள்ளது. ஆகவே இதை ஒருவர் உட்கொண்டு வந்தால், வயிற்றில் உள்ள அழற்சி குறைந்து, இரைப்பையில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும். அதற்கு தினமும் கட்டாயம் 1 கப் யோகர்ட் சாப்பிட வேண்டும்.

தேன்
தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது விரைவில் குணமாக செய்யும். அதோடு, இது வயிற்றில் உள்ள எரிச்சலைத் தணித்து, அறிகுறிகளையும் குறைக்கும்.
* ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த நீரை தினமும் 2 முறை குறைக்க வேண்டும்.
* உடல் வறட்சியை சந்திப்பவர்கள், தேனை ORS திரவத்துடன் கலந்து குடிக்க வேண்டும்.

பச்சை வாழைப்பழம்
பழுத்த மஞ்சள் வாழைப்பழங்கள் பொதுவாக சாப்பிடப்படுவது. ஆனால் பச்சை வாழைப்பழங்கள் வயிற்றுப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன. பச்சை வாழைப்பழத்தில் உள்ள பெக்டின் என்னும் பொருள், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதோடு இது மீட்பு செயல்முறையையும் வேகப்படுத்துகிறது. வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபட பச்சை வாழைப்பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
* பச்சை வாழைப்பழத்தை நீரில் கழுவி, நீரில் தோலுடன் சேர்த்து 7-10 நிமிடங்கள் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
* பின் தோலை உரித்துவிட்டு, வாழைப்பழத்தை மசித்துக் கொள்ள வேண்டும்.
* வேண்டுமானால், சுவைக்கேற்ப அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

மஞ்சள் பால்
மஞ்சள் ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த உணவுப் பொருள். இதில் குர்குமின் உள்ளது. இது ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இரைப்பையை பாதுகாக்கும் பண்புகளும் அதிகம் உள்ளன. இது வயிற்று அழற்சி அல்லது இரைப்பை குடல் அழற்சிக்கு உதவுகிறது.
* ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

பட்டை
பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் வயிற்று தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க பட்டை பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அதிகம் உள்ளன. இதை ஒருவர் உட்கொண்டு வந்தால், வயிற்று பிரச்சனைகளை விரைவில் குணமாகும்.
பட்டை பொடியை நீரில் கலந்தோ அல்லது டீ தயாரித்தோ குடிக்கலாம். இப்போது பட்டை டீ தயாரிப்பது எப்படி என்று காண்போம்.
* ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் 1 சிறிய துண்டு பட்டையைப் போட்டு மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதை இறக்கி சிறிது நேரம் மூடி வைத்து பின் வடிகட்ட வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்கவும்.

அரிசி நீர்
வயிற்று அழற்சிக்கு சிறந்த தீர்வாக அரிசி நீர் விளங்குகிறது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த வழி பரிந்துரைக்கப்படுகிறது. இது குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துவதற்கும், இரைப்பை குடல் அழற்சிக்கு சிகிச்சை அளிப்பதற்கும் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது.



Click it and Unblock the Notifications