Latest Updates
-
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
எச்சரிக்கை! இந்த பிரச்சனை இருந்தால் ஓமிக்ரான் வேகமாக தொற்றிக் கொள்ளுமாம்... உஷாரா இருங்க...
பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியின் அறிகுறிகள் உங்களிடம் தென்பட்டால், உடனே அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால், உங்களை ஓமிக்ரான் மிகவும் எளிதில் தொற்றிக் கொண்டு அவதிப்பட வைத்துவிடும்.
இதுவரை கொரோனா அச்சுறுத்தி வந்துள்ள நிலையில், உருமாற்றமடைந்து ஓமிக்ரான உருமாறி தற்போது அதிவேகமாக உலகெங்கிலும் பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் பல மாநிலங்களில் ஓமிக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனாவின் டெல்டா இரண்டாம் அலையை ஏற்படுத்தி பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த ஆண்டு ஓமிக்ரான் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அமல்படுத்தவுள்ளது.

தற்போது குளிர்காலம் என்பதால் அதிகப்படியான குளிர்ச்சியான காலநிலையின் காரணமாக பலரும் சளி, இருமல், காய்ச்சல் என பல பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதுண்டு. இதனால் குளிர்காலத்தில் பலரது நோயெதிர்ப்பு சக்தி குறைவாக, பலவீனமாக இருக்கிறது. ஓமிக்ரான் பரவும் இந்த சூழ்நிலையில் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால், அதுவே பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
சரி, ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளது என்பதை எப்படி அறிவது? என்ற கேள்வி இன்னும் பலரது மனதில் இருக்கும். எனவே இப்போது நாம் பார்க்கவிருப்பது, பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளைக் காண்போம். இந்த அறிகுறிகள் உங்களிடம் தென்பட்டால், உடனே அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால், உங்களை ஓமிக்ரான் மிகவும் எளிதில் தொற்றிக் கொண்டு அவதிப்பட வைத்துவிடும்.

பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியின் அபாயகரமான அறிகுறிகள்:
சளி அல்லது இருமல்
எப்போது ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி வலுவிழந்து பலவீனமாக உள்ளதோ, அப்போது வெளிப்படும் பொதுவான ஒரு அறிகுறி தான் சளி அல்லது இருமல். ஏனெனில் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு இவற்றை எதிர்த்துப் போராடும் அளவில் திறன் இருக்காது. மருத்துவ அறிவியலின் படி, பெரியவர்கள் பொதுவாக வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை சளி/ஜலதோஷத்தால் பாதிக்கப்படலாம். அடிக்கடி இப்பிரச்சனையை சந்தித்தால், நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். ஆகவே உங்களுக்கு அடிக்கடி சளி, இருமல் பிடிக்குமானால், நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும் முயற்சியில் உடனே ஈடுபடுங்கள்.

வயிற்று பிரச்சனைகள்
பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் கொண்டவர்களிடம் வெளிப்படும் மற்றொரு அறிகுறி வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பதாகும். அதுவும் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்றவை எல்லாம், ஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பதை குறிக்கிறது.

உடல் சோர்வு
நோயெதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பவர்கள் எப்போதும் மிகுந்த உடல் சோர்வை உணர்வார்கள். ஏனெனில் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலமானது சில நேரங்களில் ஆரோக்கியமான இரத்த செல்களை அழிக்க ஆரம்பிக்கும். இதனால் உடலில் இரத்தத்தில் அளவு குறைந்து தலைவலி, உடல் சோர்வு, மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

அதிக அளவு மன அழுத்தம்
ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் பலவீனமாக இருந்தால் சந்திக்கும் முதல் பிரச்சனை அதிகளவு மன அழுத்தத்தை உணர்வது தான். மன அழுத்தத்தை ஒருவர் நீண்ட காலமாக அனுபவித்து அதை சரிசெய்ய முயற்சிக்காமல் இருந்தால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்திறனைக் குறைக்கும். இதன் விளைவாக தொற்றுக்களை எதிர்த்துப் போராட தேவையான இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் லிம்போசைட்டுகளின் எண்ணிக்கை குறையும். அதிகப்படியான எரிச்சல் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தின் பிரதிபலிப்பாகும்.

காயங்கள் மெதுவாக குணமாவது
பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தால் புதிய தோலை விரைவில் உருவாக்க முடியாது. இதன் விளைவாக காயங்களானது மெதுவாக குணமாகும். எப்போது நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக உள்ளதோ, அப்போது காயம் ஏற்பட்டால் புதிய சருமத்தை வேகமாக உருவாக்க உதவும். எனவே இதைக் கொண்டும் அறியலாம்.

மூட்டு வலி
பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியானது மூட்டு வலி மீண்டும் மீண்டும் ஏற்படுவதைக் குறிக்கிறது. உங்களின் நோயெதிர்ப்பு மண்டலம் நீண்ட காலமாக பலவீனமாக இருந்தால், நீங்கள் வாஸ்குலிடிஸ் என்னும் ஒரு ஆட்டோ இம்யூன் கோளாறு அல்லது தொற்று காரணமாக இரத்த நாளங்களில் ஏற்படும் அழற்சியை சந்திப்பீர்கள். அப்போது உங்களின் மூட்டுக்கள் வீங்கி, அடிக்கடி மிகுந்த வலியை உண்டாக்கும். எனவே மூட்டு வலி இருந்தால், கவனமாக இருங்கள்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எளிய வழிகள்:
* சுகாதாரத்தை தவறாமல் கடைப்பிடியுங்கள்.
* நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.
* தினமும் நற்பதமான ஜூஸ் குடியுங்கள்.
* தவறாமல் உடற்பயிற்சியை செய்யுங்கள்.
* சரியான நேரத்திற்கு தூங்க செல்லுங்கள்.
* அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்க யோகா, தியானம் போன்றவற்றை செய்யுங்கள்.
* உடல்நலம் சரியில்லாதவர்களிடம் இடைவெளியை பராமரியுங்கள் மற்றும் தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்த்திடுங்கள்.
* முக்கியமாக மாஸ்க் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவதை வழக்கமாக கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications