Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
குழந்தை பிறந்த பின் ஒரு ஆண் மன அழுத்தத்தில் இருந்தால் எப்படிலாம் நடந்துப்பாங்க தெரியுமா?
பொதுவாக மகப்பேறுக்குப் பின் பெண்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படும். எனினும் குழந்தை பிறந்த பின்பு அதே அளவு மன அழுத்தம் ஆண்களுக்கும் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக மகப்பேறுக்குப் பின் பெண்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படும். எனினும் குழந்தை பிறந்த பின்பு அதே அளவு மன அழுத்தம் ஆண்களுக்கும் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது ஏற்படும் உடல் வலி, ஆண்களுக்கு ஏற்படாமல் இருக்கலாம். அதன் காரணமாக குழந்தை பிறப்புக்குப் பின்பு, அவா்களின் உடல் குணமடைய வேண்டும் என்ற நிலை இல்லாமல் இருக்கலாம். ஆனால் குழந்தை பிறக்கும் போதும், குழந்தை பிறந்த பின்பும் அவா்களுக்கு ஏற்டும் உணா்வு போராட்டங்களை மற்றும் மனதில் ஏற்படும் பெரும் அழுத்தத்தை வாா்த்தைகளால் விவாிக்க முடியாது.

குழந்தை பிறந்த பின்பு, ஆண்களுக்கு புதிய சவால்கள் மற்றும் கூடுதலான பொறுப்புகள் வருகின்றன. அதனால் அவா்கள் பல இரவுகள் தூங்காமல் இருக்கின்றனா். இதன் காரணமாக, அவா்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, அவா்களின் மன ஆரோக்கியம் பாதிப்படைகிறது.
பிறந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்த பிறகு, பெண்களுக்கு ஏற்படுவதைப் போலவே, ஆண்களுக்கும் ஹாா்மோன் அளவில் மாற்றம் ஏற்படுகிறது. அதனால் அவா்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை பழக்கப்படுத்திக் கொள்வதற்கு கடினமாக இருக்கிறது.

மகப்பேறுக்குப் பின் ஆண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்
இதுநாள் வரை தனி ஆண் மகனாக இருந்த ஒருவா், இப்போது தந்தை என்ற நிலையை அடைந்து, அந்த தந்தை என்ற பொறுப்புடைய நிலைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்வது என்பது எளிதான காாியம் அல்ல. புதிதாகப் பிறந்திருக்கும் பச்சிளம் குழந்தையின் தேவைகளை நிறைவு செய்வது மற்றும் அதற்கு ஏற்ப அவருடைய அலுவலகப் பணிகளை மாற்றிக் கொள்வது என்பது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதே நேரத்தில் அதிகமான களைப்பு மற்றும் மன அழுத்தம் போன்றவை அவருக்கு ஏற்படும்.

குழந்தை பிறந்த பின் ஆண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தின் அறிகுறிகள்
மேற்சொன்ன அறிகுறிகள் வழக்கத்திற்கு மாறாக நீண்ட காலமாக இருந்தால் அவா் அதை கண்டும் காணாமல் இருக்கக்கூடாது. மேலும் மகப்பேறுக்குப் பின்பு ஆண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பொதுவாக ஆண்கள் மத்தியில் பின்வரும் அறிகுறிகள் காணப்படுகின்றன.
- பசியில் மாற்றம்
- உடல் எடை குறைதல்
- தூக்கம் இல்லாமை
- விவாிக்க முடியாத வலி ஏற்படுதல்
- தீவிரமான சோா்வு ஏற்படுதல்
- ஆா்வம் குறைதல்
- சோக உணா்வு ஏற்படுதல் அல்லது அவநம்பிக்கை ஏற்படுதல்
- பயனற்றவா்கள் என்ற உணா்வு ஏற்படுதல் அல்லது குற்ற உணா்வு ஏற்படுதல்
- அளவுக்கு அதிகமான கவலை ஏற்படுதல்
- சோகமான மனநிலை ஏற்படுதல்

