For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! சீனாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஓமிக்ரான் BF.7 இந்தியாவிலும் நுழைந்துவிட்டது.. உஷாரா இருங்க..

BF.7 ஓமிக்ரான் மாறுபாடு மக்களை எளிதில் பாதிக்கிறது மற்றும் மற்ற விகாரங்களை விட வேகமாக பரவுகிறது. கூடுதலாக, தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்கள் என்று பாரபட்சம் பாராமல், அனைவரும் இந்த மாறுபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

|

2020 ஆம் ஆண்டில் தோன்றி 2 ஆண்டுகளாக உலகை நாசப்படுத்திய ஒரு கொடிய வைரஸ் தான் கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸ் தோன்றியதில் இருந்து இன்று வரை இது பலவாறு உருமாற்றமடைந்துள்ளன. அதில் கடந்த 2021 ஆம் ஆண்டில் தோன்றிய கொரோனாவின் பிறழ்வு தான் ஓமிக்ரான். இந்த ஓமிக்ரானிலும் பல பிறழ்வுகள் ஏற்பட்டன. அதில் ஓமிக்ரானின் சமீபத்திய துணை மாறுபாடு தான் BF.7. இந்த மாறுபாடு தான் தற்போது சீனாவில் வேகமாக பரவி அழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

Omicron BF.7 Variant Found In Gujarat; All You Need To Know About The New Omicron Variant BF.7

அறிக்கைகளின்படி, BF.7 ஓமிக்ரான் மாறுபாடு மக்களை எளிதில் பாதிக்கிறது மற்றும் மற்ற விகாரங்களை விட வேகமாக பரவுகிறது. கூடுதலாக, தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்கள் என்று பாரபட்சம் பாராமல், அனைவரும் இந்த மாறுபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய ஓமிக்ரான் BF.7 மாறுபாடு இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் போன்ற பல நாடுகளிலும் நுழைந்துள்ளது. அதுவும் இந்தியாவில் இந்த கொடிய BF.7 ஓமிக்ரான் வைரஸ் தற்போது குஜராத்தில் உள்ள இருவரிடம் கண்டறியப்பட்டுள்ளன.

கொடிய BF.7 ஓமிக்ரான் வைரஸ் தொற்றானது, கடுமையான தொண்டை தொற்றுகள், மூக்கு ஒழுகல், உடல் வலி மற்றும் மிதமானது முதல் அதிக காய்ச்சலை ஏற்படுத்துவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் அறிக்கைகளின் படி, இந்த வைரஸ் தொற்றானது பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்ட வயதானவர்கள், இதய நோய், சர்க்கரை நோய், நாள்பட்ட சுவாச பிரச்சனைகளைக் கொண்டவர்களை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இந்த ஓமிக்ரான் மேல் சுவாச பாதையைத் தாக்குகிறது மற்றும் சிலருக்கு இது நிமோனியாவை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.

BF.7 ஓமிக்ரான் மாறுபாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவைகள்:

* BF.7 என்பது BA.5.2.1.7 என்பதன் சுருக்கம் ஆகும். BA.5 ஓமிக்ரான் மாறுபாட்டின் துணை பரம்பரை தான் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே அதிக தொற்றை ஏற்படுத்தக்கூடியதாக கூறப்படுகிறது.

* இந்த மாறுபாடு வேகமாக பரவும் தன்மையைக் கொண்டது மற்றும் தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்றை ஏற்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.

* இந்த ஓமிக்ரான் BF.7 மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட ஒருவர் 10 முதல் 18 பேருக்கு வைரஸை பரப்புவதற்கு வாய்ப்புள்ளது.

* இந்த மாறுபாட்டின் அறிகுறிகளானது மற்ற ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகளை ஒத்தது. அதில் காய்ச்சல், இருமல், தொண்டைப் புண், மூக்கு ஒழுகல், சோர்வு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை அடங்கும். ஆனால் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால், அது கடுமையான நோயை ஏற்படுத்தும்.

சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த ஓமிக்ரான் BF.7 மாறுபாடு இந்தியாவிலும் நுழைந்துவிட்டதால், பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டு, இனிமேல் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிவது, சுத்தமாக இருப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருப்போம்.

English summary

Omicron BF.7 Variant Found In Gujarat; All You Need To Know About The New Omicron Variant BF.7

Omicron BF.7 Variant Found In Gujarat; All You Need To Know About The New Omicron Variant BF.7.
Desktop Bottom Promotion