For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ஆண்குறி இப்படி இருக்கா? அப்ப இது உங்க பாலியல் வாழ்க்கையை பாதிக்கக்கூடிய மோசமான நோயாம்!

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் மேனேஜ்டு கேரில் 2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், பெய்ரோனி நோயாளிகளில் பாதி பேர் மன அழுத்தத்துடன் போராடுகிறார்கள்.

|

பொதுவாக நாம் பாலியல் ஆரோக்கியத்தை பற்றியும், அந்தரங்க உறுப்பு ஆரோக்கியத்தை பற்றியும் பேசுவதில்லை. இதை பொதுவெளியில் பேச அனைவரும் தயங்குகிறார்கள். இது மிகவும் தவறானது. இந்த தயக்கத்தை உடைத்து, அவற்றை பற்றி நாம் பொதுவெளியில் பேச வேண்டும். ஏனெனில், இவற்றை பேச மறுப்பதால், பல ஆபத்தான விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். இந்த செயல்பாட்டில் நாம் உணராதது என்னவென்றால், அந்தரங்க உறுப்பு ஆரோக்கியத்தைப் பற்றி உரையாடுவதை எவ்வளவு தாமதப்படுத்துகிறோமோ, அவ்வளவு அதிகமாக நமது பாலியல் வாழ்க்கையை பாதிக்கக்கூடிய ஒரு நோயை உருவாக்கும் ஆபத்துள்ளது.

Peyronies Disease: Causes, Symptoms, Diagnosis & Treatment in Tamil

ஆண்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய அரிய நோய்களில் ஒன்று பெய்ரோனி நோய். இது ஒரு நபரின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, அவர்களின் மன நலனையும் பாதிக்கிறது. அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெய்ரோனி நோய் என்றால் என்ன?

பெய்ரோனி நோய் என்றால் என்ன?

பெய்ரோனி நோய் என்பது ஆண்குறியில் ஏற்படும் டியூனிக்கா அல்பஜீனியா எனப்படும் நோய் ஆகும். இது ஆண்குறியில் உருவாகும் நார்ச்சத்து வடு திசுக்களின் விளைவாக வளைந்த, வலிமிகுந்த விறைப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது. இது மிகவும் அரிதாக ஏற்படும் நோய். அமெரிக்காவில் 40 வயதுக்கு மேற்பட்ட வயதுவந்த ஆண்களில் 0.5 சதவீதத்தையும், 8 முதல் 10 சதவீத ஆண்களையும் இந்த நோய் பாதிக்கிறது. இருப்பினும், நீங்கள் ஆபத்தில் இல்லை என்று அர்த்தமல்ல.

மன அழுத்தம்

மன அழுத்தம்

இந்த அரிய சுகாதார நிலை உங்களை கவலை அடைய செய்யலாம். ஏனெனில் இது ஒரு நபரின் மன ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கும் என்று அறியப்படுகிறது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் மேனேஜ்டு கேரில் 2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், பெய்ரோனி நோயாளிகளில் பாதி பேர் மன அழுத்தத்துடன் போராடுகிறார்கள். ஏனென்றால், இந்த நோய் ஒருவர் உடலுறவில் ஈடுபடுவதைத் தடுக்கலாம் அல்லது விறைப்புத்தன்மையை ஏற்படுத்தலாம் அல்லது பராமரிப்பது கடினமாக்கலாம் (விறைப்புச் செயலிழப்பு). இவை மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

பாலியல் வாழ்க்கையை பாதிக்கலாம்

பாலியல் வாழ்க்கையை பாதிக்கலாம்

பெய்ரோனி நோயால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு பெரும்பாலும் ஆண்குறி ஒழுங்கற்ற வளைவில் காணப்படும். அதாவது மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி வளைந்து அல்லது ஒரு பக்கமாக வளைந்திருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கவனிக்க வேண்டிய பிற அறிகுறிகள்

கவனிக்க வேண்டிய பிற அறிகுறிகள்

ஆணுறுப்பு வளைவை ஏற்படுத்துவதைத் தவிர, பெய்ரோனி நோய் மற்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தும்:

  • ஆண்குறியின் தோலின் கீழ் வடு திசுக்களின் உருவாக்கம்
  • விறைப்புத்தன்மை
  • ஆண்குறியின் சுருக்கம்
  • ஆண்குறி வலி
  • ஆண்குறியின் பிற குறைபாடுகள்
  • இந்த அரிய நோய்க்கு என்ன காரணம்?

    இந்த அரிய நோய்க்கு என்ன காரணம்?

    பெய்ரோனி நோய்க்குப் பின்னால் குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. இருப்பினும், ஆண்குறியில் பிளேக் உருவாகுவதே இந்த நிலைக்கு வழிவகுக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பெய்ரோனி நோய் பொதுவாக ஆண்குறியில் மீண்டும் மீண்டும் காயமடைவதால் ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உடலுறவு, தடகள செயல்பாடு அல்லது விபத்தின் விளைவாக ஆண்குறி சேதமடையக்கூடும். ஆண்குறியில் காயம் ஏற்பட்ட பிறகு குணப்படுத்தும் செயல்பாட்டின் போது, வடு திசு ஒழுங்கற்ற முறையில் உருவாகிறது. இது நீங்கள் உணரக்கூடிய ஒரு முடிச்சு அல்லது வளைவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

    யாருக்கு ஆபத்து?

    யாருக்கு ஆபத்து?

    காயம் மட்டும் பெய்ரோனியை ஏற்படுத்தாது, மாறாக காயத்தை எப்படி குணப்படுத்தி வடு திசுக்கள் உருவாகாமல் தடுக்கிறீர்கள் என்பதுதான் நோயைத் தடுக்கும். மேலும், கருத்தில் கொள்ள வேண்டிய சில ஆபத்து காரணிகள் உள்ளன:

    • பரம்பரை, அதாவது உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு நோய் இருந்தால், நீங்களும் ஆபத்தில் இருக்கக்கூடும்.
    • இணைப்பு திசு கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள்
    • உங்கள் வயது
    • எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?

      எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?

      உங்கள் அறிகுறிகள் பெய்ரோனி நோயுடன் தொடர்புடைய அறிகுறிகளைப் போலவே தோன்றினால், உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்வது நல்லது. கூடுதலாக, உடலுறவு கொள்ள இயலாமை, விறைப்புத்தன்மையை அடைவதில் அல்லது பராமரிப்பதில் சிரமம், உங்கள் பாலியல் செயல்திறன் பற்றிய கவலை மற்றும் மன அழுத்தம், கருவுறுதல் பிரச்சினைகள், ஆண்குறி வலி போன்ற சிக்கல்களை நீங்கள் சந்தித்தால், நீங்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Peyronie's Disease: Causes, Symptoms, Diagnosis & Treatment in Tamil

Peyronie's Disease: disease that causes the penis to curve, Know Peyronie's Disease Causes, Symptoms, Diagnosis & Treatment in Tamil.
Desktop Bottom Promotion