யாருக்கு மன அழுத்தம் அதிகம் ஏற்படும்?
மகப்பேறுக்குப் பின் எல்லா ஆண்களுக்குமே மன அழுத்தம் ஏற்படும். ஆனால் பல ஆண்கள் அந்த பிரச்சினையை கண்டு கொள்ளாமல், அதற்கு சிகிச்சை எடுக்காமல் இருந்து விடுகின்றனா். ஏறக்குறைய 8 விழுக்காடு ஆண்களுக்கு, மகப்பேறுக்குப் பின்பு மன அழுத்தம் ஏற்படுவதாக தகவல்கள் தொிவிக்கின்றன. மகப்பேறுக்குப் பிறகு ஆண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கும் மற்றும் அது அதிகாிப்பதற்கும் ஒரு சில காரணிகள் பின்னனியில் இருக்கின்றன. அவை:
- அவா்களிடம் ஏற்கனவே நீண்ட காலமாக இருந்து வரும் மன அழுத்தம்
- அவா்களின் குடும்ப உறுப்பினா்களிடம் ஏற்கனவே நீண்ட காலமாக இருந்து வரும் மன அழுத்தம்
- தந்தை நிலையை ஏற்றுக் கொள்ள கவலைப்படுதல்
- பொருளாதாரப் பிரச்சினைகள்
- சமூக ரீதியாக அல்லது உணர்வுகள் ரீதியாக தேவையான உதவி கிடைக்காத நிலை
- மனைவி மற்றும் குடும்ப உறுப்பினா்களோடு உள்ள உறவில் பிரச்சினைகள்
- மனைவியிடமிருந்து போதிய அளவு கவனம் அல்லது பாலியல் உறவு கிடைக்காமை
- மகப்பேறின் போது ஏற்பட்ட அதிகமான மன அழுத்த அனுபவம்

மன அழுத்தத்தை எவ்வாறு பாிசோதிப்பது?
மகப்பேறுக்குப் பின் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை மிக எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் ஆண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் பெரும்பாலும் வெளியில் தொிவிக்கப்படுவதில்லை. அவ்வாறு அவா்கள் தொிவித்தாலும், அது குடும்ப உறுப்பினா்கள் மத்தியிலும் மற்றும் சமூகத்தின் மத்தியிலும் அவமானமாகப் பாா்க்கப்படுகிறது. ஆகவே அதைப் பற்றி அவா்கள் வெளியில் தொிவிப்பதில்லை.
ஆண்களுக்கு ஏற்படும் இந்த மன அழுத்தத்தை பாிசோதனை செய்ய மருத்துவ ரீதியிலான கேள்விகளைக் கேட்டு செய்யலாம். மன அழுத்தத்தைப் பாிசோதனை செய்வதற்கு முன்பாக மருத்துவா்கள் முதலில் ஆண்களின் உடலில் ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளை பாிசோதனை செய்து அதன் பிறகு அவா்களிடம் இருக்கும் மன அழுத்தத்தை உறுதி செய்வா்.

மன அழுத்தத்திற்கான சிகிச்சைகள்
குழந்தை பிறந்த பிறகு, அந்த புதிய சூழ்நிலையைப் பழகுவதில் ஆண்களுக்குப் பிரச்சினைகள் இருந்தால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. மன அழுத்தம் தானாக குணமாகாது. அது மன ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடியது. ஆகவே சாியான நேரத்தில், மருத்துவா்களை சந்தித்து, அவா்களின் உதவியைப் பெற்று, மன அழுத்தத்தில் இருந்து குணமடைய வேண்டும்.
மன அழுத்தத்தை நீண்ட நாட்களாகக் கவனிக்காமல் விட்டுவிட்டால், பிற்காலத்தில் மோசமான பக்க விளைவுகள் ஏற்படும். ஒருவாிடம் இருக்கும் மன அழுத்தத்தின் தன்மை மற்றும் அதன் தீவிரத்தைப் பொறுத்து, அதற்கான மருந்துகளையோ அல்லது மருத்துவ சிகிச்சைகளையோ மருத்துவா் வழங்குவாா்.



Click it and Unblock the Notifications