Latest Updates
-
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. -
26 நாட்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் யார் தெரியுமா? அவர் எப்படி பிரதமரானார் தெரியுமா? -
கீரை வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
பலாக்கொட்டை இருந்தா.. கத்திரிக்காய், முருங்கைகாய் சேர்த்து இப்படி குழம்பு வையுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
July 2026 Horoscope: ஜூலை மாதம் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப மோசமான மாதமாக இருக்கப்போகிறதாம் - ஜாக்கிரதை -
Men's Health Month: ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகளை பட்டியலிட்ட டாக்டர்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுபவர்கள் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
July Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
இந்த 5 பழக்கங்கள் சிறுநீரகங்களை சரிசெய்ய முடியாத அளவில் சேதப்படுத்தும் எனத் தெரியுமா?
மது அருந்துவது, புகைப் பிடிப்பது போன்ற பழக்கங்கள் நுரையீரலுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமின்றி, அமைதியாக இருந்து சிறுநீரகங்களை செயலிழக்கச் செய்கின்றன.
மனித உடலில் சிறுநீரகங்கள் பீன்ஸ் வடிவில் உடலின் இருபுறத்திலும் அமைந்துள்ளது. இவை உடலில் மிகவும் முக்கியமான பணியான உடலில் உள்ள திரவங்களை வடிகட்டி சிறுநீர் மூலம் நச்சுக்களை அகற்றுகிறது. உடலில் நச்சுக்கள் அதிகரித்தால், அதன் விளைவாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பதோடு, சிறுநீரகங்கள் செயலிழந்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

சிறுநீரகங்களை உணவுகள் மூலமும், உடற்பயிற்சிகளின் மூலமும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதே சமயம் ஒருவரது பழக்கவழக்கங்களும் சரியாக இருக்க வேண்டும். ஏனெனில் தற்போது பலரிடம் நல்ல பழக்கங்களை விட கெட்ட பழக்கங்களே அதிகம் உள்ளன. குறிப்பாக மது அருந்துவது, புகைப் பிடிப்பது போன்ற பழக்கங்கள் நுரையீரலுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமின்றி, அமைதியாக இருந்து சிறுநீரகங்களை செயலிழக்கச் செய்கின்றன. இந்த பழக்கங்களைத் தவிர இன்னும் சில பழக்கங்கள் சிறுநீரகங்களை மீள முடியாத அளவில் தீங்கு விளைவிக்கின்றன. இப்போது அந்த பழக்கங்கள் எவையென்பதைக் காண்போம்.

மோசமான உணவுப் பழக்கம்
தற்போதைய காலக்கட்டத்தில் நம்மைச் சுற்றி ஏராளமான ஜங்க் உணவுகள் விற்கப்படுகின்றன. இந்த ஜங்க் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதால், அநேக மக்கள் இந்த வகை உணவுகளை அடிக்கடி வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் இந்த உணவுகளில் கொழுப்புக்கள் அதீத அளவில் நிறைந்துள்ளன. இந்த வகை உணவுகளை சாப்பிடுவதால், அது சிறுநீரக செயலிழப்பின் அபாயத்தை அமைதியாக உயர்த்தக்கூடும். அதோடு இந்த உணவுகளில் உப்பு அதிகம் இருப்பதால், சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

போதுமான நீர் அருந்தாமை
தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நமக்கு தண்ணீர் குடிக்கக் கூட நேரம் இருப்பதில்லை. அதுவும் அலுவலகம் சென்றுவிட்டால், வேலையின் பரபரப்பில் தண்ணீர் குடிப்பதையே பலர் மறந்துவிடுகிறார்கள். இப்படி போதுமான அளவு நீரை குடிக்காமல் இருந்தால், உடல் வறடசி அடைந்து, சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கு தேவையான நீர் கிடைக்காமல், சிறுநீரகங்கள் சேதமடையும்.

உயர் இரத்த சர்க்கரை அளவு
சர்க்கரை நோய் இல்லாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவில் சர்க்கரை நோயால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சர்க்கரை நோயில் டைப்-1, டைப்-2 என இரண்டு வகைகள் உள்ளன. இதில் எந்த வகை சர்க்கரை நோய் இருந்தாலும், அவர்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. அதுவும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டால், அது சிறுநீரகங்களின் அழிவிற்கு வழிவகுத்துவிடும். சிறுநீரகங்கள் செயல்படாமல் போனால், உயிர் வாழ்வதற்காக டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கும்.

கண்மூடித்தனமாக மருந்துகளை எடுப்பது
ஒவ்வொருவரின் வீட்டிலும் நிச்சயம் ஒரு படிக்காத டாக்டர் இருப்பார்கள். அவர்கள் காய்ச்சல், சளி, இருமல் என்று எது வந்தாலும், மருத்துவரிடம் செல்லாமல் தாங்களாகவே மருந்துகளை எடுப்பார்கள். ஆனால் இம்மாதிரியான போக்கு மிகவும் அபாகரமானது. ஒருவர் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்து மாத்திரைகளை எடுத்தால், அது முதலில் பாதிப்பது சிறுநீரகங்களைத் தான்.

உடல் பருமன்
தற்போது ஏராளமான மக்கள் தங்களின் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இல்லாமல், அதிக உடல் பருமனுடன் இருக்கிறார்கள். இப்படி ஒருவரது உடல் பருமனடைவதற்கு மோசமான உணவுப் பழக்கம், வளர்சிதை மாற்றக் கோளாறு மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை போன்றவை தான் முதன்மையான காரணம். உடல் பருமன் பிரச்சனையை சந்திப்பவர்களின் உடலில் நச்சுக்கள் அதிக தேங்குவதோடு, உடலில் இருந்து வெளியேறாமல் உடலின் திறனை மோசமாக பாதிக்கும். இத்தகையவர்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்காமல் இருந்தால், அது காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்.



Click it and Unblock the Notifications